வெள்ளி, 21 ஜனவரி, 2022

Unmai Kaadal

 


                                             உண்மை காதல் 


காதல் என்பது காத்திருந்து  அன்பின்   பரிமாற்றமே 
இருவிழிகளின்  ஈரத்தை  கசியவிடுமே 
இரு இதயங்களின்  சிறகடித்து பறக்கும் எண்ணமே 
உள்ளங்கள்  ஒன்றொடுஒன்று  மனதினில் பந்தாடுமே  !

ஆயிரம் உறவுகள் வந்தாலும், எட்டா உயரத்தில் இருந்தாலும்,
தேசம் விட்டு தேசம் சென்றாலும், தேகத்தில் தேங்கியே இருந்தாலும்,
சொந்தங்களும், பந்தங்களும், பாச மழைப்  பொழிந்தாலும் 
இறுதி மூச்சு வரை  மனதினால்  ஒன்று பட்டாலும்  !

காலங்கள் கடந்தாலும், தலைமுறைகள் தழைத்தாலும் 
உள்ளத்தின் உள்ளே உறைந்து கிடைக்குமே உண்மைக்  காதல் !



 ரா.பார்த்தசாரதி

திங்கள், 3 ஜனவரி, 2022

 


                                 பொங்கல் பண்டிகை 


தையிலே உத்திராயணம்  உதித்து  வரும் காலம் 
உதய சூரியனை வழிபடும் சங்கராந்தி  காலம் 
உழவர்கள் விளைச்சலை கொண்டாடும் காலம்.
தை மாதத்தில் காணும் பொங்கல் விழாக் காலம் !

உழவர்கள்  உவகையுடன் கொண்டாடும் பண்டிகை 
விவசாயமும், உழவர்களும் பாதிப்பு அடைந்தது வெள்ளத்தாலே,
திறமும், உறுதியும், கொண்டு வெற்றி காண்போம் உழைப்பாலே,
இயற்கை உரமும், புதுமை புகுத்தி வெற்றி காண்போம் விவசாயத்திலே!

உழவன் சேற்றினிலே இறங்கினால்தான்  நமக்கு சோறு 
நகர்வாழ் மக்கள் அறியாமல் உலாவருவதைப் பாரு
விவசாயம் நமது நாட்டின் முதுகெலும்பு  என நினைத்திடுவோமே,
விவசாயி  நலனில் அக்கறை கொண்டு  உதவி செய்துடுவோமே!

கரும்பின் கணுவில் கரும்பு  துளிர்த்து  வளர்ந்திடுமே !
உழவன் உழைப்பாலே விவசாயம் வளர்ச்சி அடைந்திடுமே !
விவசாயிக்கு முக்கிய பண்டிகை பொங்கல் திருவிழா !
சூரிய பகவனை நினைந்து கொண்டாடும்  திருவிழா !

பழையன கழிதலும், புதியன புகுதலுமே  போகிப்பண்டிகை,
பிடி வைக்கும் பெண்கள் கொண்டாடும் கணுப் பொங்கல்,
கால்நடைகளுக்காக  கொண்டாடும்   மாட்டுப் பொங்கல்,
உறவும், நட்பும், பரிமாற்றம் கொள்ள  காணும் பொங்கல்!  

உழவர்களின் உரிகைக்காக கைகோர்த்து  நிற்போமே!
 வெள்ளத்தால்  ஏற்படும் நஷ்டத்தை அரசு ஈடுசெய்ய வேண்டுவோமே !
கரும்பும், பொங்கலும், இறைவனுக்கு படைப்போமே !,
குடும்பத்துடன் பொங்கலோ பொங்கல் என கொண்டாடுவோமே ! 


ரா.பார்த்தசாரதி

Ruthran and varichaa moonrezhuthu

  


                                                    மூன்றெழுத்து

   கவிபரணி ஏறி கலிங்கத்து பரணி பாடுகின்றேன்
   கேளுங்கள், கேளுங்கள் !
   ஆடிடும் அலையினில் எரிடும் நுரையென
   பாடிடும் இசையினில்  பண் என விளங்கிடும் முத்தமிழே !

  மூன்றெழுத்துக்கு ஓர் சிறப்புண்டு
 முத்தமிழ் எனும் பெயருண்டு
தாய் தன் பிள்ளையிடம் காட்டும் பரிவே அன்பு.
தந்தை தன் மகனுக்கு ஊட்டும் ஊக்கமே அறிவு
குரு தன் மாணவர்களுக்கு அளிப்பதோ ஆன்ற கல்வி
மலர்களின் சிரிப்பே மணம் 
குழந்தையின் சிரிப்பே மழலை 
மனிதன் இறைவனிடம் கொண்ட அன்பே பக்தி
கவிஞன் கவிதையை பாங்குற எடுத்துரைப்பதேவிஞனின் யுக்தி
மனிதன் நல்லதை செய்ய தேவை ஒரு நல்ல மனம். ழுது 
நாடு நலம் பெற பெயரும் வேண்டுமெனின் நாடவேண்டும் நல்லவர் நட்பு. 

 திருருத்ரன், திருமதி வாரிசா  மகனின் பெயரும் 
 மூன்றெழுத்து கொண்ட  விஜய் !
 விஜய்யின் அருமை  புதல்வியின் பெயரோ மூன்றெழுத்து உள்ள  கயல் !
திரு விஜய், திருமதி  சாந்தியின் அருமை  புதல்வன் பெயரும்  கவின் !
நான்கில் ( ருத்ரன் ) என்றும்  மூன்று (வாரிசா ) அடங்கும் 
கயல், கவின் இருவரும் ருத்ரன்,வரிச்சா  பேத்தி , பேரனாகும் !
குடும்பத்தில் நாம் காணும் நல்லவை  எல்லாம் 
மூன்றெழுத்து  உடைய  வெற்றி என்பதாகும் !

ரா.பார்த்தசாரதி