தாலாட்டு பாட்டு
வாழ் நாள் எல்லாம் உடலை வருத்தி
உனக்காகவே தவமாய் தவமிருந்து
ஈறு ஐந்து மாதங்களில் நான்
பெற்றுயெடுத்த பெண்பிள்ளை தானே
மலடி என்று சொல்லாமலே
தாய் எனும் பெருமையினை தந்தவளே
என்றும் எங்கள் வீட்டு திருமகளே
எங்கள் குலம் காக்கும் குலமகளே !
==================================================================
நீலவண்ண கண்ணா வாடா
நீயொரு முத்தம் தாடா
நிலையான இன்பம் தந்து
விளையாடும் செல்வா வாடா !
உன்முகம் என்றும் சந்திரபிம்பம்
என்றும் உன்முகம் புன்னகை தவழும்
என்மடியே உனக்கு பஞ்சு மெத்தை
என் தோளே உனக்கு தூளி
ஆராரோ பாடி தூங்க வைப்பேனே !
=======================================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக