வியாழன், 5 ஜூலை, 2018

Nayaghara Nathiye




                          நயகராவே  நீ  ஒரு  அருவியா ! நதியா ! நங்கையா !

1.நதியையும்      நங்கையையும்    பற்றி  எழுதாத  கவிஞன் இல்லை  
   நதியினை  காண வரும்  மனிதர்களும்  ஜாதி மதம்   பார்பதில்லை 

2.இறைவன்  படைத்த கவிதை  மனிதன்தானே
   மனிதன் படைத்த  கவிதை, நதியும், நங்கையும் தானே !    
       
3.
 மேகம்  போன்ற மேனியும் ,  இளமைகொண்ட  நங்கைப்போலே 
    மலைமேடு, பள்ளம் மூடி, ஓடுகின்றாய்  நாணத்தினாலே!
  
 4. நதியே  நீயும்  ஒரு  பெ ண்தானோ ?
    அருவி  எனும்  கூந்தலையும் , எழிலையும் காட்டுவதும்  ஏனோ ?

 5. நதியே !  நீ  அருவியாய்  நின்று  புன்முறுவல்   பூக்கின்றாய் 
     நாடி வரும் மனிதனின்  மனதில் ஓர்  தேன்னருவியாய்  வீழ்கின்றாய் !

 6  நதியே  நீ  நடந்தால்  நங்கை !  குனிந்தால்  குமரி யல்லவா ! 
     எல்லோர்க்கும் என்றும் நீ ஒரு  தாய் யல்லவா !
      

  7.நதியே  நீ  அருவீயாய்  விழுந்து , நதியாய்  ஓடி கடலில் கலக்கின்றாய் 
    நங்கையின்  பிறவியோ என்றும் பாசத்துடன்  வாழ்வில்  கலக்கின்றாள் !

8.  நதியே  !  நின் அணையினால்  மின் சக்தி    தருகின்றாய்   !
      நங்கையோ   வாழ்க்கை எனும் நதியில்  ஓளி  பெறுகிறாள் !


9. நதியே   நீ உறவை நாடி கடலில் கலக்கின்றாய்

    நங்கையோ , ஓர்  உறவை  தேடி  மனதில் கலக்கின்றாள் !

10.வெண்ணிற ஆடையணிந்து, வானவில்லை  ஏந்தி நின்றாய் 
      நீலநிற ஆடை அணிந்த  மனிதர்களுக்கு மட்டற்ற  மகிழ்ச்சி  தந்தாய் !

       ஆம்,  நயகரா  நதியே  என்றும் நீ  ஒரு  நங்கைதான் ! 

                                                                                                   ரா. பார்த்தசாரதி