திங்கள், 22 செப்டம்பர், 2014

நவராத்திரி



                                                                நவராத்திரி

நங்கையருக்காக   கொண்டாடும்  ஓன்பதுநாள்   ராத்திரி
பெண்களை  மதித்து கொண்டாடும் ராத்திரி,
சிறு பெண்களையும், மற்ற பெண்களையும் போற்றும் ராத்திரி,
பொம்மைகளை வைத்து கொண்டாடும் ராத்திரி !

முதல் நாள் நவராத்திரி பூசை சிறுமியர்களுக்கே உரியதாம்,
சுவாசினி எனும் மூத்த சுமங்கலிக்கும் உரியதாம்
கல்வி, செல்வம், வீரம், இம்மூன்றின் தலைவிகளாம்,
கலைமகள், அலைமகள் ,மலைமகள் எனும் தெய்வங்களாம்!

பெண்ணே  உலகில் சக்தியின்  வடிவமாகும்,
நாட்டையும், வீட்டையும், காக்கும் தெய்வமாகும
சக்திக்கு  இடப்பக்கம் அளித்தவர் அர்த்தனாரிஸ்வரராகும் 
பெண் தெய்வங்களை போற்றி கொண்டாடுவதே  நவராத்திரியாகும் !

நவராத்திரி என்றாலே எல்லா பெண்டிருக்கும் ஒர் சுப ராத்திரி,
அலங்காரங்களும், பாட்டும், கேளிக்கையும் நிறைந்த ராத்திரி,
தொன்றுதொட்டு பெண்களுக்காகவே நடத்தப்படும் விழா
பெண்மைக்கு மதிப்பும், நல்வாழ்வும் அளிக்கட்டுமே இந்நவராத்திரி விழா


ரா.பார்த்தசாரதி


திங்கள், 8 செப்டம்பர், 2014

உலக எழுத்தறிவு தினம்



                                          உலக எழுத்தறிவு தினம்

எண்ணும்  எழுத்தும்  கண்னென தகும் .
எழுத்தறிவித்தவன்  இறைவன்  ஆகும்
கல்வி மூலமே தீர்ப்பது சிறந்த வழியாகும்
கற்றோருக்கு  சென்ற இடமெல்லாம் சிறப்பாகும்!

மனிதனாய்  பிறந்த யாவரும் எழுத்தறிவு பெற்றிட வேண்டும்
நாட்டில்  எழுத்தறிவு பெற அரசாங்கமும் பொறுப்பு ஏற்கவேண்டும்
பட்டி தொட்டிகளிலும், கிராமங்களிலும் கல்வியை மேம்படுத்த வேண்டும்.
இதனை கல்வி மூலமே நிலைபெறச் செய்ய வேண்டும்.!

பின்தங்கிய  இனத்தர்வரும், பாட்டளிகளும்  எழுத்தறிவு பெறவேண்டும்
நாட்டில் உள்ளோர் எழுத்தறிவு பெறுவதை கட்டயமாகக்க வேண்டும்
அதற்கான ஊடகங்களை கிராமங்கள்தோறும் எற்பட்டுத்தவேண்டும்
தாய் மொழியில் பயின்று கையொப்பம்  இட   அறியவேண்டும் !

எழுத்தறிவினை புகட்டி அறியாமை, மூட நம்பிக்கைகளை ஒழிப்போம் !
இரவு நேர பள்ளிகள் மூலம் முதியோர்களுக்கும் எழுத்தறிவிப்போம்
 எழுத்தறிவின்மையை  ஒழிக்க என்றும் நாம் பாடு படுவோம் என
நாட்டில் உள்ளோர் சபதம் எடுப்போம் உலக எழுத்தறிவு தினத்தில் !   


ரா.பார்த்தசாரதி


வெள்ளி, 5 செப்டம்பர், 2014

நாய் வளர்ப்பு தினம்



                                                     நாய் வளர்ப்பு தினம்


    நாய்  எனும் விலங்கு  என்றும்  நன்றியுடையதே
     இன்று வீடுகளில் வளர்க்கப்படும் செல்ல பிராணியாக இருக்கின்றதே 
    நன்றி,    தியாகம்      இவற்றின் எடுத்துக்காட்டு
    வீட்டினை இரவும் பகலும் காக்கும் மெய்காப்பாளன்!

   திட்டும் போதும் நாயே என்று தவறு செய்தவரை திட்டுகிறோம் 
   அவசரத்தில்  வாயே நாயை மூடு என   திட்டுகிறோம் 
   அன்புடன் வளர்க வேண்டிய பிராணியை வசைபடுகிறோம்
   பணத்திற்காக  பிறரை மனசாட்சி இல்லாமல் புகழ்கின்றோம்!

   வீட்டிற்குள்  வளர்க்கப்படும்  ஓர்  நல்ல  விலங்கு 
   அதனை  நல்ல முறையில் வளர்க்கப்     பழகு 
   நீதான் அதன் எஜமான் என்று  தெரிந்து ஓடி வரும் 
   திருடர்களை கண்டால் அவர்களை ஓடி விரட்டிடும் !

   மனிதர்களுக்கும், குழந்தைகளுக்கும் பிடித்த விலங்காகும் 
   அதுவே மரண பயத்தை போக்கும் கால பைரவரின் வாகனமாகும் !


  ரா,பார்த்தசாரதி

  
  
       

வியாழன், 4 செப்டம்பர், 2014

ஆசிரியர் தினம்




                    ஆசிரியர் தினம்


மாதா,பிதா, குரு  தெய்வம் 
மூவரும் கண்கண்ட தெய்வம்,
அன்பிற்கு அன்னை, அறிவுக்கு தந்தை,
கல்விக்கு ஆசான் (குரு) என உலகம் அறிந்ததே !

மனித வாழ்கையில் கல்விக்கே முதன்மை ,
இதனை நமக்களித்த ஆசிரியர்களுக்கே  பெருமை,
மனிதனின் உயர்வுக்கு அவர்கள் அமைத்த ஏணி,

ஏணியாய்  இருந்தவர்களுக்கு  என்றும் ஆசிரியர் எனும் பதவியே  !

ஆசிரியர்  பணி  மகத்தான பணியன்றோ,
அவர்களை நினவு கொள்வது நமது கடமையன்றோ,
ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆசிரியராய் இருந்தவரே,
அவர்தன்  பிறந்த நாளே  ஆசிரியர் தினமாக  அறிமுகமானதே!

அன்று இருந்த ஆசிரியர்கள் பள்ளியில் பாடம் நடத்தினார்,
இன்று  பணத்திற்காக ஆசிரியர்கள் வீட்டில் பாடம் நடத்துகின்றார்,
அன்று கல்வி அறிவுத்திறனுக்காக பாடம் கற்பிக்கப்பட்டது 
இன்று கல்வி என்பதே வியாபாரமாகவே   கருதப்படுகிறது !


அறிவுத்திறன், கல்வித்திறன் இரண்டும் நாட்டிற்கு வளமை, 
அதிலும் தரமான கல்வியை  அளிப்பதே நாட்டின் கடமை,
வாழ்க்கையில், கல்வி  என்பது மனிதனின் இரு கண்கள,
கல்வியை அளிக்கும் ஆசிரியர்களை என்றும் மறவாதிர்கள்  ! 


ரா.பார்த்தசாரதி