எதுவும் வீணாவதில்லை
வீழ்ந்ததெல்லாம் வீணாகிவிடுவதில்லை
வீசி எறிந்த விதைதான் விருச்சமாகிறது
உதிர்ந்த மலர்கள் எல்லாம் வீணாவதில்லை
அவைகள் எல்லாம் வாசனை திரவியமாகிறது
உதிர்ந்த இலைச் சருகுகள் வீணாவதில்லை
அவைகள் விவசாயின் வயலுக்கு எருவாகிறது
விருந்து முடிந்து எரியும் வாழை இலைகள்
பசுக்களுக்கு இரையாகி, பாலை அளிக்கிறது
வீசி எறிந்த விதைகள் தான் இங்கு விருட்சமாக
விண்ணை முட்டி உயரே வளர்கின்றது
வீணாவதில்லை துாக்கி எறியப்பட்டது துடைப்பம் தான்...
எனினும எவ்வளவு துாசிகளைஉதிர்ந்த துவம்சம் செய்தது
என்று எண்ணி பார்க்கும் இதயம் எத்தனை இருக்கிறது !
முச்சந்தியில் கிடக்கும்முனை ஒடிந்த பேனா
எத்தனை இதிகாசங்களை எழுதியது என்று
எவருக்கு தெரியும்!
விழுந்து, வெடித்து மரணித்த மழைத் துளிகளின்
மகிமையில் தான் உலகம் தன் வதனத்தை
அலங்கரித்துக் கொள்கிறது!
மகிமையில் தான் உலகம் தன் வதனத்தை
அலங்கரித்துக் கொள்கிறது!
விரல் பிடித்து நடக்க விழுந்து எழும் குழந்தைகள் தான்
விண்ணை சுற்றி வரும் விமானத்திற்கு விழிகளாகிறது!
உயிர் துறந்து, உதிர்ந்து விழுந்த சருகுகள் தான்
உலகம் உயர்த்தும் விளை நிலத்திற்கு வளம் சேர்க்கிறது!
உலகம் உயர்த்தும் விளை நிலத்திற்கு வளம் சேர்க்கிறது!
இங்கு
உதிர்ந்தவைகளும்
உயிர் துறந்தவைகளும்
வீழ்வதற்கு மட்டுமல்ல
இன்னொரு ஜென்மத்தை
வெல்வதற்கே என்று எண்ணுங்கள் !
ரா.பார்த்தசாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக