கொள்கையா ! ! கொள்ளையா !!
அரசியல் தலைவர்கள் தனக்கென ஓர் கொள்கை !
அதனை பின்பற்ற வைப்பதே அவர்களின் கோரிக்கை !
இதனை விளம்பரப்புடுத்துவதே அவர்களின் வாடிக்கை !
இதனை இன்று கடைபிடிக்கத் தவறி விட்டார்களே !
தன் குடும்பம், தன் வாரிசு என நினைக்கின்றார்களே !
தன்னலம் கருதுபவர்கள், பிறர் நலம் கருத்தமாட்டார்களே !
நாட்டை , கொள்ளையடிப்பதே எண்ணமாக கொண்டவர்களே !
கொள்கையை கடைபிடிக்காமல் காற்றில் பறக்கவிட்டவர்களே !
தன் தவற்றை உணராமல், பிறரை குறை கூறுபவர்களே !
எல்லாம் செய்துவிட்டோம் என பொய்யுரை கூறுபவர்களே !
மக்களை அராஜகத்தால் அடக்க என்றும் நினைப்பவர்களே!
கொள்கையின்றி, கொள்ளையில் கூட்டு சேருபவர்களே !
தர்மம், நியாயம் பற்றி சிறிதும் கவலைப்படாதவர்களே !
கொள்கையின்றி, கொள்ளையடித்து நரகம் அடைபவர்களே !
உங்களுக்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள் தமிழ் மக்களே !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக