திங்கள், 30 டிசம்பர், 2013

puthaandu

                                         புத்தாண்டில்  ஒற்றுமைப் பூக்கள் மலராதோ!
                                 

*புலரும் பொழுதாய்
புத்தொளி பரப்பும்

புத்தாண்டே
...

* பூமியெங்கும்
அமைதி மட்டும்

ஆட்சி புரியாதோ

புத்தாண்டே
!

* மண்ணில் விழும்
மழைத்துளியும்

விண்ணில் வீசும்

காற்றும்

யாவருக்கும்

பொதுதானே

புத்தாண்டே
!

* நதியால்
இணைந்த

மாநில மக்கள்

அணையால் பிரியும்

அவலமும்

அமிழ்ந்து போகாதோ

புத்தாண்டே
!
* சுயநலங்களும்
சூழ்ச்சிகளும்

சுவடு தெரியாமல்

மறையாதோ

புத்தாண்டே
!










* நாட்டுக்கு நாடு
சமாதானம் மட்டும்

தானமாய் கிடைக்காதோ

புத்தாண்டே
!

* தேசங்களுக்கிடையே
பிரிவினை

முட்கள் சிதைந்து

ஒற்றுமை பூக்கள்

மலராதோ

புத்தாண்டே
!

* ஆட்சியும்
அதிகாரமும்

ஏழைகள்

ஏக்கம் தீர்க்காதோ

புத்தாண்டே
!

* பூமியெங்கும்
அமைதி மட்டும்

ஆட்சி புரியாதோ

புத்தாண்டே
!



R.Parthasarathy

வியாழன், 26 டிசம்பர், 2013

Mr.Mohan

                                     ஆர். மோகனின் 64 காம்  ஆண்டு விழா
                
இன்று  சவேரா ஹோட்டலில்  ஓர்  பிறந்தநாள்  மேடை
திரு. மோகனின்  64 காம் ஆண்டு விழா மேடை !

அகவை அறுபத்து நான்கும்,  ஆய கலைகள் அறுபத்து நான்கும்
                                                                                                       சிறப்புடையதன்றோ  !
இவ்விழாவை தலைமையேற்றி நடத்தும் மகன்களும், மருமகள்களும்
                                                                                      பெருமைக் குரியவர்களன்றோ ! 

இந்திய பிஸ்டனில்  வைஸ் ப்ரெசிடெண்டடாக  இருந்து ஒய்வு பெற்றவரே
 நிறுவனமே அவர் திறமை கண்டு பகுதி நேர  கன்சல்டண்டாக வேலை
                                                                                                                      அளித்தனரே !

மூர்த்தி சிறிதெனினும் ,  கீர்த்திப்  பெற்றார் 1
திறமையுடன் கடினமாக உழைத்து புகழ் பெற்றார் !

வாழை  தன்  கன்றுகளை  விட்டுப்  பிரிவதில்லை 1
இருமகன்களும்  தந்தை  தாயை  விட்டு பிரிவதில்லை !

குடும்பம் ஒரு கதம்பம் , குடும்பம்  ஒரு பல்கலைகழகம்,
குடும்பத்தை , ஆணிவேர் போல் தாங்கும் பரந்த மோகன் உள்ளம் !

காலமும் , கோலமும்  என்றும் மாறும்,
கணவன், மனைவி உறவே  என்றும் நிலைத்து வாழும் !

கணவன்  என்றாலே கண்ணை போன்றவனாகும்,
அவன் வழியே உலகை காண்பவள் மனைவியாகும் 1

ஆயிரம் கைகள் மறைத்தாலும், ஆதவன் மறைவதில்லை,
ஆயிரம் உறவுகள் இருந்தாலும், மனைவி, கணவனை மறப்பதில்லை !

மூன்று எழுத்திற்கு  ஓர்  சிறப்புண்டு ,
முத்தமிழ்  எனும்  பெயருண்டு !

மோகனை கைப்பிடித்த சாந்தாவிற்கு  மூன்று எழுத்து ,
சாந்தவை கைப்பிடித்த  மோகனுக்கும்  மூன்று எழுத்து !

உலகில்  பிரிக்க முடியாதது  பந்தமும், பாசமும்,
உலகில் பிரிக்க முடியாது  நட்பும், உறவும் 1

உற்றாரும், உறவினரும்  ஒன்று கூடி விருந்துண்போம்
திரு மோகன், திருமதி சாந்தாவின்  ஆசி பெறுவோம் !



                                                                   
.
                                                                                       .