செங்கோல் ஆட்சியா ! சிதைக்கும் ஆட்சியா !!
செங்கோலை மதிப்பளித்து ஆட்சி செய்யலாமே !
ஆள்பவர், மக்களின் நலனைக் கருத்தலாமே !
மதத்தையும், ஜாதியையும் காட்டிப் பிளவுபடுத்தலாமா !
ஆக்கபூர்வமான தொழில்களுக்கு தடை செய்யலாமா !
விவசாய்க்கும், ஏழைகளுக்கும் உதவி அள்ளிக்கலாமா !
சொல்வது ஒன்று, செய்வது ஒன்று, என்று இருக்கலாமா !
தப்பு செய்தவனை, தண்டனையிலிருந்து தப்பவிடலாமா !
வேலியே பயிரை மேய்வதுபோல் ஆட்சி இருந்திடலாமா !
உனக்கென, எனக்கென என்று பங்கு பிரிக்கலாமா !
எஙகே நீதி ! தர்மம் என நினைக்கத் தூண்டலாமா !
நாடும், மாநிலமும் எக்கேடுகெட்டு இருந்தாலென்ன!
பணம் சேர்பதையே, குறிக்கோளாக இருந்திடலாமா !
மக்களை மாக்கள் என நினைத்துக்கொள்ளலாமா !
சிறுதொகை அளித்து பெரும் தொகையை அடையலாமா!
சிறுவெள்ளத்தை பெருவெள்ளம் காணாமர்செய்யுமா!
நியாயம், தர்மம்,மனிதநேயம், இவ்வற்றைதூக்கிடலாமா !
நெஞ்சம் பொறுக்கவில்லையே ! நிலைகெட்ட மானிடர்களே
பாரதிபோல் முழங்கிடுங்கள்!1 எதிர்த்து செயலாற்றுங்கள் !!
நல்லவர்களையும், நன்மைசெய்பவர்களை ஆதரியுங்கள் !
ஒன்று கூடுங்கள் !! நல்லாட்சிக்கு வழிசெய்யுங்கள் ! !
ரா.பார்த்தசாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக