வெள்ளி, 16 மே, 2014

வருங்கால பிரதமர் மோடி

                                                           பிரதமர்  மோடி


உண்மையை  உரைத்து,   ஊழலை கண்டித்து,
கடமையுடனும் , கண்ணியத்தை  கடைபிடித்து ,
தொண்டுபுரியும்,  தொண்டனாகவும் ,
மக்களுக்கு  சேவை   புரிவதற்கும்

மக்களே  தங்களுக்காக
தேர்ந்தெடுத்த  தானை தலைவன் 

மோடியை  பிரதமராக  வருக, வருக, என வரவேற்போம் !

வியாழன், 15 மே, 2014

ஒரு நாள் போதுமா?


.
                                                 
                                                        ஒரு நாள் போதுமா 


அன்பு ஊற்றுக்கு  இன்று  அடையாள  தினம்.
அதுவே  அன்னையரை  வாழ்த்தும்  தினம் ,
அடுத்த  தலைமுறை உருவாக்கிய  அணங்கு,
அரும்பணி  ஆற்றிய  அன்னையெனும் தெய்வம்.
.
மங்கல  நாண்   அணிந்த   முதல்  நாளாக 
சுற்றத்தையும், தன் வாரிசுகளை  பேணும் பெண்ணாக,
வித விதமான வினாக்களுக்கு  விடையளிக்கும் தாயாக,
கருக்கொண்ட  நாளில் இருந்து  தாயின்  உருவமாக 

ஐயிரண்டு    திங்கள்  அடிவயிற்றில்   காத்து,
சிசுவின்  செல்ல  உதைகளை  நினைத்து,
சுகமாய்  உள்வாங்கி  தழும்புகள் பதிந்தாலும்,
பிரசவதுயருற்று, குருதியை  பாலாகப்  பொழிந்தாலும்,

ஈன்று எடுத்த   தாயை  இருகரம்  கூப்பி 
வணங்குதல்  இயல்பே  ஆனாலும் , நாம் 
வணங்குவதற்கு  ஒரு நாள் போதுமா ?

ரா.பார்த்தசாரதி

திங்கள், 12 மே, 2014

வாஷிங்டனில் மழைத்துளி


                                             வாஷிங்டனில்  மழைத்துளி


1.  எங்களை  வரவேற்றது  வாஷிங்டன் DC

    பன்னிர்துளிஎன தெளித்தது  பனித்துளி,


    சற்றே  தயக்கமுற்றோம் , நடுக்கமும்  அடைந்தோம்,


   சம்பல்எரினகரின் ( ashburn ) மழைதுளிக்கா ?   பனித்துளிக்கா ?


2.  இன்று  வசந்தத்தின்  வாசலில் நிற்கின்றோம், 

    மலர்கள் பலநிறங்களில்  மிளிர்வதை கண்டோம்,

    எங்கள்  எண்ணத்தில் ஓர்    மனநிறைவு  கொண்டோம்,

    எங்கள்   எண்ணத்தில் புத்துணர்ச்சி கொண்டோம்.


3. பூத்து  குலுங்கும் புதுமலர்கள்  அசைய,  

   புதிதாய்  தளிர்ந்து, புன்னகை  புரிய,


    மகிழ்ச்சியில்  நாங்கள்  பூரிப்பு  அடைய,

    வரவேற்றோம்  வசந்தமே   வருக, வருக  என !

   


                                                                                          ரா.பார்த்தசாரதி

புத்தாண்டே மின்னலென மறைந்தாயா



        புத்தாண்டே  மின்னலென  மறைந்தாயா


 PUTHANNDAY !     MINNALYENA   MARAINTHAYA  !


PUTHANNDAY     YENA   POLIVUDAN    AZAIKKAVA ?

PUVIENIL   VARUM   MUN   THUYAR  THUDAIKKAVA ?

NATTILL    ULLAVARKALIN    NALAM  ARIYAVA?

NANMUGUN    PADAIPPAI   PAZHETHEERKAVA?



THEENDAMAI     THEEMAI   YENA   KARUTHI   OZHIKKAVA?

THEEVIRAVATHATHAI    THEE   YEANA   KARUTHI   ODUKKAVA?

SAMAIYA   NERIKALAI   VALARKKAVA?

SAMIYARKALUKKU      CHAVUKKADI   KODUKKAVA?



PUVIYENIL    MANITANIN    THUYAR   ARINTHAVANAI

PULLIN    MELULLA   PANITHULIYOI   THONRINOI

TAMILNADDU   MAKKAL    MANAM  PUNPATTATHALAY

MINNAL   YENA   THONRI,  MINNAL  YENA  MARAINTHAYA !


                                                        R.PARTHASARATHY

சந்தோஷம் என்றும் நம் பக்கம்



      சந்தோஷம்  என்றும்  நம்  பக்கம்

The Caption :  Santhosham Enrum Num Pakkam !!

    Santhoshamthanay    Manithanukku    Paathi    Palam !

    Athu   ILLAIYAIYENIL   Manithankku   Yethu   Palam !

    Santhoshamthane   Naam   Vazhgaiel   Theyduvathu !

    Eppazhuthum    Ellor     Nenchukullay      Oduvathu !

    Pothummena  Mannam  Irunthal   Thanay   Varuvathu !

                                AAM

    Suriyanai    Kandal     Thamarai
    Santhoshathudan    Malarithuthan     Pazhakkam

  Karmukilkal   Thirandu   Vanthu
  Santhoshathudan   Mazhi   Thanthuthan  Pazhakkam,

  Mazhaii Kandal  Myilukku
  Magizchiyudan   Adithan   Pazhakkam

  Kattil ulla  Koyilkko
  Santhoshathudan   Enemaiyakha   Koovitthan   Pazhakkam


 Kettaithathai     Manathir   Kondu
 Nattappavai     Nanmaikay   Yena   Thelinthal
 Vazvil Santhosham  Enrum  Nam  Pakkam.

வாழ்க்கை ஒரு வரம்!



வாழ்க்கை ஒரு வரம்!

அனைவருக்கும்
அளிக்கப்பட்டிருக்கும்
அற்புத வரம்
அவரவரின் வாழ்க்கை!

பிழைக்க வழியில்லையென
பிதற்றுபவன்
உழைப்பை உதாசீனப்படுத்துகிற
உதவாக்கரை!

உழைக்கத் தெரியாதவனுக்கு
என்றும்
பிழைக்கும் வழி தெரிவதில்லை!

வாழ்க்கைச் சுமைகளை
பாரங்களாய் எண்ணி
ஓரமாய் ஒதுங்க நினைப்பவன்
துன்பச் சுமைகளை
தோள்களில் ஏற்றி
தொலை தூரம் சுமக்கிறான்!

வாழ்க்கையை
வரமாய் எண்ணி
வாழ்பவனுக்கு
வறுமைக் காலங்கள் கூட
வசந்த காலங்களாய்
வரவேற்பு கம்பளங்கள் விரிக்கும்

பெருங்காற்றிலும்
அசையாது நிற்கும்
மண்ணின் மலைத்தொடர் போல்
பெருஞ்சோதனைகளிலும்
மனத்திடமே
எதிர்கால மகிழ்ச்சிக்கு
மன்றம் அமைத்து
தென்றல் வீசும்!

விதையை
விருட்சமாக்கும்
வித்தையைக் கற்றுக் கொள்பவனே
வித்தகக் கலைஞனாய்
வியாபிக்கிறான்!

தன்னம்பிக்கையெனும்
மூன்றாம் கையை
தக்க வைத்துக் கொண்டால்
தாராளமாய் வாய்ப்புகள்
தக்க சமயத்தில்
உன் தலைக்கு
மாபெரும்
மகுடம் சூட்டும்!

லட்சியக் கனவுகள்
கலைந்து போகாமல்
லாவகமாய்
அடைகாக்க
கற்றுக் கொள்ளும் போது
நிச்சயமான வெற்றி
நிதமும் உன்னைத் தேடும்!

மீண்டும் பிறப்பெடுப்பேன்!




மீண்டும் பிறப்பெடுப்பேன்!

* தாயின் ஸ்பரிசத்தை
உன்
அரவணைப்பில் கண்டேன்!

* தந்தையின் நேசத்தை
உன்
கரம் பற்றி
நடக்கையில் கண்டேன்!

* காதலனின் மோகத்தை
உன் காதல் மொழிபேசும்
கண்களில் கண்டேன்!

* கணவனின் கரிசனத்தை
உன்,
"அடியேய்' எனும் ஒற்றை
வார்த்தையில் கண்டேன்!

* யாதுமாகி நின்றாய்!

* கண்ணீருடன்...
கண்ணியத்துடன்...
ஏற்கிறேன் உன்னை...
என்
உயிர் தோழனாய்!

* மீண்டும் பிறப்பெடுப்பேன்!
தாயாய்...
தந்தையாய்...
காதலனாய்...
கணவனாய்...
நீ காட்டும் அன்பினை
தனித்தனியாய் சுகிக்க!

மனிதனின் எண்ணமும் நினைவும்


மனிதனின்  எண்ணமும்  நினைவும்

எண்ணிக் கொண்டிருப்போம்!
* கடலின் சிந்தனையாய்
எழும்பியடங்கும் அலைகள்
உணர்த்துகின்றன
கடலின் வீரியத்தை!

* மரத்தின் சிந்தனையாய்
துளிர்க்கும் இலைகள்
உணர்த்துகின்றன
மரத்தின் பசுமையை!

* நெருப்பின் சிந்தனையாய்
உமிழப்படும்
வெளிச்சமும் வெப்பமும்
நெருப்பின் ஆற்றலை
உணர்த்துவதைப் போல...

* நம் எண்ணங்களே
உணர்த்துகின்றன
நம்மை, நமக்கும்
பிறர்க்கும்!

* நினைவில்
வைத்துக் கொள்வோம்...
சித்திரம் என்பது
வண்ணங்கள் அன்றி
வேறில்லை என்பது போல...
நாம் என்பது
நம் எண்ணங்கள் அன்றி
வேறில்லை என்பதை!

* துயரத்திற்கு
அழைத்துச் செல்லும்
நம் துவண்ட
எண்ணங்களுக்கு மாறாக
உயரத்திற்கு அழைத்துச்
செல்லத் தெரிந்தவை
நம் உத்வேக எண்ணங்கள்!

* நமக்குள்ளே
தோன்றி மறைந்தாலும்
நம்மை நிழலாக்கிவிட்டு
தம்மை
நிஜமாக்கிக் கொள்ளும்
தந்திரமிக்கவை அவை
என்பதால்...

* எத்தனை என்று
மட்டுமல்ல
எத்தகையது என்றும்
எண்ணிக் கொண்டேயிருப்போம்
ஒவ்வொரு கணமும்
நமக்குள் தோன்றுகிற
எண்ணங்களை!

மனிதனின் தேடல்

மனிதனின்  தேடல்


தேடல் என்பது சுவாசம் போன்றது,
ஒவ்வரு மனிதனும் ஒவ்வொரு நிமிடமும்
ஏதோ ஒன்றை தேடி கொண்டு தான் இருக்கிறான்...
கருத்தரித்த பெண்ணிற்கு பிள்ளையின்
முகம் தேடல் ,
தந்தைக்கோ பணம் தேடல்,
பிறக்கும் வரை உலகம் தேடல்,
பிறந்த பிறகு உணவு தேடல்,
வளரும் வரை படிப்பு தேடல் ,
வளர்ந்த பின்பு பட்ட பாடம் தான் தேடல்,
காதல் இல்லாதவனுக்கு காதலி தேடல்,
காதல் வந்தவனுக்கு கல்யன்னம் தேடல் ,
பிறக்கும் பொது அலுத்து கொண்டிய பிறந்த நாம்
இறந்த பிறகு மற்றவர்க்கு அந்த அழுகையை கொடுத்து செல்கிறோம் ......

ஒரு மனிதன்
இருக்கும் வரை அன்பை தேடுகிறான் ...
இறக்கும் வரை அரவணைப்பை தேடுகிறான் ..

பொன்னான வரிகள்



                                                    பொன்னான வரிகள்

பொருளொடு வாழ்வு உருவாகும் போது

புகழ் பாட பலர் கூடுவார்

அந்த புகழ் போதையாலே     எளியோரின்   வாழ்வை  மதியாமல்  உரையாடுவார்

ஏழை விதியோடு விளையாடுவார்

அன்பை மலிவாக எடை போடுவார்

எந்தக் காலத்திற்கும்   பொருத்தமான   பொன்னான வரிகள்
·

காதல் மட்டுமே ...



                                                       காதல் மட்டும்   சுகமே


எனக்காக
மணவறையில்
கண்ணீர்விட்டபோது
காதல்  சுகம்தான்-ஆனால்

இனி இந்த
காதல் எனதில்லையே!......

என்னை தேடி அலையும்
உனது   ஈர விழியில்
வாழ்கிறது நம் காதல்
காதல் சுகமானது.....


இனி இந்த
காதல் எனதில்லையே!......


உன் விழியின் ஈரம்
சொல்கிறது
என் மேல் உள்ள காதலை
காதல் சுகமானது............


இனி இந்த
காதல் எனதில்லையே!......

காதலனை கைவிட்டு
கணவனை கைபிடித்த  நீ
வாழ்க பல்லாண்டு !

அனல் பறக்கும்
கோபங்கள் ஏன்?

சின்னதாய்
சிரிக்ககூடதா?

மௌனம் என்ற
இடி எதற்கு
சில வார்தைகள்
பேசக்கூடாதா ?

உன்னில்
இதுவும் பிடித்திருக்கு......


கோபம் தாண்டி
உன் புன்னகை
இதுதான் காதலா ?......


சொல்லவரும் வார்த்தைகள்
காணாமல் போகின்றன
பெண்ணே உன் கண்ணை
காணும்போதெல்லாம்


என் வார்த்தைகளுக்கு
மதிப்பில்லாமல் போகிறது
அன்பே நீ  பேசும் போதெல்லாம்

உயிருடன் இருந்தும்
இறந்தது  போகிறேன்
கண்ணே நீ என்னை
வெறுக்கும் போதெல்லாம்

சொல்லாமல் தவிக்கிறேன்
நீ என்னை
கடந்து செல்லும் போதெல்லாம்

 உன்விழிகள்
என் வார்த்தைகளை
 கொள்கிறது

 உன் பார்வை
என்னையும் என்காதலையும்
 கொள்கிறது

வெற்றி பெற்றவனுக்கு
அமுதம்
தோல்வி கண்டவனுக்கு
ஆழகால விசம்
இதை தெரிந்தும் தெரியாமல்
வாழ்பவனுக்கு
புரியாத புதிர்

ஏன் இந்த ஆரவாரம்
ஏன் இந்த  சந்தோசம்
ஏன் இந்த  இன்ப மழை

இன்பம் நிலையில்லை
துன்பம் மட்டும் வாழ்வில்லை
இப்பொழுதுதான்  தடுமாறுகிறது
என்  இதயம் -காரணம்
காதல் மட்டுமே .........

காதல் அழகே அழகு!





காதல் அழகே அழகு!

பருவ பயணத்தின்
பல்லக்கு, காதல்...
பயணிப்பவன்
பல்லக்கை சுமக்க,
பதவிசமாய் பயணிக்கிறது
காதல்!

சுமப்பவர்களை அது
சும்மா விடுவதில்லை...

தவமெதுவும் இருக்காமல்
தரப்படும் வரம், காதல்!
அதை
தருகிற தேவதை
வருகிற வழி தான்
புரியாத புதிராய்
இன்றும் இருக்கிறது!

இந்த வரம் தரும்
தேவதைகள்
வரத்தை தந்து விட்டு,
கணப் பொழுதில்
காணாமல் போய் விடுகின்றனர்...
தந்து போன வரமோ
வந்து வந்து வதைக்கிறது!

வரம் பெற்றவர்கள்
வாழ்வில்
சுபம் பெற்றவர்கள்!

கண்களை மறைப்பதல்ல
காதல்...
அது, அகக்கண்கள் திறக்கும்
அழகிய சாவி!

தன்னை அறிதலுக்கு
பக்தி மட்டுமல்ல
காதலும் கருவி தான்!

இருவரின்
இதய பரிமாற்றத்திற்கு
தூது போகும் புறா
காதல்!

உடன்படிக்கைகளை
எழுதாமல், எழுதி
கையெழுத்திடாதவர்களையும்
கைதியாக்கி விடுகிறது!

விட்டுக் கொடுத்தலுக்கு
ஒற்றை வார்த்தையில்
ஒரு விளக்கம் தான்
காதல்!

வரம் வாங்கியவர்களில் சிலர்
அதை
செலவழிக்க தெரியாமல்
சிக்கித் தவிக்கின்றனர்!
கணக்கில்லாமல்
வரும் காதல் கூட
ஒரு வகையில்
கறுப்புப் பணம் தான்!

அழகை ஆராதிப்பது மட்டும்
காதல் அல்ல...
காதலே அழகு தான்
அதை ஆராதிக்க
தவமிருக்க வேண்டாம்...
இதயம் திறந்திருக்க வேண்டும்!

பெண்ணுக்குப் பெண்ணே எதிரி










                                   பெண்ணுக்குப்  பெண்ணே எதிரி

                  நல்ல  மார்க் வாங்க   பாடு பட்டு 
                  தாயும், தந்தையும்  பெருமைப்பட்டு,
                  வங்கியில்  கடன் வாங்கி கஷ்டப்பட்டு,
                  மகள்   பெருமையுடன் மருத்துவத்தில் சேர்க்கப்பட்டு,
                  பெண்ணுக்கு  பெண்ணே எதிரியாய் தூண்டப்பட்டு,
                  ராக்கிங்  என்ற பெயரால் கொடுமை படுத்தப்பட்டு,
                  தற்கொலை  என்ற  ஆடை  அணியப்பட்டு
                  மருத்துவர்  ஆகாமலே  வாழ்வு தடைபட்டு 
                  மருத்துவ கல்லூரி மாணவி   போனாலே, உலகை விட்டு.

                  ரா. பார்த்தசாரதி

                 இது கதை அல்ல  நிஜம்.  ஆம்,  ஒரு மருத்துவகல்லூரியில் 
                 ஒரு மாணவிக்கு  நடந்த சோக முடிவு.


ஞாயிறு, 11 மே, 2014


தாயே கண்கண்ட தெய்வம்



                    

                         தாயே  கண்கண்ட  தெய்வம்

                  வாழ்வின்  ஏட்டினை திருப்பிப்  பார்த்தேன,
                  வலிதாங்கா  இளமை  பருவத்தினை எண்ணிப்பார்த்தேன்
                  என் பேனாவின்  துணைகொண்டு எழுத  முடிவுகொண்டேன,
                  அன்னையின்  அருமையினை  எழுத  துணிந்தேன்

                  மக்களை  பெற்ற  மகராசியே  தாய்தான்,
                  குடும்பத்தின்  ஆணிவேராய்  இருப்பதும் தாய்தான்,
                  ஞானியும்,  துறவியும்  போற்றும்  தெய்வம்,
                  ஞாலம் புகழ்ந்திடும்  சிறந்த  தெய்வம்.!
                  ஓய்வின்றி , உறக்கமின்றி , உண்  உயிரைக்கூட,

                  ஒவ்வோர்  பிறப்பிற்கும்  பணயம்  வைத்தாய்,
                  உன்னை வையகம்  என்றும்  போற்றுமே,

                  உன் பெருமை அறியா மனிதனை  தூற்றுமே !
                   
                 பாசத்தோடு  வாழ்வதுதான் தாயின்  குணமே ,
                 பாசத்தோடு  இருப்பதுதான்  பிள்ளைகளுக்கும் நலமே,
                 எனக்கென்று  துன்பம் வந்தா, உனக்கு வேறு பிள்ளையுண்டு, 
                 உனக்கென்று  துன்பம் வந்தா, என்னக்கு வேறு தாயுண்டோ ?
                     
                 தாயை விட  சிறந்த  கோவில்  இல்லை,
                 தாயே  என்றும்  அன்பின்  எல்லை 
                 தாயின் பெருமையினை  சொல்ல    வார்த்தையில்லை, 
                  தியாகச்சுடரே  தாயுருவம், மனதிலிருந்து  மறைவதில்லை !
            
                 அம்மா, அன்னை, தாய்   எனும்  பல  வார்த்தையே ,
                  அம்மா என்ற வார்த்தை குழந்தையின் முதல் வார்த்தையே,
                  அம்மா  என்றாலே  எல்லோர்க்கும்  ஆனந்தமே 
                  அதுவே  மனித இனத்திற்கும் பேரானந்தம்மே! 

                  இளமையில்  ஸ்பரிசம், முதுமையில் பாசம்,
                   என்றும்  உறவின், சிறந்த பந்தபாசம் ,
                  இளமையில் நான் உனக்கொரு குழந்தை ,
                  முதுமையில் நீ எனக்கொரு குழந்தை !

                   வாழ்வெனும்  படகிலே நீ ஒரு  துடுப்பு,
                   எங்கள்  பிறப்பே  உன்  படைப்பு ,
                   எங்கள்  வளமே உன்  சிறப்பு ,
                   எங்கள்  நினைவே  பாசத்தின் பிணைப்பு !

                   பூமியை  விட  சிறந்தவள்  தாய் ,
                   ஆகாயத்தை விட உயர்ந்தவர்  தந்தை,
                    தரணியி லே  தாய்க்கு  என்றும் சிறப்புண்டு
                    தாயே  கண்கண்ட தெய்வம்   என்று சொல்வதுண்டு !

                                                                                ரா. பார்த்தசாரதி

               

Vaikai oru Varam