வியாழன், 29 டிசம்பர், 2022

Vasumathi Sridharan

 



         1.  அலர்மேலுமங்கை சமேத, ஸ்ரீநிவாசப்  பெருமாள் ஆசியுடன் 
              சதாபிஷேக  விழா !

        2.  ஆண்டவன் ஆஸ்ரமத்தில்  01-01-2023 அன்று நடக்கும் விழா 
              திரு. ஸ்ரீ. ஸ்ரீதரனுக்கும் , திருமதி வசுமதிக்கும் சதாபிஷேக விழா !

      3.    அகவை அறுபதும், எண்பதும் என்றும் சிறப்புடையதன்றோ 
              மகள் ஸ்ரீமதியும், மகன் விஜய்யும், தலைமையேற்று நடத்துவதும் 
                                                                                                       பெருமைக்குரியதன்றோ !
     4.      ஆயிரம்  நிலவை  கண்ட  இல்லறத்  தம்பதிகளே 
              என்றும் வாழ்வாங்கு வாழ வேண்டும் வையகத்திலே !

     5.      சதாபிஷேக விழா என்றாலே ஆசி வழங்குவதாகும்,பெறுவதாகும் 
               அகிலத்தில் சிறந்தது தாய் தந்தையரின்  ஆசியாகும் !

    6.      காலமும், காட்சிகளும்  என்றும் உலகில் மாறும் 
             கணவன், மனைவி உறவே என்றும் நிலைத்து வாழும் !

   7.      குடும்பம்  ஒரு கதம்பம், குடும்பம் ஒரு பல்கலைக்கழகம் 
            குடும்பத்தை ஆணிவேராய் தாங்குவதும்  தலைவனாகும் !

   8.      வயதில்  சிறியவர்கள் அவர்களிடம்  ஆசிப்பெறட்டும் 
            வயதில் பெரியவர்கள் அவர்களுக்கு  ஆசி வழங்கட்டும் !

  9.     நான்கு எழுத்திற்கு,நான்கும் தெரிந்தவர்கள் என்ற பெயருண்டு 
           ஸ்ரீதரன் , வசுமதி  என்ற பெயருக்கும் நான்கு எழுத்துண்டு !

10.    உற்றாரும், உறவினர்களும், ஒன்றுகூடி  விருந்து உண்ணட்டும் 
        ஆயிரம் பிறை கண்டவரை ஸ்ரீரங்கம் ஆண்டவன் ஆசிர்வதிக்கட்டும் ! 

11,   அன்பும் அறனும் உடைத்தாயின், இல்வாழ்க்கை 
         பண்பும்  பயனும் அது,
                                                                                   
                                                             ரா.பார்த்தசாரதி - 8148111951
           

     

செவ்வாய், 20 டிசம்பர், 2022

Ennaumum Sinthanaiyum

 


எண்ணமும், சிந்தனையும்!
______________________________________

எண்ணமும் செயலும் ஒன்றுபட வேண்டும்
வாழ்வினில் உயர்ந்தநிலை பெறவேண்டும்!
நாம் சிந்திப்போம்! கடலின் வீரியத்தை
எழும்பியடங்கும் அலைகளே உணர்த்தும்!

மரத்தை எண்ணிச் சிந்தித்தால் அதில் துளிர்க்கும்
இலைகளே அதன் பசுமையே நமக்கு உணர்த்தும்!
நெருப்பினைச் சிந்தித்தால் உமிழப்படும்
வெப்பமும் வெளிச்சமும் ஆற்றலை உணர்த்தும்!

சித்திரங்கள் என்பது வண்ணங்கள் அன்றி வேறில்லை
நாம் என்பது நம் எண்ணங்கள் அன்றி வேறில்லை
நமக்குள் தோன்றி மறைந்தாலும் நம்மை நிழலாக்கி விட்டுத்
தம்மை நிஜமாக்கி கொள்ளும் தந்திரம் மிக்கவை நம் எண்ணங்கள்!

நம் எண்ணங்களே உணர்த்துகின்றன நம்மை நமக்கும் பிறர்க்கும்
துணிந்தபின் மனமும் எண்ணமும் துயரம் கொள்ளாது என்றும்!
துயரமடைந்த எண்ணங்களுக்கு அதற்குமாறாக உயரத்திற்கு
அழைத்துச் செல்லத் தெரிந்தவை நம் உத்வேக எண்ணங்கள்!

நமக்குள் தோன்றும் எண்ணங்கள் ஆயிரம் இருந்தாலும்
நல்லெண்ணம் தீயஎண்ணம் என மறைந்திருந்தாலும்
தம்மை நிஜமாக்கிக் கொள்ளும் தந்திரம் மிக்கவை நம் எண்ணங்கள்!
நல்லெண்ணமும், நற்செயலும் வாழ்வின் வழிகாட்டி என நினையுங்கள் !

நல்லதே நினையுங்கள் ! நல்லதை செய்யுங்கள் !









மனிதனே சற்றே நினைத்துப்பார்
______________________________________

எல்லாவற்றிற்கும் காரணம் ஆசை என்று அறிந்தே
நம் கைவிட்டு போகும் நாணயமில்லாத நாணயங்கள் !

பேராசையால் கைதவறிய வாய்ப்புக்கள்
நம்மை பார்த்து தொலைவில் இருந்தபடி நகைக்கின்றது !

மனதை கல்லாக்கி கைக்கு எட்டியதை
வாய்க்கு எட்டாததைக் கண்டு ஏமாந்த போது
வறட்டுக் கவுரத்திற்காக விலக்கி வைத்தால்
புரிந்ததும், புரியாததும் சேர்ந்து
தொலைந்துபோன காலகட்டத்தில் !

பெருமைக்காக நட்புகொண்டு, கைகுலுக்கி,
அவசியங்களுடன், அத்தியாவசியங்களும்
இழக்கம் பொழுது ,ஏற்பட்ட இழப்பின் வலிகள் !

மூட நம்பிக்கையுடன் ஜாதி, மத விழுதுகளை நம்பி,
பகுத்தறிவு வேர்களை புறந்தள்ளியதால்
அவனியில் சிக்கித் தவிக்கும் மனிதம்!

கிடைத்ததை கொண்டு திருப்தி கொள்ளாமல்
கடந்ததை எண்ணி வருந்துவதால் எக்ககாரணம்மின்றி
கரைந்துபோகும் மனிதம்.!

எண்ணுபவர் – விழிப்பர்
விழிப்பவர் – உழைப்பர்
உழைப்பவர் – உயர்வர்
உயர்வோர்க்கே இவ்வுலகம்!

இவையாவும் உய்வோர்க்கு
புரிதல் எப்போது;
மனிதமும், மனிதநேயமும் உயர்வதெப்போது?

 

செவ்வாய், 13 டிசம்பர், 2022

New year 2023

 


     புத்தாண்டே ஒற்றுமை மலராதோ !!!                 

புலரும் பொழுதாய்
புத்தொளி பரப்பும்

புத்தாண்டே !


பூமியெங்கும்
அமைதி மட்டும்

ஆட்சி புரியாதோ

புத்தாண்டே
!

நாட்டுக்கு, நாடு சமாதானம் 
தானமாய் கிடைக்காதோ 
மக்கள் இறப்பினை 
சற்றே நினைக்காதோ !
புத்தாண்டே !

மண்ணில் விழும் மழைத்துளியும்
விண்ணில் வீசும் 
காற்றும் 
யாவருக்கும் பொதுதானே
புத்தாண்டே
!


*நதியால் இணைந்த
மாநில மக்கள், 
அணையால் 
பிரியும் அவலமும் அமிழ்ந்து போகாதோ
புத்தாண்டே
!

நம்பிக்கை துரோகமும் 
நயனவஞ்சகமும் கூடஇருந்தே  குழி
பறிக்கும்  கூட்டங்களின் 
எண்ணங்கள் மாறாதோ                           
புத்தாண்டே!

வெள்ளத்தால் சேதமுற்ற 
பயிருக்கும், வீடு, வாசல் 
இழந்தோர்க்கும் ஆவண 
அரசு செய்யாதா  புத்தாண்டே !

சுயநலங்களும் சூழ்ச்சிகளும்
சுவடு தெரியாமல் மறைந்து,

மனித நேயம் மலரட்டும் 
புத்தாண்டே !

ரா.பார்த்தசாரதி