வெள்ளி, 23 டிசம்பர், 2016

Yesanaathar Pesuginraar




  யேசுநாதர்  ஒரு தேவமைந்தன்


உங்கள் பாவங்களை எல்லாம்
நானே சுமக்கிறேன் என்றான்
மனிதகுலத்தின் மாபெரும்
பெருந்தகையாளன் தேவமைந்தன்
முள்ளில் ஓர் கிரிடம்
முதுகிலோர் சிலுவை அறைந்து
உண்மையை மெளனிக்க வைக்க
உன்மத்தர் செய்த சித்திரவதைகள்
றியாமல் செய்கின்றார் மூடர்
ஆண்டவரே அவரை மன்னித்து விடும்
அன்பின் புதல்வன் அன்போடு வேண்டினான்
அண்டசராசரத்தின் ஆண்டவனிடத்தே
தம்மைத் தாமே அறிந்திட வேண்டித்
தன்னைத் தானே மெழுகாய் உருக்கிய
தனியொரு தேவ மைந்தன்
தவப்புதல்வனாய் மண்ணில் உதித்திட்டான்
நல்லதோ மக்களாய் நாளும் வாழ்ந்து
நன்மைபல புரிந்திட்டே வையகத்தில்
வேதநாயகன் இயேசு உரைத்திட்ட
அருள்மொழிகளை உள்ளத்தே நிறுத்திட்டு
நத்தார் புனிததினமதில் அனைவரும்
நலமாய் வாழ்ந்திட அன்பு வாழ்த்துக்கள்
அனைத்து அன்பு உள்ளங்களுக்கும்
புனித நத்தார் வாழ்த்துக்கள் ஆயிரம்!

ரா.பார்த்தசாரதி

புதன், 21 டிசம்பர், 2016




                                                             வி. .சம்பத்ராகவன்
                                                      சதாபிஷேக வாழ்த்து மடல்

 இடம்: டபிள்யு  68 அண்ணா நகர்                                                     26 டிசம்பர் 2016
               சென்னை -600 040

            கடல்மங்கலம், வேணுகோபாலன் அருளால் ஓர் சதாபிஷேக விழா
            ஆயிரம் பௌர்ணமி கண்ட  திரு.சம்பத் ராகவன் அவர்களுக்கு 
                                                                                                                    சதாபிஷேக விழா!
 

            அகவை அறுபதும், எண்பதும் என்றும் பெருமை உடையதன்றோ
            இவ்விழாவை தலைமையேற்று நடத்தும், பத்மாவும்,ஸ்ரீலேகாவும்
                                                                                           பெருமைக்குரியவர்களன்றோ !

            ஆடம்பரமின்றி  சாதாரண  மனிதனாய்  திகழ்வார்
            உடல்நலத்தை பேண நாட்டு மருந்துகளை நாடுவார்                  

            இன்றும் முதுமையை இளமையாக்கி  விளையாடுவார்
            சிக்கனத்தின்  சிகரம்,   ஆடம்பரத்தை விரும்ப மாட்டார் !

            தனக்காக  வாழாது  பிறருக்காக வாழும்  முதுமை
            என்றும் உறவுக்கும், பாசத்திற்கும் ஏங்கும் தனிமை!


            எட்டு எழுத்தில் (சம்பத்ராகவன்)  என்றும்  ஆறு  அடங்கும்
            கனகவல்லி  என்ற பெயரும் மனதில் நிற்க்கும் !

            உழைத்து  களைத்தவர்க்கு  உறவுக்கரம்  கொடுத்திடவேண்டும் 
            அவர்களை சந்தித்து  முடிந்தவரை நலம் விசாரிக்க வேண்டும்!

            உலகில் பிரிக்கமுடியாது  பந்தமும்  பாசமும் 
            உலகில் ஒதுக்க முடியாதது  நட்பும், உறவும் !

           வேற்றுமையில் ஒற்றுமை என்றும்  காண்போம்            
            மகிழ்வுடன் விருந்துண்டு  ஆசி பெற்று விடை பெறுவோம் ! 

===============================================================
            

      ஸஹஸ்ர சந்த்ர தர்சனம் கண்டு
           
சதாபிஷேக சாந்தி செய்து கொண்ட
           
ப்ரம்ஹ ஞான லக்ஷ்யவாதிகளுக்கு
​​          வாழ்த்த  வயதில்லை என்றாலும்
      அனந்த கோடி நமஸ்காரங்களை தெரிவித்துக்கொள்கிறேன்1

        .
           ரா.பார்த்தசாரதி
=============================================================== 

         .
                   
                

ஞாயிறு, 18 டிசம்பர், 2016

மனித நேயம்






                                                                 மனித நேயம்

                      மக்களிடம் அரிதாய்  கிடைப்பது  மனிதநேயம்
                       ஒரு சிலரே அரிதாய்  கொண்டுள்ள  குணம்
                       மனித நேயத்தை  என்றும்  காட்டிவிடு
                       அனைத்தையும் உன் வசமாக்கிவிடு !

                         உலகில் முடியாதது  என்பது  எதுவுமில்லை
                         துணிந்த  பின் துயரம் கொள்ள தேவையில்லை
                         சரியான  செயலை  செய்யும் பயம் கொள்ளவேண்டாம்
                         வழியில் பல இடர்கள் வந்தாலும் நம்பிக்கை இழக்கவேண்டாம் !

                         குறைகளை மட்டும் பார்ப்பவர்களுக்கு நிறைகள் தெரியாது
                         புறம் கூறுபவனுக்கு  மனிதனின் மதிப்பு தெரியாது
                         எதிலும் நம்பிக்கையுடன் செய்தால் வெற்றியுண்டு
                         மனிதருள்  மாணிக்கமாய்  திகழ்பவர்களுமுண்டு !

                        பகைமை என்பது பொல்லாதது, நல்லவனிடம் அது இல்லாதது
                        மறந்தும் பிறருக்கு  கேடு விளைத்தல்  என்றும் கூடாது
                        உலகத்தை  பொது உடமை கருத்தினை விதைக்கவேண்டும்
              ஜாதி, இனம்  தவிர்த்து, வேற்றுமையில் ஒற்றுமை ஓங்கவேண்டும்

              அனுபவத்தை  காட்டும் பாடமே மிகச்  சிறந்தது
               அன்பையும், ஒழுக்கத்தையும்  நாம் கடைபிடிக்கவேண்டும்
               அன்பை காட்டி, பகுத்துண்டு வாழும்  எண்ணம்  வேண்டும்
               வாழவில் நன்மை செய்வதையே உயர்தந்தாக கருதவேண்டும் !

               ரா.பார்த்தசாரதி
               
                       

புதன், 7 டிசம்பர், 2016

பணத்தின் மறுபக்கம்




                                                  பணத்தின் மறுபக்கம்

             பொருள் இல்லார்க்கு இவ்வுலகம்மில்லை
             அருள் இல்லார்க்கு  அவ்வுலகம்  இல்லை .

             ஒருபக்கம் மனிதன் பணத்தை தேடி அலைகிறான்
             மறுபக்கம்  ஊதாரித்தனமாக பணத்தை செலவழிக்கின்றான்

            பணம் வாழ்க்கைக்கு தேவை, அதுவே வாழ்க்கையாகாது
             பணம் இருப்பவனுக்கு குணம் இருக்காது

             காதலன் அன்று ரோஜாவை காட்டி காதலை வெளிப்படுத்தினான்
             இன்றோ காதலன் பர்ஸை காட்டினால்தான் காதலி காதலிக்கின்றாள் !

             பணத்தை தேடுபவன் மனஇறுக்கமும்,நிம்மதியின்றி தவிக்கின்றான்
             பணமில்லாதவன் சமூகத்தில் தாழ்ந்தவனாய் காட்சியளிக்கின்றான்

             பணமே  எல்லாவற்றிற்கும் ஆதாரமாய்  காணப்படுகின்றதே
             பணமின்றே எதையும் நம்மால் செய்ய முடியாமல் தவிக்கின்றதே

             பணம் செல்லாமல் இருந்தபோது, மக்கள் பட்ட பாட்டை
             அரசாங்கம்  கருத்துவதோ கருப்புப்பண  வேட்டை

             பணப்புழுக்கம்  இல்லாமல் மக்களின் திண்டாட்டம் ஒரு பக்கம்
            அரசாங்கம்  கருப்பு பண வேட்டையோ நடத்தியது மறுபக்கம் !

             காசேதான் கடவுளப்பா ! இது மனிதனுக்கும் தெரிந்ததப்பா !
             கைக்கு கை மாறும் பணமே, உன்னை கைப்பற்ற நினைக்குத்தப்பா !

             பணமிருந்தால்  சொந்தமில்லாதவை கூட  சொந்தமாகும்
             பணமில்லையென்றால் சொந்தமும் உறவும், விலகி போகும்
                

             ரா.பார்த்தசாரதி

             
             

             

திங்கள், 5 டிசம்பர், 2016

புரட்சித் தலைவி ஜெயலலிதா




                                                        புரட்சித்  தலைவி ஜெயலலிதா

                புரட்சித் தலைவி,  புரட்சியுடன் தமிழகத்தில்  செயலாற்றினார்
               சமூகத் திட்டங்கள் பல செய்து மக்கள் மனதில் குடிகொண்டார்
               ஏழை மக்களுக்கு நியாய விலையில் உணவு வழங்கினார்
               தமிழகத்தை சிறப்புடன் ஆட்சி புரிந்து, நற்பெயருடன் திகழ்ந்தார்
               புதுமை திட்டங்கள் புகுத்தி ஏழைகள் மனதில் இடம் பிடித்தார்
               எச்செயலையும் துணிவுகொண்டு ஆளுமையுடன் செயலாற்றினார்
               தமிழ் நாட்டின் சிறந்த முதலமைச்சர் என போற்றப்பட்டார்
               அயல்நாட்டுத் தலைவர்களும் மெச்சத்தகும்படி விளங்கினார்
               அம்மா  என்று எல்லோராலும், தமிழகத்தில் கொண்டாடப்பெற்றார்
               அம்மா மறைந்தாலும் , அவர் புகழ் என்றும் மறையாது !

                 ரா. பார்த்தசாரதி  

ஞாயிறு, 4 டிசம்பர், 2016

புத்தாண்டே வருக 2017




                                   புத்தாண்டே  வருக  2017

கதிரவன் குணதிசையில் பன்முகமாய்  உதித்தான் ,
புலரும் புத்தாண்டை புதிதாய் உருவமெடுதான் 1

பூமியெங்கும்  அமைதியே ஆட்சியாக அமையாத புத்தாண்டே ,
மண்ணில் விழும் மழைத்துளியும், விண்ணில் வீசும் காற்றும் 
யாவருக்கும்  பொதுதானே புத்தாண்டே !

நதியால் இணைந்த  மாநில மக்கள் 
அவலம் அழிந்து போகாதோ  புத்தாண்டே !

எவர் ஆட்சி செய்யவரினும் நல்ல எண்ணத்துடனே 
மக்களுக்கு நல்லதை செய்ய வேண்டும் புத்தாண்டே !

தீவிரவாதமும், லஞ்சமும், கருப்பு பணமும் ஒழியாதோ 
மக்கள் மனதில் நிம்மதி ஏற்படாதோ !

சுயநலங்கள்,  சூழ்ச்சிகள்  சுவடு தெரியாமல்
அவனியில்  அழிந்து போகாதோ  புத்தாண்டே !


நாட்டுக்கு நாடு, சமாதனம்  மட்டும் ,
தானமாய்   கிடைக்காதோ புத்தாண்டே !


ஆட்சியும்  அதிகாரமும் ஏழையின்
ஏக்கத்தை  தீர்காதோ  புத்தாண்டே !


சுயநலமற்ற ஆட்சியாளர்களும்,அரசியல்வாதிகளும் தோன்றமாட்டார்களோ 
நாட்டிற்கு நன்மை ஏற்படுத்தமாட்டார்களோ !

பூமியெங்கும் அமைதி மட்டும் 
ஆட்சி   புரியாதோ  புத்தாண்டே

வெள்ளி, 2 டிசம்பர், 2016

Thoole and Kuzhnthaiyum




                               துயிலெனும் தூக்கம் –
இறைவன் நமக்களித்த இலவச பரிசு– தூக்கம்
இமைகள் மூடி நமக்குள் நாமே தொலைய கிட்டும் சுகம்
துயிலின் முடிவு விழிப்பா இல்லை
விழிப்பின் முடிவு துயிலா -இது
இயற்கை நமக்கு விடும் விடுகதை.
இரண்டும் இருளும் ஒளியுமாய் ஓயாமல்
நம்மைச் சுற்றி உலா வரும் உண்மை
துயில்லில்லா வாழ்வு துயரமே அது போல்
விழிப்பில்லா வாழ்வும் அதி துயரமே
அள்வோடு கொள்ளும் துயிலும் விழிப்பும் கொள்ள‌
வாழ்வும் வளமாகும் என் நாளுமே
பொய்த் தூக்கம், பெருந்தூக்கம், அரைத்தூக்கம்
ஆழ் நிலைத்தூக்கம் பகல் தூக்கமென பல வகை உண்டு
தூங்காது தூங்கி இருக்கும் நிலையோ
மெய்யடியார்கள் கண்ட கலை..
மானிடர் கொள்வது அறியா துயில் ஆனால்
மாதவன் கொண்டது ஆலிலையில் அறிதுயில்
ஆழ்துயிலில் துளிர் விட்ட அரிய் சிந்தனைகளே
அறிஞர்கள் கண்ட அரும் பெரும் கண்டு பிடிப்புகள்
அறியா பருவம் வரை வந்த ஆழ்ந்த தூக்கம்
பருவம் வர வர பறப்பது ஏனோ
இனி வரம் ஒன்று கேட்கிறேன் இறைவா!
வரும் நாட்களில் குழந்தையைப் போல் தூங்கவே