எது பெருமை
பத்தாயிரம் அரசு பணிக்கு
பத்து லட்சம் பேர் எழுதுவது பெருமையா !
அரசு கட்டிய குடியிருப்பில் இருபத்தைந்து
ஆண்டுகளில் இடிந்து விழுவது பெருமையா !
மது வருமானத்தில், இலவசங்கள், சலுகைகள்
கொடுப்பது பெருமையா !
எதிர்த்து ஏசியவரையெல்லாம் ஏலம் எடுத்து
கட்சியில் சேர்ப்பது பெருமையா !
சின்னத்திரை பெரியத்திரை ஆக்கிரமித்து
வன்முறையால் அடக்கி ஆள்வது பெருமையா !
விபத்து மரணங்களுக்கு லட்சங்கள் கொடுத்து
படம் எடுத்துக்கொள்வது பெருமையா !
வாரிசுகளை வளர்ப்பதும், நேரம் பார்த்து
பதவிகள் அளிப்பதும் பெருமையா !
வெள்ளம் சூழ்ந்த இடத்தினை நேரில் பார்க்காமல்
பிற ஊர் சென்று உரையாற்றுவது பெருமையா !
உதவிக்கு வந்தவர்களை தடுப்பது பெருமையா !
தன்னிச்சையாக செயல் படுவது பெருமையா !
பெருமை எனப்படுவது யாதெனில், மக்களை
உழைத்து உயர செய்யவும்,
வேலைவாய்ப்பை பெருக்கவும்,
தொழில்கள் வளரவும்
மதுவை விலக்கியும்
தண்டனை அதிகரித்தும்
விவசாயிக்கு உதவியும்
ஓட்டுக்கு திட்டமிடாமல்
நாட்டுக்கு திட்டமிடுவதே
நிரந்தர பெருமையாகும்
தொகுத்தவர் : ரா.பார்த்தசாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக