காலமும் நேரமும்
காலமும், நேரமும் மனிதனுக்காக காத்திராது
கடந்து விட்ட நேரமும் திரும்ப வாராதது
காலத்திற்கு ஏற்ப, எங்கும் நேரம் மாறுபடுமே
நாட்டிற்கு நாடு, மாநிலத்திற்கு ஏற்ப மாறுபடும் !
கடந்து விட்ட நேரமும் திரும்ப வாராதது
காலத்திற்கு ஏற்ப, எங்கும் நேரம் மாறுபடுமே
நாட்டிற்கு நாடு, மாநிலத்திற்கு ஏற்ப மாறுபடும் !
இவை எல்லாம் சூரிய உதயத்தால் மாறுபடுமே
காலத்திற்கு ஏற்ப நாம் வேலை செய்யவேண்டுமே
நேரத்திற்கு தகுந்தாற்போல் மாறுவது நம் கடமை
இதுவே மனிதர்கள் எல்லோருக்கும் பொது உடைமை !
கடல் அலையும், நேரமும் மனிதனுக்காக காத்திராது
சந்தர்ப்பம் வரும்போது அதனை நழுவவிடக்கூடாது
காலமும் , நேரமும் பொன் போன்றதன்றோ
அதனை மதித்து போற்றுதல் நம் கடமையன்றோ !
சூரியனும், சந்திரனும் காலத்தை உணர்த்துபவர்களே
மானிட பிறப்பை உதயாத்தி வைத்து கூறிப்பார்களே
காலத்தினால் செய்த நன்றியை மறக்க மாட்டார்களே
எங்கே சென்றிடும் காலம் ! நம்மையும் வாழவைக்கும் !
எங்கே சென்றிடும் காலம் ! நம்மையும் வாழவைக்கும் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக