தமிழும், தமிழ் மக்களும்
தமிழனின் படைப்பிற்கு உலகில் ஈடு இணை உண்டா ?
வைணவர்கள் ஆற்றிய தொண்டிற்கு இணை உண்டா ?
சைவர்கள் ஆற்றிய தொண்டிற்கு ஈடு இணை உண்டா ?
நம் இதிகாசங்களுக்கும், புராணங்களுக்கும் இணை உண்டா ?
கல் தோன்றா காலத்தே, முன் தோன்றி மூத்தகூடி !
எனது தமிழ் பழமையான மொழியாக கருதப்பட்டதே !
மற்ற மொழிகள் யாவும் எம்மொழிக்கு பிற்பட்டதே !
சேவையும். கண்டுபிடிப்பும் என்றும் இன்றியமையானதே !
கண் பார்வையற்ற ஹெலன் கேளரை நாம் பாராட்டுகின்றோம்
ஆனால் ராமபத்ராசாரியாரை நினைவில் கொள்ளமாட்டோம்
முயற்சியால் பல கண்டுபிடிப்புக்களை செய்தவர் G D Naidu!
மூலிகை பெட்ரோல் அறிமுகப்படுத்தியவர் ஸ்ரீ ராமர் பிள்ளை
பல கண்டுபிடுப்புகளை இந்திய விஞ்ஞானிகள் செய்தனரே
அப்துல்கலாம், சர் சி.வி ராமன், சமுதாயத்திற்காக செய்தனரே
ஒன்று மட்டும் நிரந்தரம், விஞ்ஞானிகளை வாழ விடுவதில்லை
அரசியல் செய்து, கண்டுபிடிப்பில் நாட்டம் கொள்வதில்லை !
எங்கே இவர்களால் நாடு முன்னேற்றம் அடைந்துவிடுமோ ?
தங்கள் ஈட்டும் லாபத்தில் துண்டு விழுமோ என அஞ்சுமோ !
நாட்டைப்பற்றிகவலைஇல்லை,என்றும் சுய நலக் கொள்கை !
நாடு எப்படி போனால் என்ன ! தன குடும்ப முன்னேற்றமே !
சிறுதொகை கொடுத்து, பெரும்தொகை அடைய வேண்டுமே!
இதனையறியா பாமரமக்கள் வாழ்க்கை என்றும் பாழ்படுமே
அன்று நடந்த வெள்ளையன் ஆட்சியால் நன்மை பெற்றோமே !
இன்று நடக்கும் கொள்ளையர் ஆட்சியில் நாடே நலிவுற்றதே !
தமிழ் மக்களே! சுதந்திர உரிமை கொண்டுஎதிர்த்துநில்லுங்கள்
மக்களே, குடியரசு நாட்டில் வாழ்கிறோம் என் நினையுங்கள் !
ஜனநாயகத்தில் உணவு, உடை, உறையுள் பெற வழி செய்யுங்கள்
மக்கள் குரலே! மகேசன் குரல் என எங்கும் ஒலித்திடுங்கள் !
தன்னலமற்ற தலைவனையே பதவி ஏற்க உதவிடுங்கள் !
வாழ்க தமிழ் திருநாடு ! வாழ்க பாரத நாடு !வாழ்க ஜனநாயகம் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக