தாயின் தாலாட்டு
சிங்காரப் புன்னகை கண்ணாற கண்டாலே
சங்கீத வீணையும் எதுக்கம்மா
மங்காத கண்ணில் மையிட்டுப் பார்த்தாலே
தங்கமும் வைரமும் எதுக்கம்மா !
கண்ணே ! உன்னை கண்டால் போதும்
கவலைகள் எல்லாம் மறந்தே போகும்
செவ்வாயின் மழலையும் ஆனந்தமாகும்
எங்கள் செல்வ மகளே குல விளக்காகும் !
====================================================================
மண்ணுக்கு மரம் பாரமா
முகம் என்றும் சந்திர பிம்பம்
கள்ளமில்லாச் சிரிப்பு மனதை வெல்லும்
எங்களுக்குத் தருவாய் என்றும் பேரின்பம்
எங்கள் செல்வியே மகாலக்ஷ்மியாகும் !
மண்ணுக்கு மரம் பாரமா
மரத்திற்கு கிளை பாரமா
கொடிக்கு காய் பாரமா
பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா !
==================================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக