செவ்வாய், 26 டிசம்பர், 2023

எது பெருமை

 


                     

         

                                         எது பெருமை 

            பத்தாயிரம்  அரசு பணிக்கு 
            பத்து  லட்சம் பேர் எழுதுவது பெருமையா !

            அரசு கட்டிய குடியிருப்பில் இருபத்தைந்து 
            ஆண்டுகளில் இடிந்து விழுவது பெருமையா !

            மது வருமானத்தில், இலவசங்கள், சலுகைகள் 
            கொடுப்பது பெருமையா !

            எதிர்த்து ஏசியவரையெல்லாம் ஏலம் எடுத்து 
            கட்சியில் சேர்ப்பது  பெருமையா !

            சின்னத்திரை  பெரியத்திரை ஆக்கிரமித்து 
            வன்முறையால்  அடக்கி ஆள்வது  பெருமையா !

            விபத்து மரணங்களுக்கு  லட்சங்கள் கொடுத்து 
            படம் எடுத்துக்கொள்வது பெருமையா !

            வாரிசுகளை வளர்ப்பதும், நேரம் பார்த்து 
            பதவிகள்  அளிப்பதும் பெருமையா !

            வெள்ளம் சூழ்ந்த இடத்தினை நேரில் பார்க்காமல் 
            பிற ஊர் சென்று உரையாற்றுவது  பெருமையா !  

            உதவிக்கு வந்தவர்களை தடுப்பது  பெருமையா !
            தன்னிச்சையாக செயல் படுவது பெருமையா !

            பெருமை எனப்படுவது யாதெனில், மக்களை 
            உழைத்து உயர செய்யவும், 
            வேலைவாய்ப்பை  பெருக்கவும்,
            தொழில்கள் வளரவும் 
             மதுவை  விலக்கியும் 
             தண்டனை அதிகரித்தும் 
             விவசாயிக்கு உதவியும் 
              ஓட்டுக்கு திட்டமிடாமல் 
              நாட்டுக்கு திட்டமிடுவதே 
              நிரந்தர பெருமையாகும் 

              தொகுத்தவர் :  ரா.பார்த்தசாரதி 
    

                

திங்கள், 25 டிசம்பர், 2023

Thaalaatu 2

 


                                                         



                                                                   தாலாட்டு  பாட்டு 

                                          
                                            வாழ்  நாள் எல்லாம் உடலை வருத்தி 
                                             உனக்காகவே தவமாய் தவமிருந்து 
                                             ஈறு ஐந்து  மாதங்களில் நான் 
                                             பெற்றுயெடுத்த பெண்பிள்ளை தானே 

                                              மலடி என்று சொல்லாமலே 
                                              தாய் எனும் பெருமையினை தந்தவளே 
                                              என்றும் எங்கள் வீட்டு திருமகளே 
                                               எங்கள் குலம் காக்கும் குலமகளே !
==================================================================

                                                நீலவண்ண  கண்ணா  வாடா 
                                                நீயொரு  முத்தம்  தாடா 
                                                நிலையான இன்பம்  தந்து 
                                               விளையாடும் செல்வா வாடா !

                                                உன்முகம்  என்றும்  சந்திரபிம்பம் 
                                                என்றும் உன்முகம் புன்னகை தவழும் 
                                                என்மடியே உனக்கு பஞ்சு மெத்தை 
                                                என் தோளே உனக்கு  தூளி 
                                                ஆராரோ பாடி தூங்க வைப்பேனே !
=======================================================================


                   

வியாழன், 14 டிசம்பர், 2023

Thalaattu





                                                                       தாயின் தாலாட்டு 

                                            சிங்காரப்  புன்னகை  கண்ணாற  கண்டாலே 
                                             சங்கீத  வீணையும் எதுக்கம்மா 
                                             மங்காத  கண்ணில் மையிட்டுப்  பார்த்தாலே 
                                             தங்கமும் வைரமும் எதுக்கம்மா !

                                             கண்ணே !  உன்னை கண்டால்  போதும் 
                                             கவலைகள் எல்லாம் மறந்தே போகும் 
                                            செவ்வாயின்  மழலையும் ஆனந்தமாகும் 
                                             எங்கள் செல்வ மகளே குல விளக்காகும் !   
====================================================================


                                                     மண்ணுக்கு மரம் பாரமா 

                                           முகம் என்றும் சந்திர பிம்பம் 
                                           கள்ளமில்லாச் சிரிப்பு மனதை வெல்லும் 
                                           எங்களுக்குத் தருவாய் என்றும் பேரின்பம் 
                                           எங்கள் செல்வியே மகாலக்ஷ்மியாகும் !

                                           மண்ணுக்கு  மரம் பாரமா 
                                           மரத்திற்கு கிளை பாரமா
                                           கொடிக்கு  காய்  பாரமா 
                                           பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா !
==================================================================

செவ்வாய், 12 டிசம்பர், 2023

  


                                                         காலமும்  நேரமும் 

                             காலமும், நேரமும்  மனிதனுக்காக காத்திராது 
                              கடந்து விட்ட நேரமும் திரும்ப  வாராதது 
                             காலத்திற்கு ஏற்ப, எங்கும் நேரம்  மாறுபடுமே  
                              நாட்டிற்கு நாடு, மாநிலத்திற்கு ஏற்ப மாறுபடும் !

                              இவை எல்லாம் சூரிய உதயத்தால் மாறுபடுமே 
                              காலத்திற்கு ஏற்ப நாம் வேலை செய்யவேண்டுமே 
                              நேரத்திற்கு தகுந்தாற்போல் மாறுவது  நம் கடமை 
                              இதுவே  மனிதர்கள் எல்லோருக்கும் பொது உடைமை !

                              கடல் அலையும், நேரமும் மனிதனுக்காக காத்திராது  
                              சந்தர்ப்பம் வரும்போது அதனை நழுவவிடக்கூடாது 
                              காலமும் ,  நேரமும்  பொன் போன்றதன்றோ 
                              அதனை மதித்து போற்றுதல் நம் கடமையன்றோ !
       
                              சூரியனும், சந்திரனும் காலத்தை உணர்த்துபவர்களே 
                              மானிட பிறப்பை உதயாத்தி வைத்து கூறிப்பார்களே 
                              காலத்தினால் செய்த நன்றியை மறக்க மாட்டார்களே 
                               எங்கே சென்றிடும் காலம் ! நம்மையும் வாழவைக்கும் !

 



       எதுவும் வீணாவதில்லை 

வீழ்ந்ததெல்லாம்   வீணாகிவிடுவதில்லை  
வீசி  எறிந்த  விதைதான்  விருச்சமாகிறது 

உதிர்ந்த மலர்கள் எல்லாம் வீணாவதில்லை 
அவைகள் எல்லாம் வாசனை திரவியமாகிறது 

உதிர்ந்த இலைச் சருகுகள் வீணாவதில்லை 
அவைகள் விவசாயின் வயலுக்கு எருவாகிறது 

விருந்து முடிந்து எரியும் வாழை இலைகள் 
பசுக்களுக்கு இரையாகி, பாலை அளிக்கிறது 

வீசி எறிந்த விதைகள் தான்  இங்கு விருட்சமாக
விண்ணை முட்டி உயரே வளர்கின்றது   

வீணாவதில்லை துாக்கி எறியப்பட்டது துடைப்பம் தான்...
எனினும எவ்வளவு துாசிகளைஉதிர்ந்த துவம்சம் செய்தது
 என்று எண்ணி பார்க்கும் இதயம் எத்தனை இருக்கிறது !

முச்சந்தியில் கிடக்கும்முனை ஒடிந்த பேனா
எத்தனை இதிகாசங்களை எழுதியது என்று
எவருக்கு தெரியும்!

விழுந்து, வெடித்து மரணித்த மழைத் துளிகளின் 
மகிமையில் தான் உலகம் தன் வதனத்தை 
அலங்கரித்துக் கொள்கிறது!

விரல் பிடித்து நடக்க விழுந்து எழும் குழந்தைகள் தான்
விண்ணை சுற்றி வரும் விமானத்திற்கு விழிகளாகிறது!

உயிர் துறந்து, உதிர்ந்து விழுந்த சருகுகள் தான் 
உலகம் உயர்த்தும் விளை நிலத்திற்கு வளம் சேர்க்கிறது!

இங்கு
உதிர்ந்தவைகளும்
உயிர் துறந்தவைகளும்
வீழ்வதற்கு மட்டுமல்ல
இன்னொரு ஜென்மத்தை

வெல்வதற்கே என்று எண்ணுங்கள் !

ரா.பார்த்தசாரதி 


ஞாயிறு, 10 டிசம்பர், 2023

மழை பேசுகிறது

 




                                              மழை பேசுகிறது 

         விசும்பின் கீழே வீழ்வதெல்லாம்  மழைதானே !
           பருவத்திற்கு ஏற்ப காலத்தில் பொழிவதும் மழைதானே !
          கீழே வீழ்ந்தாலும் தடுத்து நிறுத்துவதும்  மனிதன்தானே !
          மனிதர்கள் வீடு கட்ட  என் தடங்களை பலி கொடுத்தேனே !

          என் உடன் பிறப்புக்களையும் நானே பொழிந்து அழித்தேனே 
          என் பாதையில் செல்ல பல வழியில் தடைபட்டு நின்றேனே 
          அணை கட்டாமல் பல வழிகளில் வீணாய் கடலடைந்தேனே 
         அந்நியமாய் கேட்பாரின்றி பல வருடங்கள் அழித்தானே !

         இந்திரனிடம் அனுமதி பெற்று புயலுடன் பொழிந்தேனே !
         கடுங்கோபத்துடன் மிக்ஜெம் எனும் பெயருடன்சூறையாடினேனே  
         முடிவில் வழியின்றி எல்லா இடங்களிலும் கொட்டித்தீர்த்தேனே
         சக்ர வியூகத்தில் அபிமன்யூ போல் நடுவில் மாட்டிக்கொண்டேனே!

        நான் யாரிடம் முறையிடுவது என நினைத்தேனே 
        நாட்டையே விற்பவன் இந்திரனையே பொம்மையாக்கினானே 
        பணத்தால் எல்லாம் முடியும் என பல வருடமாய் தீர்மானித்தானே 
        நான் யார் பேச்சையும் கேட்பதில்லை என்று சாடினானே !

        வெளிவரத்தெரியாமல் ஆங்காங்கே தேங்கி நின்றேனே 
       நாட்டுத் தலைவன் என்னையே தந்திரமாய் பழித்துரைத்தானே !
       நான் கோபப்பட்டுதான், வீட்டையும்.மக்களையும்சுற்றிவளைத்தேனே 
        என் வழித்தடங்களை சரிசெய்ய மும்மூர்த்திகளை வேண்டினேனே!   

       ரா.பார்த்தசாரதி 
              

சனி, 9 டிசம்பர், 2023

வாழ்க்கை ரகசியம்

                    






                                                     வாழ்க்கை  ரகசியம் 

                               புரியாது, புரியாது, வாழ்க்கை ரகசியம் புரியாது 
                               வளரும் ஆசைக்கு அளவேது !  முடிவு ஏது !
                                முடிந்த பின்,  உலகம் நமக்கேது
                                முடிந்ததை நினைத்தால் பயனேது !

                                ஒரு சிலர் வாழ்வு தியாகத்தில் கூடும் 
                                உரிமை, அன்பும் மறுபடி சேரும் 
                                திருமணம்  இரு மனமாகும் 
                                பெண் மனம் தாய்மையை தினம் தேடும் !

                               பெருமைகள் பேசுபவர் பூமியில் பிறந்தார் 
                               பிறந்தவர்  தாயின் மடிதனில் வளர்ந்தார் 
                               வளர்ந்தவன் வாழ்வில் கொடுப்பதை மறந்தான் 
                                ஒருபிடி சாம்பலே முடிவெனஉணர்ந்தான் !

                                ஒரு சிலரே புகழோடு தோன்றுவர் 
                                ஒரு சிலரே புகழோடு  இறப்பர் 
                                வாழ்க்கையில் பிறப்பும் இறப்பும் ஒன்றே 
                                 மானிடம் அறியாமல் திரிவதும் இன்றே !

                              

வெள்ளி, 1 டிசம்பர், 2023

பாரதியே ! மறுபடியும் எழுந்து வா

 


                                      


                             பாரதியே ! மறுபடியும் எழுந்து வா 

            பாரதிபோல்  ஒருவன் தமிழகத்திற்கு  வருவாரா !
            நடக்கும் அக்கிரமங்களுக்கு சாட்டையடி கொடுப்பாரா !
            நாட்டில் கல்வியும் அறிவையும்தானே வளர்க்கச்சொன்னேன் 
           ஆண் பெண் வித்தியாசமின்றி ஆடையை குறைக்க சொன்னேனா !

           நாட்டிலுள்ள மக்களுக்கு நன்மை செய்ய சொன்னேனே !
           நாட்டையே கூறு போட்டு விற்று லாபமடைய சொன்னேனா !
           வாணிபம்,பெருக விளைப்பொருளை விற்க சொன்னேனே !
           கனிமங்களை சூறையாடி,ஆறுகளை கெடுக்க சொன்னேனா !

          சுயநலம் மிகுந்து பத்து தலைமுறைக்கு பணம் சேர்க்க சொன்னேனா
          மக்களை குடிகாரனாக்கி வாழ்க்கையை கெடுக்கசொன்னேனா !
         நாட்டின் தலைவர்கள் நீதி தவறி நடப்பதும் முறையா !
          கண்டிக்காத அரசும் இன்று மக்களுக்குத் தேவையா !

          அன்று விடுதலைக்கும், பாமரனுக்கும் துணிந்துகவிதை எழுதினேன் !
          வெள்ளையர்களே மேல்இக்கொள்ளையர்களை விட என எழுதுவேன்
         பாரதி போல் ஒருவர் தமிழகத்திற்கு வருவார் ! எதிர்த்து கேட்பார் !
         மக்களை திருத்துவார் ! நல்லாட்சிக்கு  வழி  வகுப்பார் !

         எழுத்துரிமை  பேச்சுரிமை  என்பது எங்கே போயிற்று !
        ஜனநாயகம் என்பதே கேள்விக்குறியாக  போயிற்று !
        நானே  தமிழகத்தை கண்டு பதறி கடற்கரையில் சிலையானே !
        பராசக்தியை வேண்டி தர்மத்தை நிலைநாட்ட வேண்டினேன் !