சமாமெஷ்ஷில் பனித்துளி
பனித்துளிகள் புல்லின்மேல் மிக அழகாய் காட்சியளிக்குதே
படுக்க வெண்ணிறப்பாய் போல் நமக்கு தோற்றமளிக்குதே
குளிர்ச்சியுடன் எங்கும் தரையில் பரவி நீண்டு பரவியதே
குளிர்ந்த காற்றுடன் தென்றல்போல் சில்லென்று வீசுதே
சிலமணி நேரத்தில் கதிரவன் ஒளி பட்டு மறைந்ததே
சமா மெஷ்ஷில் அதிகாலையில் காணும் காட்சியானதே
மரங்களும் இலை உதிர்த்து பல நிறங்களில் மிளிர்கின்றதே !
எங்கள் மனதிலும் உடையிலும் குளிர்ச்சி உண்டானதே !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக