செவ்வாய், 2 அக்டோபர், 2018

Gandhi Kallakivittaar






                           காந்தி   கல்லாகி விட்டார் 


உண்மை  எங்கே  விலை  போயிற்று எனத்  தேடுவேன் 
நேர்மை எங்கே என்று எல்லோரிடந்திலும் கேட்பேன் 
எளிமை எங்கே என தேடி அலைந்து கொண்டிருப்பேன் 
தூய்மை  எங்கே என மனம் குமுறி துடித்துபோவேன் !

சத்யதிற்கே ஒரு சத்யசோதனையா என எண்ணிடுவேன் 
அகிம்சை  என்ற  வார்த்தை காணாமல் போயிற்றே  என்பேன் 
மனித நேயத்தை இந்ந்நாட்டில் எங்கே என்று கேட்பேன் 
நான் சொன்னதெல்லாம் எங்கே போயிற்று என் நினைப்பேன் !

அன்று வெள்ளையரை வெளியேற அமைதி போரை துவக்கினேன் 
இன்று மக்கள் தண்ணீருக்காக போராட்டம்  நடக்கின்றதே
எங்கும் ஊழலும், லஞ்சமும் தலை விரித்து ஆடுகிறதே 
நிலைகெட்ட  அரசாங்கத்தை நினைத்தால் தலை சுற்றுகிறதே !

நான் பாடுபட்டதெல்லாம் நாட்டின்விடுதலைக்காகவே 
இன்றைய தலைவர்கள் பாடுபடுவது தன் சொந்தங்களுக்காகவே 
என்னை தந்தையாக  நினைத்த  இந்திய மக்களே 
என் சொற்களை மந்திரமாக நினைப்பது எக்காலத்திலே!

என் மதிப்பு, என் தலை, ரூபாய் நோட்டின் முகப்பிலே ,
என் கொள்கைகள் எல்லாம் வீசபடுகின்றதே தெருவிலே,
ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்றேனே 
இன்று காணமுடியாமல் கடற்கரையில் கல்லாய் நிற்கின்றேனே !


ரா. பார்த்தசாரதி