ஞாயிறு, 31 ஜனவரி, 2016

முதுமையும், முதியோர் தினமும்




                              முதுமையும், முதியோர் தினமும்  

முதுமை என்பதே மனிதனின் அனுபவ முதிர்ச்சி
உடலும் உள்ளமும் சற்றே  அடையும் தளர்ச்சி
துணை  தடுமாறினாலும் மனம் கொள்ளும் எழுச்சி
வீ ழ்ந்தாலும்  கைகொடுத்து தூக்கிவிடும் முயற்சி !

அனுபவத்திற்கும், வயதிற்கும், மதிப்பு  இல்லை
பெற்றதும்  உடன்பிறந்ததும் உதவ நினைப்பதில்லை,
ஏனோ கடனுக்காக  உதவும் நிலைமை  இங்கே
உள்ளத்தில் கலங்கும் முதுமைக்கு நிம்மதி எங்கே !

அடிபட்டு, இடம் தேடித், தட்டிதடும்மாறும் நெஞ்சங்கள்
பாசத்தினால் விடுபட முடியாத  முதியோரின்  எண்ணங்கள்
இளம் ஜோடிகள் போல் காதலும், காமமும்  இல்லை
முதிர்ந்த காதல்தான், ஆனால்  காமம் இங்கில்லை  !

முதுமை காதல் என்பது தாஜ் மஹாலின்  நினைவு
இளமைக் காதல் என்பது மனக் கோட்டையின் வளைவு !
இன்று  முதுமையின் அடைக்கலம் முதியோர் இல்லங்கள்
இதனை  மாற்றாதோ  இளமையின்  எண்ணங்கள் !

வாழைக்கன்றும். நெல்நாற்றும் பிரிந்தால்தான்  வளரும்
இளமையில் சேர்ந்தும், பருவத்தில் பிரிந்து வாழும் மனித இனம்,
தன்  மகனை  சான்றோன்  என பிறர்  சொல்லும் பெருமை தந்தைக்கே
பிரிவு உண்டானாலும், நன்றாக இருக்கட்டும் என நினைக்கும் பெற்றோரே !

தனிமை பட்டாலும், என்றாவது  கூடுவோம் ஏங்கும்  நினைப்பே ,
பந்த பாசத்திற்கு  கட்டுப்பட்டு  உயிரை கையில் பிடித்து வாழும் தவிப்பே ,
ஆணிவேராய்  இருந்து வெளிகாட்டி முடியாத  நிலைமை,
பண்பாட்டையும், பாரம்பரியத்தை  காப்பாற்றுகிறோம் எனும் பெருமை !

தனக்காக  வாழாது  பிறருக்காக வாழும்  முதுமை
என்றும் உறவுக்கும், பாசத்திற்கும் ஏங்கும் தனிமை
இளமையின்  முதிர்ச்சியே  மனித இனத்தின்  முதுமை
முதியோர் தினத்தை கொண்டாடுவோம் முதியோருடனே !

திங்கள், 25 ஜனவரி, 2016

அம்மாவின் அருமையும்,பெருமையும்


   

அம்மாவின் அருமையும்,பெருமையும்


பத்து மாதம்  சுமந்தவளே
பத்தியம் இருந்து காத்தவளே
உதிரத்தை உணவாகக் கொடுத்தவளே   
பார்த்துப்  பார்த்து வளர்த்தவளே
அன்பையும் பண்பையும் தந்தவளே!

உயராத செல்வத்தால் எனைக் காக்க
அயராது உழைத்தவளே
ஆதிசக்தியாய் எனக்குக்
காட்சியளித்தவளே
அம்மா! என்றும் நீ என்னவளே!

 சிறு குழந்தையாய் இருக்கும்போது    
 உனது மடியே எனக்கு தொட்டில் 
 பருவமடைந்தாலும்,  உன் முந்தானை
தந்த – நிம்மதி…
இன்று அந்தச் சிந்தனையும்
தருகிறதே – அம்மா!

அ - என்ற எழுத்து  உயிர் எழுத்து 
ம் -   என்ற எழுத்து  மெய்யெழுத்து 
மா - என்ற எழுத்து  உயிர்மெய் எழுத்து 

உயிரும், மெய்யும் (உடலும் ) தந்தவள்   அம்மா


 ரா.பார்த்தசாரதி 



இந்தியக் குடியரசு


                                                   இந்தியக் குடியரசு 

             அறுபத்தாராம்  ஆண்டு   குடியரசு தினத்தை  கொண்டாடுதே,
             இந்திய    நாடும்   உலகளவில்     வல்லரசு    ஆனதே ,
             உலகளவில்  நாம்   இன்று முன்னேறிக் கொண்டிருக்கிறோமே 
             வேற்றுமையில்  ஒற்றுமை  என்பதை  காண்கிறோமே !

             இயற்கை  சீற்றம்  அடைந்து   வெள்ளம்  பெருகியதே 
              நாடுக்கு  நாடு  உதவிக்கரம்  நீட்டியதே,
             இந்தியன்  என்று  பெருமிதம் கொள்வோமே 
              நாட்டு  நலனில்  அக்கறை கொள்வோமே!

              குடியரசு நாடாய் திகழ்ந்து, பல திட்டங்கள் தீட் டுதே
                நாட்டின் முன் னேற்றதிற்கும் , அக்கறை காட்டுதே 
              ஒற்றுமை எனும் பாலம் மாநிலங்களிடையே வளர்கின்றதே ,
               மொழிகள் பலவாயினும் ஒற்றுமை   ஓங்குதே !

              நாடு  உனக்கு என்ன செய்தது என  கேட்காதிர்கள் 
              நீங்கள் நாட்டிற்கு என்ன செய்திர்கள் என்பதை நினையுங்கள் ,
             நாடு வளம்பெற  ஒற்றுமையுடன்  பாடுபடுவோமே,
             பிற  நாட்டிற்கு  எடுத்துகாட்டா  என்றும் விளங்குவோமே !

             ஜனநாயகத்தின்  குடைகீழ்   வளரும்  நாடு ,
              கலாசாரத்திலும்,  ஆன்மிகத்திலும்,  சிறந்த நாடு ,
              பல இன்னல்களை எதிர்கொண்டு வெற்றிபெற்ற நாடு,
              ணையற்ற  சந்ததியுடன் திகழும்  இந்தியா  எனும் நாடு!  


              ரா.பார்த்தசாரதி

புதன், 13 ஜனவரி, 2016

ஸ்ரீகந்தனின் உரைநடைக்கவிதைகள்




                                அழுதாலும்  மாண்டவர்  திரும்புவதில்லை 
                                ஆண்டவன் படைப்பில்  மாற்றமில்லை 
                                இளமை என்றும்  நிலைப்பதில்லை
                                ஈகைக்கு   என்றும் நிகரில்லை 
                                ஊரார்  வாய்க்கு  பூட்டில்லை 
                                எளிமைக்கு  ஈடு  இணையில்லை 
                                ஏற்றத்திற்கு என்றும் தடையில்லை 
                                ஐயம் என்பதற்கு  தெளிவில்லை 
                                ஒண்டிகட்டைக்கு  தனி வீடு தேவையில்லை 
                                ஓதுவதற்கு  நல்ல ப்ரோஹிதர்கள் இல்லை 
                                ஔடத்தில் ( மருந்தில்) கலப்படம் இல்லாமல் இல்லை. 
                                அக்தே மனிதனுக்கு துன்பம் தராமல் இல்லை !
====================================================================  

     கடமையை  செய் ! பலனை எதிர்பார்க்காதே என்றது  பகவத்கீதை !
     கடமையை  செய்தேன், பையனை கலெக்டருக்கும் படிக்க வைத்தேன் 
     கடைசி வரை,  பலனை  எதிர்பார்கவில்லை 
      கடைசியில் தன் கடைமைச்  செய்தான்  என் மகன்.
     கடற்கரைக்கு  அருகிலுள்ள  முதியோர் இல்லத்தில் சேர்த்தான் 
    கவலைப் படாதே என்றான்   கடமைக்காகவும் பார்க்கவரவில்லை,
    எந்த பலனும் எதிர் பார்கவில்லை 
    பகவத் கீதை, தத்துவம் புரிந்ததா  உங்களுக்கு !
-----------------------------------------------------------------------------------------------------------------------------

                               தாய்  அன்பில்  கலப்படம் இல்லை

                               தாய்  பாலில்      கலப்படம் இல்லை

                               தாய்  மொழிக்கு  ஈடே தும்  இல்லை 

                              தாய்  நாட்டிற்கு  இணையேதும் இல்லை !
=======================================================================
      

செவ்வாய், 12 ஜனவரி, 2016

பொங்கல் பண்டிகை

                                                          பொங்கல் பண்டிகை 

உத்திராயணம்  உதித்து  வரும் காலம் 
உதய சூரியனை வழிபடும்  காலம் 
உழவர்கள் விளைச்சலை கொண்டாடும் காலம்.
தை மாதத்தில் காணும் பொங்கல் விழாக் காலம் !

உழவர்கள்  உவகையுடன் கொண்டாடும் பண்டிகை 
விவசாயமும், உழவர்களும் பாதிப்பு அடைந்தது வெள்ளத்தாலே,
திறமும், உறுதியும், கொண்டு வெற்றி காண்போம் உழைப்பாலே,
இயற்கை உரமும், புதுமை புகுத்தி வெற்றி காண்போம் விவசாயத்திலே!

உழவன் சேற்றினிலே இறங்கினால்தான்  நமக்கு சோறு 
நகர்வாழ் மக்கள் அறியாமல் உலாவருவதைப் பாரு
விவசாயம் நமது நாட்டின் முதுகெலும்பு  என நினைத்திடுவோமே,
விவசாயி  நலனில் அக்கறை கொண்டு  உதவி செய்துடுவோமே!

கரும்பின் கணுவில் கரும்பு  துளிர்த்து  வளர்ந்திடுமே !
உழவன் உழைப்பாலே விவசாயம் வளர்ச்சி அடைந்திடுமே !
விவசாயிக்கு முக்கிய பண்டிகை பொங்கல் திருவிழா !
சூரிய பகவனை நினைந்து கொண்டாடும்  திருவிழா !

பழையன கழிதலும், புதியன புகுதலுமே  போகிப்பண்டிகை,
பிடி வைக்கும் பெண்கள் கொண்டாடும் கணுப் பொங்கல்,
கால்நடைகளுக்காக  கொண்டாடும்   மாட்டுப் பொங்கல்,
உறவும், நட்பும், பரிமாற்றம் கொள்ள  காணும் பொங்கல்!  

எத்துயர் வரினும் துவளுதல் கூடாது 
உழவன் மனம் என்றும் தளர்ச்சியுரக்கூடாது ,
கரும்பும், பொங்கலும், இறைவனுக்கு படைப்போமே ,
குடும்பத்துடன் பொங்கலோ பொங்கல் என கொண்டாடுவோமே ! 


ரா.பார்த்தசாரதி


 
 

புதன், 6 ஜனவரி, 2016

ஸ்ரீகாந்தனின் உரைநடைக் கவிதைகள் -1



                               ஸ்ரீகாந்தனின் உரைநடைக் கவிதைகள் -1

                                                                   சமுத்திர ராஜா 

                                கேட்டதை கொடுபவானே  இறைவா 
                                 கேளாமல்  கொடுத்தாயே  தலைவா !

                                 இயற்கை  சீற்றத்தின் எதிரொலியே
                                 இடைவிடாது ஒலிக்குதே மரணஒலியே தலைவா !

                                 நின்று கொன்றாயே  இறைவா 
                                  நிற்கதி    ஆக்கிவிட்டாயே  தலைவா !

                                   எல்லாம்    உன்  பிள்ளைகள்தானே இறைவா !
                                   ஏன்  இதை  மறந்தாயே   தலைவா !  

===================================================================== 

                                                                          கை 

                                  ஆண்டவன் கொடுத்தது   இரு கை 
                                   அதுதான்        உனது         இருக்கை 

                                   அதோடு      சேரு     தன்னம்பிக்கை
                                    அபாரமாய்   மாறும்       வாழ்க்கை 
==================================================================== 

                                                                  கவலை 

                                    கவலை என்பது   ஒரு  அலை 
                                    அது    ஒரு    கேன்சர்    அலை 
                                    கவலைக்கு  இல்லை ஒரு எல்லை 
                                     அது   ஒரு  மாபெரும்   தொல்லை 
                                    கவலையை  மறக்க  தியானம் ஒரு கலை 
                                     அது  ஒரு   யோகா நிலை !

==================================== ================================= 



        இயற்கையின்  சீற்றத்தின் எதிர் ஒலியே ராட்சஸ அலைகள் 
        இழுத்துக்கொண்டு  பல ஆயிரம்  தலைகள் 
        இமயம் போல்  சேர்ந்ததோ  பிண மலைகள் 
        இடிந்து போனதோ  பல கோடி மனங்கள் !

======================================================================

     பல்லவன்  தள்ளாடி  வரக்கண்டோம் 
     பள்ளமேடுகளில் குதிக்கக்கண்டோம் 
     பற்கள் எல்லாம் ருத்ர தாண்டவம் ஆட கண்டோம் 
     பஞ்சர்  ஆகி நடுபள்ளத்தில் தள்ளக் கண்டோம்,
     பல்லவன் சேவை விட  ன்/நடையே சிறந்தது என முடிவுகொன்/டோம்.

===================================================================== 

                 
                                 சொத்தோ  ஏராளம் 
                                 கெட்ட   சேர்க்கையோ தாராளம் 
                                 வீழ்ந்ததோ பாதாளம் 
                                அழிந்ததோ  பொருளாதாரம் 
                                அதிர்ச்சியில்  சிவலோகம் 
                                வாரிசுகளோ தெருஓரம் 
======================================================================