எங்கே சமூக நீதி
இதுதான் நல்லாட்சியா ? இதுதான் சமூக நீதியா
நிர்வாணமாக்கி இருவரிடம் கொள்ளை அடிப்பதும்,
கடையில் தேநீர் கேட்டவனிடம் இனத்தினால் ஒதுக்கியதும்
குடிநீரில் மலம் கலந்தவனை கண்டுகொள்ளாமல் இருப்பதும்
மனிதனின் தலை மீது சிறுநீர் கழித்துஅவமானப்படுத்துவதும்,
மாநிலம், நாடு என்றாலும் எல்லோர்க்கும் ஒரே நீதிதான்
தவறு எங்கு நடந்தாலும் அரசு தலையிடவேண்டுமே
இச்சமூக அநீதிக்கு அரசு தண்டனை கொடுக்கலாமே ,
பெண் உரிமை பணத்தை சிலருக்கே கொடுப்பானா !
பெண்கள் இலவசமாக செல்ல ஓட்டை பேரூந்து அனுப்புவானா
காவல் துறையை கைபொம்மையாக்கி நீதி தவறுவானா
எல்லாம் சரியாக நடக்கின்றது என பொய் உரைப்பானா !
மக்கள் ஒரு நாள் தட்டி கேட்பார்கள் என நினைபானா !
கேட்டால் அடக்கு முறை ஒன்றே என தீர்மானிப்பானா !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக