செவ்வாய், 18 ஆகஸ்ட், 2026

Sundanthira dinam 2026. (Revised)


சுதந்திர காற்றை சுகமாய் சுவாசித்த  நன்னாள் ! 
அஹிமிசை  வழியில் கிடைத்த அன்புத்திருநாள். 
அடிமைச்  சங்கிலியை உடைத்த அற்புதமான நாள் 
வெள்ளையரை வெளியேற்றி வெற்றி பெற்ற பெருநாள் !
கம்பிரமாய் மணிக்கொடி தரும் ஆனந்த திருநாள்.
சுதந்திர காற்றை சுகமாய் சுவாசிக்கின்ற நன்னாள் !

பாரதி கூறுகிறார் - ஜாதிகள் இல்லையடி பாப்பா ! பயம் கொள்ளாதே 
பாப்பா, குலத்தாழ்ச்சி, உயர்ச்சி  சொல்லல் ஆகாது பாப்பா என்கிறார். 
உச்சி மீது வானிடிந்து போயினும் அச்சமில்லை, அச்சமில்லை ! என்றும் 
யாதும் ஊரே ! யாவரும் கேளிர், தீதும், நன்றும் பிறர் தர வாரா ! எனும் 
பொது மறையை உணர்த்தியதும் நம் நாடு !  ஒன்றை மட்டும் கூறுகிறேன் !

           சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம் 

          1. காசு கொடுத்து வாங்கவில்லை என்றாலும், பல உயிர்களை 
               காவு கொடுக்காத குடும்பங்கள் இல்லையென சொல்லும் 
              அளவுக்கு சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம் !

        2.  சுதந்திர தினம் கொண்டாடுவதை விட கொடுத்து உணர்வதே 
             சுதந்திரத்தின்  முழுமை !

        3.  எதை வேண்டுமானாலும் பேசி செல்ல வாங்கவில்லை சுதந்திரம் .
             பேசியதை செயல் படுத்துவதே  முழு சுதந்திரம் !

      4.   மதுவுக்கு  அடிமையாகி மாண்டபின், மானியம் வாங்கிட  
            வாங்கவில்லை சுதந்திரம் !

     5.    மாற்றி  முயற்சித்து மதியால் பிழைத்திடவே முழு சுதந்திரம்!

     6.   பதவி  வைத்து பத்தும் செய்ய வாங்கவில்லை சுதந்திரம் 
            பத்திரமாக மக்களை வாழ வைக்கவே முழு சுதந்திரம் !

    7.    சொத்து சேர்க்க இயற்கையை அழிக்க வாங்கவில்லை 
           சுதந்திரம் .

   8.    செத்து விடாமல்  சுற்றுசூழல் காக்கவே முழு சுதந்திரம் .

  9.     நாட்டுக்காக உயிர் நீத்த ராணுவ வீரர், தியாகிகளை 
          மதிப்பதற்காகவே  முழு சுதந்திரம் !

10,   தேசிய தலைவர்கள் சிந்திய ரத்தம் எழுதிய  இந்தியா எனும் 
        சித்திரம் 

11.  வேற்றுமையில் ஒற்றுமை கண்டு நாட்டு வளர்ச்சிக்கு உதவுவோம் ! 

12..   இளைஞ்சர்கள் கையில் ஆட்சி மாறட்டும். மக்களுக்கு நன்மை 
        பிறக்கட்டும்,

        முதலமைச்சர், பிரதமர்  யார் வந்தாலும் மக்களுக்கு நன்மை 
         செய்பவரையே   இச்சுதந்திரநாளில்  வரவேற்போம்  நன்றி !

மேலும் பாரதி கூறுகிறார் :  தாயின் மணிக்கொடி பாரீர் ! அதை தாழ்ந்து 
பணித்திட வாரீர்! ஓங்கி வளர்ந்த்தோர்  கம்பம் அதன் உச்சியின் மேல் எங்கள் தாயின் மணிக்கொடி பறக்குது பாரீர் !  வந்தே மாதரம் என்போம் நம்  பாரதம்  காப்போம்  எனக்  கூறுகிறார் !  இங்கே கவிதை பாட பாரதிதாசன், பாரதி இல்லாவிடினும் உங்கள் முன் 
பார்த்த சாரதியாக நின்று விடை பெறுகிறேன் !  

ஜெய் ஹிந்த் !


செவ்வாய், 4 ஆகஸ்ட், 2026

Sudanthirathinam - 2026

 


                                          சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம் 


          1. காசு கொடுத்து வாங்கவில்லை என்றாலும், பல உயிர்களை 
               காவு கொடுக்காத குடும்பங்கள் இல்லையென சொல்லும் 
              அளவுக்கு சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம் !

        2.  சுதந்திர தினம் கொண்டாடுவதை விட கொடுத்து உணர்வதே 
             சுதந்திரத்தின்  முழுமை !

        3.  எதை வேண்டுமானாலும் பேசி செல்ல வாங்கவில்லை சுதந்திரம் .
             பேசியதை செயல் படுத்துவதே  முழு சுதந்திரம் !

      4.   மதுவுக்கு  அடிமையாகி மாண்டபின், மானியம் வாங்கிட  
            வாங்கவில்லை சுதந்திரம் !

     5.    மாற்றி  முயற்சித்து மதியால் பிழைத்திடவே முழு சுதந்திரம்!

     6.   பதவி  வைத்து பத்தும் செய்ய வாங்கவில்லை சுதந்திரம் 
            பத்திரமாக மக்களை வாழ வைக்கவே முழு சுதந்திரம் !

    7.    சொத்து சேர்க்க இயற்கையை அழிக்க வாங்கவில்லை 
           சுதந்திரம் .

   8.    செத்து விடாமல்  சுற்றுசூழல் காக்கவே முழு சுதந்திரம் .

  9.     நாட்டுக்காக உயிர் நீத்த ராணுவ வீரர், தியாகிகளை 
          மதிப்பதற்காகவே  முழு சுதந்திரம் !

10,   தேசிய தலைவர்கள் சிந்திய ரத்தம் எழுதிய  இந்தியா எனும் 
        சித்திரம் 

11.   இளைஞ்சர்கள் கையில் ஆட்சி மாறட்டும். மக்களுக்கு நன்மை 
        பிறக்கட்டும்,

12.      முதலமைச்சர், பிரதமர்  யார் வந்தாலும் மக்களின் 
          நன்மை கொண்டு  இச்சுதந்திரநாளை வரவேற்போம்  நன்றி 

      தொகுத்தவர் : ரா.பார்த்தசாரதி 
 

வெள்ளி, 17 ஜூலை, 2026

எப்படி வாழ்ந்து காட்டவேண்டும் ?

 


                              


                                        எப்படி  வாழ்ந்து காட்டவேண்டும் ?


                 வெற்றிகள்  வேண்டுமா !  முயற்சி உடையவனாய்  வாழு !
               
                நன்மைகள் வேண்டுமா ?  என்றும்   நல்லவனாய் வாழு !

                நற்பெயர் வேண்டுமா ? நேர்மையுடையவனாய்  வாழு !

                நம்பிக்கை வேண்டுமா ?  துணிவுயுடையவனாய் வாழு !

               மகிழ்ச்சி  வேண்டுமா ?  பண்பாளனாய்  வாழு !

               வளர்ச்சி வேண்டுமா ?  உழைப்பவனாய்  வாழு !

               நிலைத்த உறவு வேண்டுமா ?  உண்மையானவனாய் வாழு !
  
              பாராட்டுக்கள் வேண்டுமா ?  விவேகமுள்ளவனாய் வாழு !

              இலக்கை அடைய வேண்டுமா ? உறுதியுள்ளவனாய் வாழு !

              ஆரோக்கியம் வேண்டுமா ?  சுறுசுறுப்பானவனாய்   வாழு !

              சாதனை புரிய வேண்டுமா ?  சோர்வில்லாதவனாய் வாழு !

             சிறப்புறவேண்டுமா ? சிறந்த சீந்தனையாளனாய்  வாழு !

             புகழ்ச்சி  வேண்டுமா ?  பக்குவமுள்ளவனாய்  வாழு ~

             தலைமையிடம்  வேண்டுமா ? நல்ல வழிகாட்டுபவனாய் வாழு !

               
             ரா.பார்த்தசாரதி 

               
               

             

             

 




                                   உண்மை  காதல் 


காதல் என்பது காத்திருந்து  அன்பின்   பரிமாற்றமே 
இருவிழிகளின்  ஈரத்தை  கசியவிடுமே 
இரு இதயங்களின்  சிறகடித்து பறக்கும் எண்ணமே 
உள்ளங்கள்  ஒன்றொடுஒன்று  மனதினில் பந்தாடுமே ,

ஆயிரம் உறவுகள் வந்தாலும், எட்டா உயரத்தில் இருந்தாலும்,
தேசம் விட்டு தேசம் சென்றாலும், தேகத்தில் தேங்கியே இருந்தாலும்,
சொந்தங்களும், பந்தங்களும், பாச மழைப்  பொழிந்தாலும் 
இறுதி மூச்சு வரை  மனதினால்  ஒன்று பட்டாலும் 

காலங்கள் கடந்தாலும், தலைமுறைகள் தழைத்தாலும் 
உள்ளத்தின் உள்ளே உறைந்து கிடைக்குமே உண்மைக்  காதல் !


ரா.பார்த்தசாரதி.

pen anrum inrum

 


                                                    பெண் அன்றும், இன்றும் 

            அன்று பெண் குழந்தை என்றால் ஏன் பிறந்தது என்ற கேள்வி ?
            இன்று பெண் வீட்டின் மஹாலக்ஷ்மி  பிறந்தது என்ற மகிழ்ச்சி 
            அன்று அடுப்பூதும் பெண்ணிற்கு படிப்பு எதற்கு என கேட்கப்பட்டது 
            இன்று  குடும்பத்தின் பல்கலைக்கழகம் என போற்றப்படுகிறாள்.
           அன்று பிறந்த வீட்டிற்க்கும், புகுந்த வீட்டிற்கும் அலைக்கழிக்கப்பட்ட 
                                                                                                                      ஓர்    ஊஞ்சல் 
           இன்று கணினியோடு  காவியம் படைக்கின்றாள். 
           இல்லத்திற்கும் அலுவலகத்திற்குமாய் அலைபாய்ந்து  வாழ்வைப்
           பலப்படுத்தும் அஸ்திவாரம் -பெண்  திகழ்கின்றாள் இன்று !
          அறிவைத்தானே பெருக்கச்சொன்னேன்,ஆடையை நானா 
          குறைக்கச்சொன்னேன் என்றான் பாரதி சொன்னாலும் 
          இன்று, காவல்துறையிலும், விளயாட்டுத்துறையிலும், பெண் 
          முன்னேறுவதை கண்டு, ஆணுக்கு, பெண் நிகரே என்று சொல்வார்.
          வள்ளுவனுக்கு வாசுகி,  சிவாஜிக்கு ஜீஜாபாய், காந்திக்கு
          கஸ்துரிபாய், ராமகிருஷ்ணா பரமஹம்சருக்கு சாரதா தேவி,
         உதாரணங்கள் ஆணின் வெற்றிக்கு பெண்ணே பின் நிற்கிறாள்
         பல்லாயிரம் பெண்கள் பாதகங்களைச் சாதகமாக்கி  உலக    
         வரலாற்றில்   உலாவருவதை காண்கிறோம் !
         கல்வி துறையிலும், காவல் துறையிலும், விண்வெளி, ஆன்மீகம்,
         என  பல துறைகளில் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.
         தரணி எங்கும் பெண்ணின் தடம்பதிப்பு ! எனும் உண்மைக்கு
         மறுப்பு சொல்வார் உண்டோ !
        விட்டுக் கொடுப்பதும் தட்டிக் கொடுப்பதும்
        பெண்மைக்கே உரிய நளினங்கள்தான் !
       பெண்ணே, கம்பனும், காளிதாசனும், கூறிய இலக்கணத்தை 
       பொய்யாகி  காட்டு
        மெல்லினத்தோடு வல்லினத்தையும் இணைத்துப் பார்!
       பெண்ணே !உன் இளம்கரங்கள் இரும்புக் கரங்களாகட்டும்!
       கேள்விக் குறியிலிருந்து பெண்ணினம் விலகட்டும் !
      ஆச்சிரியக் குறியாய் மாறி அகிலத்தையே இனி ஆளட்டும் !

     ரா.பார்த்தசாரதி 

          


         

          

          



        

dOCTORS DAY. 1ST JULY 2026




                           மெழுகு போன்று ஒளி தந்து தன்னை 
                           தானே உருக்கி ஒளி தருவது போல் 
                          உங்கள் வாழ்க்கை மெழுகு போல் 
                          உருகி கொண்டிருந்தாலும் பிற உயிரை 
                          காத்திட்டு தன்னுரையும் மதிக்காமல் 
                         சேவை செய்திடும் மனித தெய்வங்களே !

                          இரவு பகல் பாராமல் விழித்திடும் கண்களே !
                          உயிரைக் காக்கும் உயர்ந்த மந்திரமே !
                          வழியறிந்து மருந்தளிக்கும் தெய்வத்தின் தூதரே !
                          என்றும் மனித சமுதாயத்தில் நீங்கள் என்றும் 
                        உன்னத \மாண்பும், மாட்சிமையும் கொண்ட 
                         மருத்துவர்களே ! வாழ்க  வளமுடன் !
   
                      ரா.பார்த்தசாரதி 
----------------------------------------------------------------------------------------------------------