புதன், 31 மே, 2017

நினைக்கத் தெரிந்த மனம்





                                   நினைக்கத் தெரிந்த மனம்



செய்தித் தாளை பிரித்தால் தினம் ஒரு சாலை விபத்து,
நினைத்தாலே  பதை  பதைக்கிறது நம் மனம் 
இரக்கம்மில்லாமல் கலப்படம் செய்யும் அரக்கர்களை கண்டு
எதிர்க்க முடியாமல் கொதிக்கின்றது நம்  மனம்!

ஜாதி,மத சண்டைகளை செய்யும் மத வெறியர்களை கண்டால் 
சமாதானப்படுத்துவதா, பரிதாபப்படுவதா என நினைக்கும் நம் மனம் 
நாடுகள் வேறாக இருந்தாலும்,அப்பாவிகளை கொல்லும் 
தீவிரவாதிகளை கண்டால் வெறிக்கிறது நம் மனம் !

சஞ்சலமின்றி சிறை செல்லும் அரசியல்வாதிகளை கண்டால் 
காறித் துப்ப நமது மனம் எண்ணுகின்றது !
கோடி,கோடியாக பணம் செலவழித்து திரைப்படம் எடுப்பதை கண்டால்!
காதலுக்காக உயிர் விடுவது கண்டு நம் மனம் சிரிக்கின்றது!

மக்களின் அறியாமையை மூலதனமாக்கி பணம் சேர்க்கும் 
ஆன்மிகவாதிகளை கண்டால் நம் மனம் சினம் கொள்கிறது!
முதல் போட்டு ஆரம்பித்த தொழில் நலிவடையும் போது 
முதலாளியை கண்டு நம் மனம் வருத்தம் கொள்கின்றது !

தினமும் நம் அறிவும், மனமும் பல உணர்வுகளை வெளிப்படுத்துகிறது  
நம்மிடம் வெல்வேறு வேலைகள் வரும்போது இவை திசை மாறுகிறது 
நினைக்க தெரிந்த மனதிற்கு கெட்டதை மறக்கத் தெரியவேண்டும் 
மறக்கத்  தெரிந்த மனதிற்கு என்றும் உண்மை புரியவேண்டும

 ரா.பார்த்தசாரதி 

 

 





திங்கள், 29 மே, 2017

திரு.மேகலா ராமமூர்த்திக்கு





திரு.மேகலா ராமமூர்த்திக்கு  வணக்கம்,

நன்றி, இந்தவாரம்  என் கவிதையை தேர்வு செய்ததற்கு.  நான் ஒரு பாரதி, பாரதிதாசன் போன்ற கவிஞ்சர்களின் அடிமை. என் மனதில் நினைப்பதை சொல்லில் வடிக்கின்றேன் . நான் ஆங்கில கவி மில்டன் அவர்களின் வசன கவிதைகளையும், உரைநடைக் கவிதைகளையும் படித்தவன், மில்டன் அவர்கள் ஏறத்தாழ  6500 வசன கவிதைகளையும்,  2300 உரைநடை கவிதைகளையும், எழுதியவர் .கடைசியில் அவரது புகழ் மிக்க  Paradaise Loss,
and Paradaise Gain மூலம் உலகிற்கு உணர்த்தப்பட்டார். எனது கவிதையும் உரைநடை கவிதையாக கொள்ளலாம்,  Both Negative approach and Positive approach should be taken into account.

கவிதையில்   நாடு, நிலம்  இவற்றின்   தாழ்வு பற்றி  கூறுவதைவிட  அதன் ஏற்றதையும் குறிப்பிடுவதே கவிஞ்சர்கள் நோக்கமாக கொள்ளவேண்டும் .

நன்றி.

ரா.பார்த்தசாரதி

வெள்ளி, 26 மே, 2017

படக்கவிதை 113





                                                              படக்கவிதை 113  
       
             வெய்யிலின்  கொடுமை  நிலத்திலே  தெரியும் 
             பயிர் நிலங்கள் வெடித்து  பாளமாய் தெரியும் 
             இதனை கண்ட விவசாயின் மனம் வெதும்பும் 
             வானின்று  மழைப் பெய்யாத என ஏங்கும் !

             வெய்யிலின் கடுமை நிழலில் இருப்பவனுக்கு தெரியாது 
             படித்து பட்டம் வாங்கிய   விவசாய மகனுக்குப் புரியாது 
             ஏர் பின்னது உலகம் என்று வள்ளுவன் சொல்லியது 
             ஏனோ படைத்தவனுக்கு நடைமுறையில்,நடக்காமல் போனது !

                         
             படித்தவுடன், வேலையில்  சேர்ந்து பெருமை படவும் 
             காசை  பார்த்தவுடன்  ஆடம்பர வாழ்க்கை  வாழவும் 
             ஆவல் கொண்டு, தனக்கென்று பொன், பொருள் சேர்க்கவும் 
             தன்  மனைவி, மக்கள் என்ற  வேலி போட்டு வாழ்வதும் !

             தந்தை உழவானாலும்  தொழிலை மதிக்க தெரியவில்லை 
             அவரது உழைப்பிலே வளர்ந்ததை நினைத்து பார்க்கவில்லை 
             நிலம் பாழாய் போனாலும் கவலைப்பட நி      னைப்பதில்லை 
             கூறு போட்டு  விற்கவும், வீட்டு மனையாக்கவும் தயங்கவில்லை!

             இன்றுதான் ஞானம் பிறந்து, சற்றே சிந்தித்து பார்த்தேன் 
             உழவுத்  தொழில்  என்றும் கோழைப் படாது என உணர்ந்தேன் 
             பிறர்க்கு அடிமையாய் வேலை செய்ய  வெட்கம் அடைந்தேன் 
             நானும், உயர்ந்து, உழவு தொழில் செய்ய புறப்பட்டேன் !

            பட்டம் பெற்றாலும்,  பாட்டாளியாக உழைக்க தீர்மானித்தேன் 
           ஆழ்கிணறு தோண்டி, தண்ணீர் பெற ஏற்பாடு செய்தேன் 
           விவசாயம் கற்று, என் குடும்பத்தை மேன்மையுறச்செய்தேன் 
            நானே விவசாயி , கடவுள் கண்டெடுத்த தொழிலாளி ஆனேன் !

              ரா.பார்த்தசாரதி
    

இறைவனின் விளையாட்டு




                                                 இறைவனின் விளையாட்டு        

          இறைவனே, ஏன் என்னை படைத்தாய் என நினைக்கும்போது
         என் கண்ணெதிரே  கைகால் இழந்தவன்  காட்சியளிக்கின்றான்
          ஊன்று கோல் துணையுடன் அரு    கில் வந்து கைநீட்டுகின்றான்
          உனக்கும் கீழே பல கோடி  என இறைவன் அறிவுறுத்துகின்றான் !

         தள்ளாத வயதில் கீரை விற்கும் கிழவியின் தன்னம்பிக்கை
         சாலையோரத்தில், காலணி, தைக்கும் தொழிலாளியின் நம்பிக்கை
         சாலையில்,குப்பை கூட்டுபவர்களின் அன்றாட வாழ்க்கை
        மூட்டை சுமந்து கஷ்டப்பட்டு கூலிக்காக வாழும் வாழ்க்கை !

         வெய்யில், மழை பாராமல் கூவி,கூவி விற்கு ம் பூக்காரி
          நடை பாதையில், பழரசமும், தேநீர் விற்கும் வியாபாரி ,
          பாதையோரத்தில், சிறு பொருட்களை விற்கும் வியாபாரி,
          நொண்டியானாலும், பேனா விற்கும் ஒரு  சிறு வியாபாரி !

          மனிதன் பிறக்கும்போது, ஏழை,பணக்காரனாய் பிறப்பதில்லை
         அவனவன், படிப்பாலும், தொழிலாலும்,மாறுபடாமல் இருப்பதில்லை
         படிக்காதவன் இழிந்த செயலை செய்வதற்கு தயங்குவதில்லை
         வாழ்க்கை எனும் படகை செலுத்த மனிதன் சோர்வடைவதில்லை !

         வாழ்க்கையை, வாழ்க்கையாலே  இறைவன் பிரிக்கின்றான்
         இறைவன் விளையாட்டை  நம்மிடம்  காட்டுகின்றான்
        தோல்விகண்டு துவளும்போது பல செயல்களை நடத்துகின்றான்
        அவற்றை கண்டு நம் மனதில் நம்பிக்கை பிறக்க வைக்கின்றான் !

        ரா.பார்த்தசாரதி

        
         

        


வாழ்க்கை போரில் தோற்று,
'ஏன் படைத்தாய்' என
இறைவனை நிந்திக்கும்
போதெல்லாம்
கண் எதிரே வருகின்றனர்
கை, கால் இழந்த
ஊனமுற்றோர்...
ஊன்றுகோலே துணையாக
உலகை நடை போடும்
பார்வையற்றவர்...
சிக்னலில் இளைப்பாரும்
வாகனங்களுக்கு இடையே
இரக்கும் கரங்களுக்கு
சொந்தக்காரர்கள்...
அடுத்த நொடி
கடவுளுக்கு நன்றி
சொல்கிறது மனம்!

தோல்விகளால் துவண்டு
உள்ளம் சோர்வுறும் போதெல்லாம்
கண் எதிரே கடந்து செல்கின்றனர்
உச்சி வெயிலில்
பார வண்டி இழுக்கும் தொழிலாளி...
பத்து ரூபாய்க்கு ரெண்டு
சாலையோரம் கூவி
விற்கும் சிறுவன்...
தள்ளாத வயதில்
தளர் நடையில்
கீரை விற்கும் கிழவி...
தன்னம்பிக்கை கொள்கிறது மனம்!

வாழ்க்கையை, வாழ்க்கையாலே
பகுத்து, தெளிவுற வைக்கும்
கடவுள் தான்
எத்தனை பெரிய சூத்திரதாரி!

வெள்ளி, 19 மே, 2017

தாய்




                                தாய்


  ரத்தத்தை அமுதாக்கி
கருவறையில்
பாரம் சுமந்து
உன் வேதனையில்
என்னை வெளிக்காற்றை
சுவாசிக்க வைத்தவளே...

ஊன் தந்தாய்
உதிரம் தந்தாய்
உயிர் தந்தாய்
நானே உன் உலகம்
என்று ஆனந்தப்பட்டாய்!

என் கோர முகம்
கோணாதிருக்க
இயல்பு மாற்றி
சுயம் தொலைத்தாய்!

உன் உலகையோ
என்னை சுற்றி
அமைத்துக் கொண்டாய்!

வறுமையிலும்
ஈர விறகோடு விறகாய்
பொசுங்கி
என் வயிற்றுப்பசி தீர்க்க
உன்
வயிற்றளவை குறுக்கினாய்!

நான் மிடுக்காய்
உடை உடுத்தி பள்ளி செல்ல...
நீயோ
ஒட்டுடையில் ஆனந்தப்பட்டாய்!

கருவறையில்
மட்டுமல்ல
நான் வளரும் போதே
உன் ரத்தம் குடித்து தான்
வளர்ந்தேன்!

மனிதனாய் என்னை
வெளியுலகிற்கு அடையாளம்
காட்டியவளே...
இன்று
இரக்கமற்ற முதுமை
உன் உடலை
செல்லாய் அரித்து
செல்லாக்காசாய்
படுக்கையில்
குழந்தையைப் போல்
கிடத்தியுள்ளது!

எனக்காக
சுயம் மறந்து
தொலைந்து, கரைந்து
போனவளே...

எனக்கு நீ
குழந்தையாய்
ஆகும் பாக்கியத்தை தவிர
வேறு என்ன பிராயசித்தம்
உனக்கு நான்
செய்து விட முடியும்!

செவ்வாய், 16 மே, 2017

நயகராவே நீ ஒரு அருவியா ! நதியா ! நங்கையா !





                             நயகராவே  நீ  ஒரு  அருவியா ! நதியா ! நங்கையா !

                                  .நதியையும்      நங்கையையும்    பற்றி  எழுதாத  கவிஞன் இல்லை  
   நதியினை  காண வரும்  மனிதர்களும்  ஜாதி மதம்   பார்பதில்லை
  இறைவன்  படைத்த கவிதை  மனிதன்தானே
   மனிதன் படைத்த  கவிதை, நதியும், நங்கையும் தானே !   
      
  .
மேகம்  போன்ற மேனியும் ,  இளமைகொண்ட  நங்கைப்போலே 
                                  மலைமேடு, பள்ளம் மூடி, ஓடுகின்றாய்  நாணத்தினாலே!
 
                                                 . நதியே  நீயும்  ஒரு  பெ ண்தானோ ?
                                                  அருவி  எனும்  கூந்தலையும் , எழிலையும் காட்டுவதும்  ஏனோ ?

                                               . நதியே   !  நீ  அருவியாய்  நின்று  புன்முறுவல்   பூக்கின்றாய் 
                                                 நாடி வரும் மனிதனின்  மனதில் ஓர்  தேன்னருவியாய்  வீழ்கின்றாய் !
               
                                                நதியே  நீ  நடந்தால்  நங்கை !  குனிந்தால்  குமரி யல்லவா !
                                                எல்லோர்க்கும் என்றும் நீ ஒரு  தாய் யல்லவா !
      

                                           .    நதியே  நீ  அருவீயாய்  விழுந்து , நதியாய்  ஓடி கடலில் கலக்கின்றாய் 
                                                நங்கையின்  பிறவியோ என்றும் பாசத்துடன்  வாழ்வில்  கலக்கின்றாள் !
                      .  நதியே   நீ  உன்  ஓட்டத்தால்  ஒளி  தருகின்றாய்   !
                                               நங்கையோ   வாழ்க்கை எனும் நதியில்  ஓளி  பெறுகிறாள் !


                                            . நதியே   நீ உறவை நாடி கடலில் கலக்கின்றாய்

                                              நங்கையோ , ஓர்  உறவை  தேடி  மனதில் கலக்கின்றாள் !

                      . வெண்ணிற ஆடையணிந்து, வானவில்லை  ஏந்தி நின்றாய் 
                                               நீலநிற ஆடை அணிந்த  மனிதர்களுக்கு மட்டற்ற  மகிழ்ச்சி  தந்தாய் !

                                              ஆம்,  நயகரா  நதியே  என்றும் நீ  ஒரு  நங்கைதான் ! 

                                                                                                   ரா. பார்த்தசாரதி  - வில்லிவாக்கம்

சனி, 13 மே, 2017

சுமைகளும், சுகங்களும்



                                                    சுமைகளும், சுகங்களும்

     மனிதா, வாழ்க்கையை  சுமையானதாய் எண்ணிவிடாதே
     சுகங்களும்  தேடி வரும் என்பதை நீ மறந்துவிடாதே
     குடும்பத்தலைவனுக்கோ  என்றும் வாழ்வில் சுமைதான்
     சுமைகளையும், சுகங்களாக கருதுபவனே சிறந்தவன் !

    நெஞ்சினில் உரம் கொண்டு சுமைகளை  தாங்கிடுவாய்
    சுகமான  சுமைகளும்  உண்டு என்பதை அறிந்திடுவாய்
    மயிலிறகு அதிகமாய் ஏற்றினாலும், அச்சு  முறியும் ,
    மனதில் சுமைகள் அதிகமானாலும் மனம் இறுகும் !

   வீட்டிற்கு முதல்வனே  என்றும்  ஓர்  சுமைதாங்கி
    எல்லா இன்ப, துன்பங்களுக்கும் அவன் ஒரு இடிதாங்கி,
    எல்லாவற்றையும், பொறுமையோடு எதிர் கொள்ளவேண்டும்
   எத்துயர்  வரினும் எதிர்த்து திறம்பட செயலாற்ற வேண்டும் !

  மனித வாழ்க்கையில் காதலும் சுகமாய் பூக்குதே
 அதுவே சிற்சில சமயத்தில்  சுமையாய் தாக்குதே
  சுமைகளும், சுகமும் கலந்ததே மானிட வாழ்க்கை
  இதனை அறியாமல் ஏன்   மாற்றுகிறாய் உன் போக்கை !

   ரா.பார்த்தசாரதி


 

வெள்ளி, 12 மே, 2017

தாயே தெய்வம்






                                              தாயே  தெய்வம்

கண்கண்ட தெய்வமென  நூலோர் சொன்னார் 
கண்மூடிச் சொல்லாம் தாயைக்  காட்டி,,
மண்ணுலகில் இறைவன்னில்லை , தாயின் அன்பை 
மதித்து  இங்கே உவமைச் சொல்ல சொற்க்கள்  இல்லை.

பத்து மாதம்  கருப்பையில்  சுமந்து பெற்று,
பக்குவமாய் வளர்த்தவளும்  தாயே ஆவாள் 
சொத்து என்றால் தாயேதான் ,  தாயின் மேலாம் 
சொத்துக்கள், சொந்தங்கள் ஏதும் இல்லை.

குடும்பத்தின் முழுநேர வேல்லைக்காரி,
குழந்தைகளின்  துப்புரவு பணியாள்,  என்றும்,
அடுப்படியில் சமைப்பதர்கே , கொஞ்சம்கூட 
அலுக்காமல் , சலிக்காமல் சுழலும் பூமி !

மடிதன்னில்  குழந்தைகளே இல்லா நேரம் ,
மற்றவர்கள் தருகின்ற தீனி இட்டு ( சோறுண்டு}
விடியலுக்கு காத்திருப்பேன்  என்று சொல்லி,
விளக்கேற்றி மகிழ்கின்ற  " தாயே தெய்வம் "

ரா.பார்த்தசாரதி