திங்கள், 29 மார்ச், 2021

 



           

                          நயகராவே  நீ  ஒரு  அருவியா ! நதியா ! நங்கையா !


1.நதியையும்      நங்கையையும்    பற்றி  எழுதாத  கவிஞன் இல்லை  
   நதியினை  காண வரும்  மனிதர்களும்  ஜாதி மதம்   பார்பதில்லை 

2.இறைவன்  படைத்த கவிதை  மனிதன்தானே
   மனிதன் படைத்த  கவிதை, நதியும், நங்கையும் தானே !   
      
3.
 மேகம்  போன்ற மேனியும் ,  இளமைகொண்ட  நங்கைப்போலே 
    மலைமேடு, பள்ளம் மூடி, ஓடுகின்றாய்  நாணத்தினாலே!
 
 4. நதியே  நீயும்  ஒரு  பெ ண்தானோ ?
    அருவி  எனும்  கூந்தலையும் , எழிலையும் காட்டுவதும்  ஏனோ ?

 5. நதியே !  நீ  அருவியாய்  நின்று  புன்முறுவல்   பூக்கின்றாய் 
     நாடி வரும் மனிதனின்  மனதில் ஓர்  தேன்னருவியாய்  வீழ்கின்றாய் !

 6  நதியே  நீ  நடந்தால்  நங்கை !  குனிந்தால்  குமரி யல்லவா !
     எல்லோர்க்கும் என்றும் நீ ஒரு  தாய் யல்லவா !
      

  7.நதியே  நீ  அருவீயாய்  விழுந்து , நதியாய்  ஓடி கடலில் கலக்கின்றாய் 
    நங்கையின்  பிறவியோ என்றும் பாசத்துடன்  வாழ்வில்  கலக்கின்றாள் !

8.  நதியே   நீ  உன்  ஓட்டத்தால்  ஒளி  தருகின்றாய்   !
      நங்கையோ   வாழ்க்கை எனும் நதியில்  ஓளி  பெறுகிறாள் !


9. நதியே   நீ உறவை நாடி கடலில் கலக்கின்றாய்

    நங்கையோ , ஓர்  உறவை  தேடி  மனதில் கலக்கின்றாள் !

10.வெண்ணிற ஆடையணிந்து, வானவில்லை  ஏந்தி நின்றாய் 
      நீலநிற ஆடை அணிந்த  மனிதர்களுக்கு மட்டற்ற  மகிழ்ச்சி  தந்தாய் !

       ஆம்,  நயகரா  நதியே  என்றும் நீ  ஒரு  நங்கைதான் ! 

                                                                                                   ரா. பார்த்தசாரதி 

                       

 



                          CHEERY BLOSSOM
The spring open its gate of Castle!
Flowers blossomed with distinct colors of Dazzle !
Wears on his smiling face and a dream of Spring !
All nature’s gift but mankind makes the rift !
Men may come and men may go,
But the Cherry Blossom Comes on forever!

The Cheery Blossom display for our wish !
It cherish in mind and our thoughts are flourish !
Men may come and men may go,
But the Cherry Blossom Comes on forever !

From the Air and Peak, if we look down the pathway !
It seems to be the line of planted Nosegay !
Men may come and men may go,
But the Cherry Blossom Comes on forever !


R.Parthasarathy.

ஞாயிறு, 7 மார்ச், 2021

Ulaga Makalir dinam




                                                          உலக மகளிர் தினம் , 

        ஆண்டுக்கு ஆண்டு, தேதிக்கு  தேதி ஆயிரம் சுபதினம் 
        அடுத்தவர் நலத்தை நினைப்பவர்க்கே ஆயுள் முழுதும்  சுப தினம் 
       தைப்  பொங்கல் தினம், தமிழ்  வருட பிறப்பு தினம்,
        பிறந்த தினம்,  திருமண தினம், எல்லாம் வந்தாலும் 
        ஒற்றை தினம்  என்பதால் இன்று ஓய்ந்து போகுமோ  மகளிர் தினம்    

        வாழ்ந்தும்   உள்ளிருந்து மனம்,  பாராட்டும் குணம்.
        தோள்கொடுக்கும்  தோழமை ,
        எங்கே என தேடாதே !
        அன்புக்கு அடிபணி, ஆணவம் தகர் தெறி 
         தடைகளை புறம் தள்ளி, தலை நிமிர்ந்து செல் 
         பின்னிறைந்து வழி காட்டு, உள்ளிருந்து திறம் காட்டு 
         பெண் இனத்ததின்  மேன்மையை முன்னிறுத்தும் வழி காட்டு !

        ரா.பார்த்தசாரதி 
          

    

      

         

             

           

           


       

 

தைப் பொங்கல் ஒரு தினம் தான்
தமிழ் வருடப் பிறப்பும் ஒரு தினம்தான்
பக்ரீத் பண்டிகையும் ஒரு தினம் தான்
பிறந்த நாள் கொண்டாட்டமும் ஒரு தினம் தான்
ஒற்றைத் தினமென்பதால்
ஓய்ந்து போகுமோ மகளிர் சக்தி.....

வாழ்த்தும் மனம்
பாராட்டும் குணம்
தோள் கொடுக்கும் தோழமை
எங்கேயெனத் தேடாதே
அன்புக்கு அடிபணி
ஆணவம் தகர்த்தெறி
தடைகளைப் புறம் தள்ளு
தலை நிமிர்ந்து நீ செல்லு
ஏரல் எழுத் தென்றாலும்
தடம் பதித்து முன்னேறு.....

பின்னிருந்து வழி காட்டும்
உள்ளிருந்து திறம் காட்டும்
பெண்ணினத்தின் மேன்மையை
முன்னிறுத்தும் வழி தேடு.....

வெள்ளி, 5 மார்ச், 2021



                           தள்ளாடிய  எழுபது 

நடை தள்ளாடியபடி தட்டி தட்டி நடந்தேன் 
தள்ளாடியபடி  மயக்கத்திலே தவறி வீழ்ந்தேன
நன்கு கைகள்  தூங்கியதால்  வீடு சேர்ந்தேன் 
தூக்கியவர்களும்  சிறுது நேரத்தில் மறைந்தனரே !


 உள்ளிருந்தே  ஓர்  குரல்  காதில் ஒலித்ததே 
 வயதானகாலத்திலே  தனியே  நடப்பது சரியா 
மூலையில் கிடந்தது ஓய்வு எடுக்க வேண்டியதானே 
இங்கு  எல்லோர்க்கும் தொல்லையாய்  இருப்பானே !
 

கத்தியில்லாமல்   நெஞ்சில் குத்திய  வார்த்தைகள் 
கண்  கலங்கி  இமையின் முடியில்  நீர் துளி நனைத்ததே 
பெண் துணையில்லாமல்  ஆணின் வாழ்வு  நரகம் 
துணை இல்லா பெண் வாழ்வு வேலியில்லா பயிராகும் !


பூவோடும்,பொட்டுடோடும்  மறைந்து போனாளே 
என் மனம்   புழுங்குவதை  யார் அறிவார் இவ்வுலகிலே
தாளா  துயரம்  தந்துவிட்டு  என்னை மறந்தாயா 
என் நிலைகண்டு  உன்னிடம் அழைத்துக்கொவாயா !







   

 


             


                 

                        காதலே உன்னோடு வாழ்வேன்

           பட்டாம் பூச்சியாக  மனம்  இருந்தாலும், 
          மலர்விட்டு மலர்,  தா

வ மாட்டேன் !

         தேனிருக்கும் மலராய் நீ இருந்தாலும்,
         காகித பூவினை நான் விரும்பமாட்டேன்!

         கங்கையாய்  நீ இருக்க  என்றும்
        நான் கானலை  தேடமாட்டேன்!

        உனக்காக  பாடலை எழுதிவிட்டு,
       ஊருக்காக அதனை  படிக்கமாட்டேன்!


       உன்னோடு வாழ முடியாமல் போனாலும்,
      உன் நினைவோடு வாழ்ந்திடுவேனே!

      துணையாக நீ  வராமல் போனால்
      என் மனதை விட்டுச்  செல்வேனே!
 
      காதலுக்கா கடல்கடந்து  வேலைக்கு சென்றாலும்,
      என் இதயத்தை உன்னை, நினைக்கச் செய்வேனே !

     காதலால் சிலரது  இதயம் பாதிக்கலாம் ,
     காலம் ஒன்று சேர்ந்தால்  எதையும் சாதிக்கலாம் !

      காதலுக்கு கண் இல்லை என்பான் கவிஞ்சன்
      காதலுக்காக என்றும் கவிதையும் பாடுவான்  காதலன் !
  
      ரா. பார்த்தசாரதி

 



 

                                                  எம்மொழியே  செம்மொழி

இனிய  தமிழ் மொழியே   நமக்கு அமுதம்,
நமக்கு இன்பம் தந்தாலே நல்லமுதம் !
எங்கள்  தமிழ்மொழியே சிறந்த செம்மொழி
அருளாளர்களும், ஆழ்வார்களும், வளர்த்த மொழி !

தமிழுக்கும் அமுதென்றுபேர், என்பார்  பாரதிதாசன்,
தமிழ்  எங்கள் அறிவுக்குத்  தோள் என்பார்,
தமிழ் எங்கள்  பிறவிக்குத்  தாய்  என்பார்,
தமிழையும், தாயையும் புகழாமல்   இருப்பவருண்டோ !

செந்தமிழ் நாடெனும்  போதிலே  இன்பத்
தேன்வந்து  பாயுது  காதினிலே என்றார், பாரதியார்,
செம்மொழி மாநாடு நடந்ததும்  கோவையிலே,
தமிழர்கள்   கவிதை பாடியதும் தமிழ் ஆர்வத்தினாலே !

எங்கும் தமிழ், எதிலும் தமிழ், உலக பல்கலைகளிலும்  தமிழ் 
தமிழ் படித்தவர்களுக்கே தமிழ் நாட்டில் வேலை,
தமிழ் உரையாடலே, நீதிமன்றச்  சபையினிலே,
எம் தமிழ்மொழியும், பெருமைவுறுமே பாரினிலே !

தமிழ் பரவ !தாய்மொழியை வீட்டிலேயே தமிழ் பேசிடுவீர் 
கணினி மென்பொருளால் உலகெங்கும் பரப்பிடுவோமே!
அயல் நாட்டினரிடையே  எம்மொழி தொன்மையென எடுத்துரைப்போமே !
எம்மொழியே ஏற்ற மொழி என நிலைநாட்டுவோமே!

தமிழ், தமிழென  முரசு கொட்டவேண்டாம் !
ஆங்கிலத்தை என்றும் தமிழிலே கலக்கவேண்டாம் !
தமிழிலும்  அறிவியல், உலகவியல்  உண்டு !
பொருளை விளக்கவும் எம்மொழிகே தனித்திறமை உண்டு!

 எளிய நடையினில் எம்மொழியில் எழுதிடவே !
இலக்கணங்கள் புதிதாய் நன்முறையில் தோன்றிடவே !
வெளியுலகில் புதிய சிந்தனைகள் வருவதுண்டு !
அச்சிந்தனையினை விளக்கவும் எம்மொழிக்கு தனிச்சிறப்புண்டு !

ஆங்கிலப் பெயர் பலகையினை தமிழில் மாற்றுவதும் நல்லதன்றோ!
அதுவே தமிழ்நாட்டின் தமிழ்க்கே  ஒரு சிறப்பன்றோ !
தனியார்பள்ளிகளிலும் தமிழ்மொழிக் கல்வி புகுத்திடவேண்டுமே!
அறிவியலிலும்,உலகவியலிலும்  திறனாய்வு செய்திடல் வேண்டுமே!

எம்மொழி, செம்மொழி  எனச்  சொன்னால் போதாது!
ஏற்றமிகு  மாற்றங்கள்  செய்திடல் வேண்டும் !
மாற்றங்கள் செய்ய பள்ளியும்,கல்லூரியும் ஒருமைபடவேண்டுமே !
பாமரனும் படித்து  உவகை  கொள்ளவேண்டுமே !

இலவச நூலகங்கள்  எவ்விடத்திலும் நிலவவேண்டும் !
எம்மொழியே உயர்வென்று பறைசாற்றிட வேண்டும் !
தலைமுறைகள் பல கழிந்து குறைகளைய வேண்டும்.!
எம்மொழியே செம்மொழியென ஆதரிப்பீர் !   வாரீர் !

ரா,பார்த்தசாரதி

 



                                               உதிரிப்பூக்கள் 


 இறைவனிடத்தில் அர்ச்சனைப் பூக்களாய் வீழ்கின்றோம்
 மனிதனின் இறப்பின் போது காலடியில் மிதிப்படுகின்றோம்
யாரோ இறந்ததிற்கு  எங்களை மிதித்து கொல்கின்றனரே
மணமானாலும், பிணமானாலும் கடைசியில் வீசி எறிகின்றனரே !

நாங்கள் பல நிறங்களில் இருந்தாலும் எங்களுக்கு ஜாதி இல்லை
எங்களின் மணம் பலவிருந்தாலும் எங்களிடத்தில் போலி இல்லை
உதிரிப்பூவானாலும், மாலையானாலும் எங்கள் அழகே ஒரு கவர்ச்சி !
எங்களை சூடியவர்களும்  அடைவதோ பெருமிதத்தில் மகிழ்ச்சி ! 

மணமகன், மணமகள் கழுத்தில் அடையாளமாக தொங்குகிறோம்
அரசியல் தலைவர்கள் கழுத்தையும் பகடிற்காக  அலங்கரிக்கின்றோம்
பாலியில் செய்யும் வேசியும் எங்களால் தன் அழகினை காண்பிக்கிறாள்
எங்கள் நறுமணத்தை உடலுக்கு நறுமண திரவியமாய்  பூசுகிறார்கள் !

பல உதிரிப்பூக்கள் நாறுடன் சேர்த்து  பூமாலையாகிறது
சேர்த்து வைக்கும்  நாறுக்கு என்றும்  மதிப்பில்லை
 உறவையும், நட்பையும் அறியாதவனுக்கு உயர்வில்லை 
நல்லதிற்கும், கெட்டதிற்கும் பயன்படுகிறோம் என்று அறியாமலில்லை!

முதலிரவில் படுக்கையில் கிடப்போம்,மறுநாள் குப்பைத் தொட்டியில்  
காகித பூவிற்கு தரும் கவர்ச்சி  எங்கள் உண்மை தன்மைக்கு கிடைப்பதில்லை
எங்களை மிதிப்பவர்களே  நீங்கள் இறந்தால் மீண்டும் பிறப்பதில்லை
நாங்கள் உதிர்வதே மீண்டும், பிறப்பதற்குத்தான் என்று  எவருமறியவில்லை

ரா.பார்த்தசாரதி