வியாழன், 5 அக்டோபர், 2023

தமிழனே விழித்திரு எதிர்த்திடு

 



                                                


                                        தமிழனே  விழித்திரு  எதிர்த்திடு 

       வேற்று மதத்தினர் இந்துக்களையும்  தமிழையும் இழிவுபடுத்திறார்களே  
       சுதந்திரம் அடைந்து எழுபத்தாறு ஆண்டுகள்  முடிந்தது ? ஏன் இந்த நிலை 
       வேற்றுமையில் ஒற்றுமை பெயரளவில்தான் ,இதில் உண்மைஇல்லையே 
        மணிப்பூர் இன பிரிவிற்கு சமாதானமும் தீர்வும் இன்றைளவு ஏற்பட்டதா ? 

       தமிழனை பிறர் ஆட்சி  செய்கிறான்? ஜாதி, மதத்தால் பிளவுபடுததுகிறான் 
       இந்துமதம் , சனாதனம் ஒன்று. அவற்றை நோயாக கருதுகிறார் 
       என்று  தமிழ் நாட்டிற்கு விடியல் ஏற்படுமோ? தமிழனே சற்றே விழித்திரு!!
       சனாதானத்தை  பேசுபவனுக்கு, சாராய கடையை மூட மனம் வருமா ?

       சமூக நீதி பேசுபவன், மலம் கலந்த நீரைத்தான்  உன்ன மனம் வருமா ?
       மலம் கலந்தவனை கண்டுபிடிக்க தெரியாத ஓர் அரசு? இது மானக்கேடு !
       விவசாயி;க்கு தான் விளைத்த பயிருக்கு விலை நிர்ணயிக்க முடிவதில்லை
      விளைந்த நெல்லுக்கு அதனை சேமிக்க பாதுகாப்பு இல்லை !

       சாராய கடை த்திறப்பதிலும் , நீர் வளம் கெட மணல் கொள்ளை 
      அநீதியை கேட்டால் கட்ட பஞ்சாயத்து ராஜ்யம், அடிதடி கொலை 
       தன குடும்பம், தன மக்ன், மருமகன், என்ற ஓரே  ராஜ்யம் !
      காவலும், நீதி துறையும், அவர்களின்  கைபொம்மைகள் !

      எல்லா திட்டத்தையும் நிறைவேற்றியதாக ஓர் பொய் பிரச்சாரம் !
      தமிழ் மக்களை குடிகாரனாக ஆக்கியதே இந்த அரசு !
      குடியால் அவர்கள் கெடுவதை வேட்டிக்கை பார்க்கிறார்கள் !
      சாரயத்தில் சம்பாதித்தை , பெண் உரிமை பணம் கொடுக்கிறார்கள் !

      கள்ளச்சாராயம் சாப்பிட்டவனுக்கு மான்யம் பத்து லட்சம் 
     விவசாயி  கடனில் இறந்தால்  மான்யம்  இரண்டு லட்சம் 
    நீட் தேர்வில் மாணவன் இறந்தால் மான்யம் ஐந்து லட்சம் !
    என்னே  நமது அரசின் சமநோக்கு பார்வை! சிந்தியுங்கள்!

    பிறர் இந்துமதத்தை இழிவு படுத்துவதை தட்டி கேளுங்கள் !
    கோடி, கோடியாய் சம்பாதிப்பதை தடை செய்யுங்கள் !
     ஓட்டுக்காக பணம் வாங்குவதை தவிர்த்துவிடுங்கள் !
     நல்லாட்சிக்கு உதவிக்கரம் நீட்டுங்கள் !இதுவே குறிக்கோள் !

    மாற்றம் ஒன்றே மாறாதது !மாற்றத்தை கொண்டுவருவோம் 2024 !!
    தமிழகத்தை  தீயசக்திகளிடமிருந்து முயன்று மீட்டெடுப்போம் !!

    மானமுள்ள ஓர் தமிழனின் வேண்டுகோள் !
 

         



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக