இதுதான் கலியுகம்
நல்லவை அழிந்து தீயவை தொடர்ந்து நடப்பதே கலியுகம்
தன்னலமே பொதுநலமாக மனிதன் கருதும் கலியுக காலம்
மக்களை ஏமாற்றி பணம் சேர்பதயே குறிக்கோலான காலம்
பல கோடிகள் பணம் சேர்ந்தாலும் திருப்தியடையாத காலம்
கொள்கைகள் இருப்பது போல் கபடநாடகம் ஆடும் காலம் .
பொய் மூட்டைகள் அவிழ்த்து விடும் சந்தர்ப்பவாதிகள் காலம்
பணத்தைக் கொண்டு மக்களை ஏமாற்றும் பொற்காலம்
எதையும் செய்யாமல் வாய் கிழிய சமூக நீதி பேசும் காலம்
மது, மாது மற்றும் சூதாட்டம் தலைவிரித்து ஆடும் காலம்
ஆண்களை குடியால் அடிமையாகி வாழ்வை அழிக்கும் காலம்
பணத்திற்காக பெண்கள் கற்புநெறி தவறி நடக்கும் காலம் .
அடிதடி, கொலை, கொள்ளைக்கு அஞ்சாத கலியுக காலம்
மக்களையும், ஏழைகளையும் ஏமாற்றி பிழைக்கும் காலம் .
பணத்தால் , நியாயம் தர்மம் நீதியை வாங்கும் கலியுக காலம்
பாசம் உறவு, நட்பு இவை என்னவென்று கேட்கும் கலியுக காலம்
தவறுகளை கண்டிக்க கடவுளே அவதாரம் எடுத்து வருவார் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக