எது பெருமை
எது பெருமை
தாலாட்டு பாட்டு
தாயின் தாலாட்டு
காலமும் நேரமும்
எதுவும் வீணாவதில்லை
வீழ்ந்ததெல்லாம் வீணாகிவிடுவதில்லை
வீசி எறிந்த விதைதான் விருச்சமாகிறது
உதிர்ந்த மலர்கள் எல்லாம் வீணாவதில்லை
அவைகள் எல்லாம் வாசனை திரவியமாகிறது
உதிர்ந்த இலைச் சருகுகள் வீணாவதில்லை
அவைகள் விவசாயின் வயலுக்கு எருவாகிறது
விருந்து முடிந்து எரியும் வாழை இலைகள்
பசுக்களுக்கு இரையாகி, பாலை அளிக்கிறது
வீசி எறிந்த விதைகள் தான் இங்கு விருட்சமாக
விண்ணை முட்டி உயரே வளர்கின்றது
முச்சந்தியில் கிடக்கும்முனை ஒடிந்த பேனா
எத்தனை இதிகாசங்களை எழுதியது என்று
எவருக்கு தெரியும்!
விரல் பிடித்து நடக்க விழுந்து எழும் குழந்தைகள் தான்
விண்ணை சுற்றி வரும் விமானத்திற்கு விழிகளாகிறது!
இங்கு
உதிர்ந்தவைகளும்
உயிர் துறந்தவைகளும்
வீழ்வதற்கு மட்டுமல்ல
இன்னொரு ஜென்மத்தை
விசும்பின் கீழே வீழ்வதெல்லாம் மழைதானே !பருவத்திற்கு ஏற்ப காலத்தில் பொழிவதும் மழைதானே !கீழே வீழ்ந்தாலும் தடுத்து நிறுத்துவதும் மனிதன்தானே !மனிதர்கள் வீடு கட்ட என் தடங்களை பலி கொடுத்தேனே !என் உடன் பிறப்புக்களையும் நானே பொழிந்து அழித்தேனேஎன் பாதையில் செல்ல பல வழியில் தடைபட்டு நின்றேனேஅணை கட்டாமல் பல வழிகளில் வீணாய் கடலடைந்தேனேஅந்நியமாய் கேட்பாரின்றி பல வருடங்கள் அழித்தானே !இந்திரனிடம் அனுமதி பெற்று புயலுடன் பொழிந்தேனே !கடுங்கோபத்துடன் மிக்ஜெம் எனும் பெயருடன்சூறையாடினேனேமுடிவில் வழியின்றி எல்லா இடங்களிலும் கொட்டித்தீர்த்தேனேசக்ர வியூகத்தில் அபிமன்யூ போல் நடுவில் மாட்டிக்கொண்டேனே!நான் யாரிடம் முறையிடுவது என நினைத்தேனேநாட்டையே விற்பவன் இந்திரனையே பொம்மையாக்கினானேபணத்தால் எல்லாம் முடியும் என பல வருடமாய் தீர்மானித்தானேநான் யார் பேச்சையும் கேட்பதில்லை என்று சாடினானே !வெளிவரத்தெரியாமல் ஆங்காங்கே தேங்கி நின்றேனேநாட்டுத் தலைவன் என்னையே தந்திரமாய் பழித்துரைத்தானே !நான் கோபப்பட்டுதான், வீட்டையும்.மக்களையும்சுற்றிவளைத்தேனேஎன் வழித்தடங்களை சரிசெய்ய மும்மூர்த்திகளை வேண்டினேனே!ரா.பார்த்தசாரதி
பாரதியே ! மறுபடியும் எழுந்து வா
சமாமெஷ்ஷில் பனித்துளி
சற்றே சிந்தித்துப் பார் தமிழா ! தமிழா !!
காலமும் நேரம்
காலமும், நேரமும் மனிதனுக்காக காத்திராது
கடந்து விட்ட நேரமும் திரும்ப வாராதது
காலத்திற்கு ஏற்ப, எங்கும் நேரம் மாறுபடுமே
நாட்டிற்கு நாடு, மாநிலத்திற்கு ஏற்ப மாறுபடும்
இவை எல்லாம் சூரிய உதயத்தால் மாறுபடுமே
காலத்திற்கு ஏற்ப நாம் வேலை செய்யவேண்டுமே
நேரத்திற்கு தகுந்தாற்போல் மாறுவது நம் கடமை
இதுவே மனிதர்கள் எல்லோருக்கும் பொது உடைமை
கடல் அலையும், நேரமும் மனிதனுக்காக காத்திராது
சந்தர்ப்பம் வரும்போது அதனை நழுவவிடக்கூடாது
காலமும் , நேரமும் பொன் போன்றதன்றோ
அதனை மதித்து போற்றுதல் நம் கடமையன்றோ !
எங்கே சென்றிடும் காலம் ! நம்மையும் வாழவைக்கும் !
எங்கே சமூக நீதி
இதுதான் நல்லாட்சியா ? இதுதான் சமூக நீதியா
நிர்வாணமாக்கி இருவரிடம் கொள்ளை அடிப்பதும்,
கடையில் தேநீர் கேட்டவனிடம் இனத்தினால் ஒதுக்கியதும்
குடிநீரில் மலம் கலந்தவனை கண்டுகொள்ளாமல் இருப்பதும்
மனிதனின் தலை மீது சிறுநீர் கழித்துஅவமானப்படுத்துவதும்,
மாநிலம், நாடு என்றாலும் எல்லோர்க்கும் ஒரே நீதிதான்
தவறு எங்கு நடந்தாலும் அரசு தலையிடவேண்டுமே
இச்சமூக அநீதிக்கு அரசு தண்டனை கொடுக்கலாமே ,
பெண் உரிமை பணத்தை சிலருக்கே கொடுப்பானா !
பெண்கள் இலவசமாக செல்ல ஓட்டை பேரூந்து அனுப்புவானா
காவல் துறையை கைபொம்மையாக்கி நீதி தவறுவானா
எல்லாம் சரியாக நடக்கின்றது என பொய் உரைப்பானா !
மக்கள் ஒரு நாள் தட்டி கேட்பார்கள் என நினைபானா !
கேட்டால் அடக்கு முறை ஒன்றே என தீர்மானிப்பானா !
காதல் நெஞ்சம்
* அன்பே ! ஆருயிரே1..அடிக்கோடிட்டு நீ, சொன்ன வார்த்தைகள்
தமிழனே விழித்திரு எதிர்த்திடு