காதல் நெஞ்சம்
* அன்பே ! ஆருயிரே1..அடிக்கோடிட்டு நீ, சொன்ன வார்த்தைகள்மாக்கோலம் அல்ல , என் மணத்தினின்று அழியாதவைகள் !
* காட்சி அளிக்கும்படி கரும்பலகையில் எழுதி வைச்ச காதல் அல்ல !
துடைப்பான் கொண்டு துடைப்பதற்கு முயல்வது நல்லது அல்ல !
* ஒப்பந்தம் போட்டு உண்டானது இல்லை உன் நினைவுகள்
உடைந்து போவதற்கு! இது கண்ணாடி பாத்திரம் அல்ல !
*என்னை நீ மறந்து விடு' என்று சொல்லும் போது தான்
ஊற்று நீராய் சுரக்கிறது உன் நினைவுகள் இல்லா உலகில் !
உன்னுடன் மயங்கி நின்றேன் உள்ளதால் நெருங்கி வந்தேன்
என்னுயிர் காதலி ! என்னுயிர் தேவதையே என்பேன் !!
உன் நினைவுகளோ, நிம்மதி இல்லாமல் என் மனதை வாட்டுகிறது !
* என் எழுத்தாணிக்கும் இயலுவதில்லை உன் நினைவின்றி எழுதத் தொட்ங்குமா !
நான் எழுதுவது கடிதம் அல்ல ! என் நெஞ்சிம் உன் பெயரை சொல்லுமா !
தொட்டாசிணுங்கி போல் உன் மனம் சட்டென்று மூடி கொள்ளுமே
உன் மனம் மூடினாலும், உன் இதயம் பட படக்குமே !
என் நினைவுகள் சிந்திப்பதே இல்லை என்னை தந்து விட்ட பிறகு !
* மறந்து விடுவதற்கோ மறைப்பதற்கோ...மரணம் ஒன்றே மார்க்கம்!
* அதுவே உனக்கு சொர்க்கம் எனில்,மகிழ்ச்சியாய் ஏற்பேன் உன்நினைவோடு !
* அதுவே உனக்கு சொர்க்கம் எனில்,மகிழ்ச்சியாய் ஏற்பேன் உன்நினைவோடு !
ரா.பார்த்தசாரதி
*
*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக