வாழ்க்கை ரகசியம்
புரியாது, புரியாது, வாழ்க்கை ரகசியம் புரியாது
வளரும் ஆசைக்கு அளவேது ! முடிவு ஏது !
முடிந்த பின், உலகம் நமக்கேது
முடிந்ததை நினைத்தால் பயனேது !
ஒரு சிலர் வாழ்வு தியாகத்தில் கூடும்
உரிமை, அன்பும் மறுபடி சேரும்
திருமணம் இரு மனமாகும்
பெண் மனம் தாய்மையை தினம் தேடும் !
பெருமைகள் பேசுபவர் பூமியில் பிறந்தார்
பிறந்தவர் தாயின் மடிதனில் வளர்ந்தார்
வளர்ந்தவன் வாழ்வில் கொடுப்பதை மறந்தான்
ஒருபிடி சாம்பலே முடிவெனஉணர்ந்தான் !
ஒரு சிலரே புகழோடு தோன்றுவர்
ஒரு சிலரே புகழோடு இறப்பர்
வாழ்க்கையில் பிறப்பும் இறப்பும் ஒன்றே
மானிடம் அறியாமல் திரிவதும் இன்றே !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக