செவ்வாய், 26 மே, 2015

முதுமை




                                           முதுமை 

முதுமை என்பதே மனிதனின் அனுபவ முதிர்ச்சி
உடலும் உள்ளமும் சற்றே  அடையும் தளர்ச்சி
துணை  தடுமாறினாலும் மனம் கொள்ளும் எழுச்சி
வீ ழ்ந்தாலும்  கைகொடுத்து தூக்கிவிடும் முயற்சி !

அனுபவத்திற்கும், வயதிற்கும், மதிப்பு  இல்லை
பெற்றதும்  உடன்பிறந்ததும் உதவ நினைப்பதில்லை,
ஏனோ கடனுக்காக  உதவும் நிலைமை  இக்காலத்திலே
உள்ளத்தில் கலங்கும் முதுமைக்கு நிம்மதி எக்காலத்திலே ?

அடிபட்டு, இடம் தேடித், தட்டிதடும்மாறும் நெஞ்சங்கள்
பாசத்தினால் விடுபட முடியாத  முதியோரின்  எண்ணங்கள்
இளம் ஜோடிகள் போல் காதலும், காமமும்  இல்லை
முதிர்ந்த காதல்தான், ஆனால்  காமம் இங்கில்லை  !

முதுமை காதல் என்பது தாஜ் மஹாலின்  நினைவு
இளமைக் காதல் என்பது மனக் கோட்டையின் வளைவு !
இன்று  முதுமையின் அடைக்கலம் முதியோர் இல்லங்கள்
இதனை  மாற்றாதோ  இளமையின்  எண்ணங்கள் !

தனக்காக  வாழாது  பிறருக்காக வாழும்  முதுமை
என்றும் உறவுக்கும், பாசத்திற்கும் ஏங்கும் தனிமை
இளமையின்  முதிர்ச்சியே  மனித இனத்தின்  முதுமை
தன் வினை தன்னைச் சுடும் என்பதுதான் பொதுஉடைமை !

முதுமையை இளமையாக்கி நெஞ்சுரத்துடன் நடைபோடுங்கள்
நட்பையும், உறவையும் என்றும் தவிர்த்து விடாதீர்கள்
நடைப்பயிற்சியும், யோகாவும் செய்து  உடலை பேணுங்கள்
எங்கே சென்றிடும் காலம் நம்மை, வாழ்விக்கும் என எண்ணுங்கள் !


ரா.பார்த்தசாரதி

.


.

சனி, 16 மே, 2015

ஆறாம் ஆண்டு தொடக்கம்

ஆறாம் ஆண்டு தொடக்கம் 


நான்கு எழுத்திற்கு  ஓர்  சிறப்புண்டு,
வல்லமை என்கிற  பெயருண்டு 

ஆறாம் ஆண்டு அடியெடுத்து  வைத்து,
ஒப்பற்ற  மின்னிதழாய் தரணியில் நிலைத்து ,

கவிஞ்சர்களும், எழுத்தாளர்களும் ஒத்துழைப்பிணை நல்கட்டும்  
நற்றமிழின் நல்லிதழாய், என்றும் திகழட்டும் ,

ரா.பார்த்தசாரதி 

திங்கள், 11 மே, 2015

படக் கவிதை-12

                                                              படக் கவிதை-12


ஒரு மாற்றுதிறனாளியை  ஊக்கப் படுவதற்காக எழுதுகின்றேன் 

பயிருக்கு காவலாய் அன்றாடம் வந்து நிற்கின்றேன் 
குத்தகைக்கு கொடுத்து விட்டு பையிரிடமுடியாமல் தவிக்கின்றேன் 
இரண்டு பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி நினைக்கமுடியவில்லை 
என் குடும்பத்தின் நிலை கண்டு அவர்களின் பசி தீர்க்கமுடியவில்லை!

பயிர் செய்யவும்  வழி தெரியவில்லை, உடம்பும் ஒத்துழைக்கவில்லை  
நான் ஒற்றைக் கால் நொண்டியானாலும் எனது நம்பிக்கை முடமாகாது,
என் குடும்பத்தை தவிக்கவிட  மனமில்லை, வாழா வழி செய்வேன் 
ஒருவனை பலூன் விற்கவும்,  துணைக்கு ஒரு பிள்ளையும் இருக்கிறதே !

என்னைப் போன்ற மாற்று திறனாளிக்கு  மனதில் பலமுண்டு 
வாழ்க்கையில்  முன்னேற  எனக்கு என்றும் திறன்னுண்டு 
வாழ்க்கையில் ஏமாற்ற பலரும், சிலரே உதவி செய்வதுண்டு 
எங்கே சென்றிடும் காலம்! அது  என்னையும்  வாழவைக்கும் !


  ரா.பார்த்தசாரதி 






   






ஞாயிறு, 10 மே, 2015

Manavarkal Yean athiga Mark Peruvathillai




                          ஏன் மாணவர்கள் தேர்வில்
                         அதிக மதிப்பெண்கள் பெறுவதில்லை....?


அது மாணவர்களின் தவறு கிடையாது,
அவர்களுக்கு படிப்பதற்கு நேரமே கிடைப்பதில்லை..
வருடத்தில் 365 நாட்கள்
மட்டுமே உள்ளது தான் ஒரு பெரிய
குறை..
உதாரணத்திற்கு ஒரு மாணவனின்
ஒரு கல்வி ஆண்டை எடுத்துக்கொள்வோம்..
1.ஒரு வருடத்திற்கு 52 ஞாயிற்றுகிழமைகள்..
மற்ற நாள்கள் 313 (365-52=313)
2.கோடை விடுமுறை 50. ரொம்ப வெப்பமான
காலம் என்பதால் படிப்பது கஸ்டம்.
மீதி 263 நாள்கள் (313-50=263).
3. தினமும் 8 மணி நேரம் தூங்கும் நேரம்
என்பதால்
(கூட்டினால் 122 நாட்கள் வருகிறது).
மீதி 141 நாட்கள் (263-122=141).
4. 1 மணி நேரம் விளையாட்டு நேரம் வளரும்
பசங்களுக்கு நல்லது. நாள் கணக்கு படி 15 நாள்.
மீதி 126 நாட்கள் (141-15=126).
5. 2 மணி நேரம் சாப்பாட்டு நேரம் . நன்றாக
மென்று சாப்பிடு என்று அறிவுறுத்தப்படுவதால்
30 நாள்கள்.
மீதி 96 நாட்கள் (126-30=96).
6. 1 மணி நேரம் பேசியே கழிக்கிறோம்.
நிறைய பேசினால் நிறைய கத்துகலாம். 15 நாள்
வருகிறது.
மீதி 81 நாட்கள் (96-15=81).
7. ஒரு வருடத்திற்கு 35 நாட்கள்
தேர்வு எழுதியே கழிப்பதால் , மீதி 46 நாட்கள்
(81-35=46).
8. காலாண்டு,அரையாண்டு, பண்டிகை தினம்
விடுமுறைகள் 40 நாட்கள்..
மீதி 6 நாட்கள்(46-40=6).
9. உடம்பு சரியில்லாமல் எடுக்கும்
விடுப்பு குறைத்தது
3 நாட்கள். மீதி 3 நாட்கள் (6-3=3).
10. சினிமா, உறவினர் திருமணம்,திருவிழானு 2
நாள் போய்விடும். மீதி ஒரு நாள்
(3-2=1).
11. அந்த ஒரு நாளும் அந்த பையன் பிறந்த நாள்..
பின்ன எப்படி தேர்வில் அதிக மதிப்பெண்கள்
பெறமுடியும்....?
R.Parthasarathy

செவ்வாய், 5 மே, 2015

இன்றைய நிச்சியதார்த்தம்


                                             இன்றைய நிச்சியதார்த்தம் 

தாயும், தந்தையும்  ஜாதகம் பார்த்தார்கள் 
உன்னை எனக்கு  முடிவு செய்ய நினைத்தார்கள், 
ஆம் உன்னை ஸ்கைப்பில் காண விரும்பினேன், 
உன் பெற்றோர் அனுமதியுடன் தொடர்ப்பு கொண்டேன்!  

நான்  கடின உழைப்பால் முன்னேறினேன்,  
பிறர் உதவி கொண்டு முன்னேறமாட்டேன்,
நீயும் என்னைப்போல் இருக்கவேண்டும் என நினைப்பேன்,
 எதையும் தனித்து நின்று சமாளிக்க வேண்டுமென  எதிர்பார்ப்பேன் !

உரையாடும்போது  உன் குடும்ப நிலையை கூறுகின்றாய் 
உன் எதிர்கால படிப்பிக்கும் அடி போடுகின்றாய் 
உன் குடும்பத்திற்கு ஒரு பங்கு அளிக்க வேண்டுகிறாய்,
நீயும் நானும் வாழ்கையில் சரிபாதி என்கிறாய் !

வரும் முன்னே பல எதிர்பார்ப்புக்கள், கட்டளைகள் 
இதற்கெல்லாம்  ஒத்துக்கொண்டால்தான்  திருமணம் 
நிச்சியக்கப்பட்டும்  நின்றுபோன திருமணங்கள்,
எதையும் சாதரணமாக கருதும் இக்கால திருமணங்கள்  !

திருமணம் என்பது சொர்க்கத்தில்  நிச்சய்யக்கபடுகிறதா !
தாய் தந்தையர் பார்த்து  நிச்சயக்கப்படுகிறதா !
ஆண், பெண்  நேரிடை    சந்திப்பில் முடிவாகிறதா !
ஜாதகத்தால்  நல்ல ஜோடிகள் புறகணிக்கபடுகிறதா !

திருமண  வயது வந்தாலே  ஆண், பெண்ணிற்கு பல எண்ணங்கள்
எதையும், பிறர் நிலையில் நின்று நினைக்கும்  மனிதர்கள்  
இரு கைகள் இணைந்தால்தான் வாழ்க்கை என உணரவேண்டும்  
வரதட்சணை இல்லாத திருமணமே சிறந்த திருமணமாக கருதவேண்டும் 

ரா.பார்த்தசாரதி      



   

திங்கள், 4 மே, 2015

தாய்மையின் மகத்துவம்

                                                 தாயும், தாய்மையும் 


 ஆணிற்கு கிடைக்காத  ஓர்  பரிசு 
பெண்ணிற்கு மட்டும் கிடைக்கும் பரிசு 

தன் வயிற்றில் ஒரு உயிரை வளர்கின்றாள் 
கவள உணவையும் குழந்தைக்காக  உண்கின்றாள் !

என்னதான்  விஞ்ஞானம், வசதிகள் வளர்ந்தாலும்,
ஆண்  தன்னைப் பற்றியே  நினைத்திருந்தாலும் ,

பத்து நிமிடங்கள் நின்றாலும் கால் கனத்து வலிக்கும்,
பத்து மாதம் சுமந்தாலும் கருவறைச்சுமை வலிப்பதில்லை !

வலி என்றாலே உயிர் போகிறது என்பார்கள்
இந்த வலியால் மற்றொரு உயிர் வருவதை காண்பார்கள் !

குழந்தை, சிறுமி, குமரி,மனைவி என்கிற பல உறவானதே ,
தாய்மையில்தான்  ஒரு பெண் தன்னிறைவு பெறுகின்றதே !

குழந்தையை கொஞ்சுவது ஆணுக்கும், பெண்ணுக்கும் பேரின்பம்,
குழந்தையை  கட்டி அணைப்பதில்தான் தாய்க்கு தனி இன்பம் !

தாய்மையின் மகத்துவம்,  என்பது பெண்ணின்  பெருமை 
தத்துரூபமாகவும், தத்துவமாகவும் இருப்பதே உண்மை!  


ரா.பார்த்தசாரதி