ஞாயிறு, 22 செப்டம்பர், 2013

இன்பத்துள் இன்பம்

                                                       இன்பத்துள்   இன்பம்

1.    நோய் இன்றி வாழ்வதில்  ஏற்படும்    இன்பம் !

2.    நல்ல வாழ்க்கைத்துணை அமைந்தால் ஏற்படும் இன்பம் !

3.    மழலைச்  செல்வங்களால் ஏற்படும் இன்பம் !

4.    நல்ல பக்தி பாடல்களை கேட்கும்போது ஏற்படும் இன்பம் !

5.    பழைய நண்பர்களை சந்திக்கும் போது   ஏற்படும் இன்பம்.!

6.    தானம், தர்மம் செய்வதினால் ஏற்படும் இன்பம் !

7.    ஏழைகளுக்குக்  கொடுப்பதில் ஏற்படும் ஏற்படும் !

8.     பணத்தில் சேமிக்கும் போது ஏற்படும் இன்பம் !

9.     படித்தவுடன்  வேலை கிடைக்கும் போது ஏற்படும் இன்பம் !

10.முதன்முதலில் பிறந்த குழ்ந்தையை தாய் பார்க்கும் போது ஏற்படும் இன்பம்!

11.  நற்செயல்களை  செய்யும் போது ஏற்படும் இன்பம்.!

12.  நல்ல நூல்களை படிக்கும் போது ஏற்படும் இன்பம் !

காத்திருந்து  கிடைக்கும்  இன்பம்  நிலையானதே !
காத்திராமல் கிடைக்கும் இன்பம்  நிலையற்றதே !   


சனி, 21 செப்டம்பர், 2013

திருமலை தெய்வம்

                                                      திருமலை தெய்வம்

திருவருள்  தரும்  தெய்வம்  திருமலை தெய்வம் !
தீராத  வினை எல்லாம் தீர்த்திடும்  தெய்வம் !

வரும்துயர், பகையையும், போக்கிடும் தெய்வம்!
வாய்திறந்து, கேட்டாலே வழங்கிடும் தெய்வம் !

தாயாரை  தரிசித்து  வேங்கடவனை  தரிசிப்போம் !
தரணியில்  யாவரும் நலம்பெற  யாசிப்போம் !

மனிதனை  புனிதம்  ஆக்குவது தெய்வ தரிசினம் !
மனதில்  சலனம்  போக்குவது தெய்வ தரிசினம் !

திருமலைவாசா  என்று அழைத்தாலே  குறை தீர்க்கும் தெய்வம் !
தினமும்  நினைத்தாலே நல்வழி காட்டும்  தெய்வம் !

கோவிந்தா, கோவிந்தா, என்றாலே  பரவசம் !
கோவிந்தன்  அருளும் கிடைத்திடுமே  நம்வசம் !

என்றும், நினைப்போம், பணிவோம் அவன்தாள் !
எல்லார்க்கும், உகந்த தெய்வம்,  திருமலை தெய்வம் !

ரா.பார்த்தசாரதி

ஞாயிறு, 15 செப்டம்பர், 2013

கலி படுத்தும் பாடு

                                                       கலி படுத்தும் பாடு

1.    மனிதனின்  குணம்  பணத்தினால்  மாறுமே !

2.    மனிதனின் பலமும், ஆயீசும்  குறையுமே !

3.    நியாமாகப் பேசினாலும், உரக்க பேசுபவன் சொல்லே எடுபடுமே  !

4    திருமணம் என்றாலே  ஆண், பெண் என்ற நிலை மட்டுமே !

5.   அழகு  என்பது  சிகை  அலங்காரம்  மட்டுமே !

6.     கடவுளிடம்  பக்தி  குறையுமே !

7.    தேனாகப்  பேசி,  பிறரை  ஏமாற்றுபவனே !

8.    பிராமணன்  என்றாலே ஒரு நூல் அணிபவனே !

9.    அரைகுறை வேதம் கற்று, தன்னை பண்டிதன் என சொல்பவனே !

10.   தூய்மைக்கு  ஒரு முறை குளித்தாலே போதும் என நினைப்பவனே !

11.   தன்  பெயர் நிலைக்க ,  தர்மம்  செய்பவனே !

12.   பல  இடங்களில்,   மழை பெய்யாமல்   காயும் !

13.   சில இடங்களில்  வெள்ளம்  புகுந்து  அழியும் !

       இறைவனே  அநிதிகளை  அழிக்க கல்கி அவதாரம் எடுத்து வருவாரே ! 

ரா.பார்த்தசாரதி

சனி, 14 செப்டம்பர், 2013

சிட்கோ தாசில்தார்

                                                   .

உதிர்க்க முடியாத இதழ்கள்!

உதிர்க்க முடியாத இதழ்கள்!

* அன்பே...
அடிக்கோடிட்டு நீ
சொன்ன வார்த்தைகள்
மாக்கோலம் அல்ல
அழிந்து போவதற்கு!

* காட்சி அளிக்கும்படி
கரும்பலகையில்
எழுதி வைச்ச காதல் அல்ல
துடைப்பான் கொண்டு
துடைப்பதற்கு!

* ஒப்பந்தம் போட்டு
உண்டானது இல்லை
உன் நினைவுகள்
உடைந்து போவதற்கு!

* "என்னை நீ மறந்து விடு'
என்று சொல்லும் போது தான்
ஊற்று நீராய் சுரக்கிறது
உன் நினைவுகள்!

* அந்தி மழையின்
மண் வாசனை
அதனின் பங்கிற்கு
உருட்டிச் செல்கிறது
உன் நினைவுகளை!

* என் எழுத்தாணிக்கும்
இயலுவதில்லை
உன் நினைவில்லாமல்
எழுதத் தொடங்குவதற்கு!

* மதுரம் இல்லாத
தேனீர் பருகும் போதெல்லாம்
உன் நினைவுகளை
சேர்த்துக் கொள்கிறேன்!

* உறக்கம் கொள்ளும் போதெல்லாம்
உன் நினைவுகள் என்னை
தின்று தீர்க்கின்றன!

* உன்னுடனான
நினைவுகள்
ஒரு போதும்
உலர்ந்து போவதுமில்லை
உதிர்ந்து போவதுமில்லை!

* ஓடும் உதிரத்திலும்
உன் நினைவுகள்
ஊற்றை விட வேகமானவை!

* அவைகள்
நுழைந்தது
ஒரு வழிப்பாதையில்!

* மறந்து விடுவதற்கோ
 மறைப்பதற்கோ...
மரணம் ஒன்றே
மார்க்கம்!

* அதுவே உனக்கு
சொர்க்கம் எனில்
நாளை மரணம்
என்றாலும்
மகிழ்ச்சியாகவே மரிப்பேன்
உன் நினைவு பிம்பங்களோடு!

மீண்டும் பிறப்பெடுப்பேன்!

மீண்டும் பிறப்பெடுப்பேன்!

* தாயின் ஸ்பரிசத்தை
உன்
அரவணைப்பில் கண்டேன்!

* தந்தையின் நேசத்தை
உன்
கரம் பற்றி
நடக்கையில் கண்டேன்!

* காதலனின் மோகத்தை
உன் காதல் மொழிபேசும்
கண்களில் கண்டேன்!

* கணவனின் கரிசனத்தை
உன்,
"அடியேய்' எனும் ஒற்றை
வார்த்தையில் கண்டேன்!

* யாதுமாகி நின்றாய்!

* கண்ணீருடன்...
கண்ணியத்துடன்...
ஏற்கிறேன் உன்னை...
என்
உயிர் தோழனாய்!

* மீண்டும் பிறப்பெடுப்பேன்!
தாயாய்...
தந்தையாய்...
காதலனாய்...
கணவனாய்...
நீ காட்டும் அன்பினை
தனிமையிலே  நினைக்க !

ஓற்றுமைப் பூக்கள் மலராதோ !



ஒற்றுமைப் பூக்கள் மலராதோ!

*புலரும் பொழுதாய்
புத்தொளி பரப்பும்
புத்தாண்டே...

* பூமியெங்கும்
அமைதி மட்டும்
ஆட்சி புரியாதோ
புத்தாண்டே!


* மண்ணில் விழும்
மழைத்துளியும்
விண்ணில் வீசும்
காற்றும்
யாவருக்கும்
பொதுதானே
புத்தாண்டே!


* நதியால்
இணைந்த
மாநில மக்கள்
அணையால் பிரியும்
அவலமும்
அமிழ்ந்து போகாதோ
புத்தாண்டே!

* சுயநலங்களும்
சூழ்ச்சிகளும்
சுவடு தெரியாமல்
மறையாதோ
புத்தாண்டே!


* நாட்டுக்கு நாடு
சமாதானம் மட்டும்
தானமாய் கிடைக்காதோ
புத்தாண்டே!


* தேசங்களுக்கிடையே
பிரிவினை
முட்கள் சிதைந்து
ஒற்றுமை பூக்கள்
மலராதோ

புத்தாண்டே!

* ஆட்சியும்
அதிகாரமும்
ஏழைகள்
ஏக்கம் தீர்க்காதோ
புத்தாண்டே!


* பூமியெங்கும்
அமைதி மட்டும்
ஆட்சி புரியாதோ
புத்தாண்டே!


வெள்ளி, 13 செப்டம்பர், 2013

ஒரு தாயின் தவிப்பு

                                                  ஒரு தாயின் தவிப்பு

நீ அயல்நாடு  சென்றாய் ! கடந்தன இருபது வருடங்கள் !
நான் வளர்த்தேன், வீட்டின் பின்புறம் தென்னை, வாழை !
இன்று அவைகள் உயர்ந்து  வளர்ந்து விட்டது !
இவைகள் என் பசியையும்,  தாகத்தையும்   தணிக்கிறது!

தினமும் இன்டர்நெட் மையத்திற்கு செல்வேன் !
உன்னை ஸ்கைப்பில் காண ! உன் இரு வரி ஈமெயில்தான் பார்க்கமுடிந்தது !
பல நாள் ஈமெயில் தகவல் இல்லாமல் திரும்பியுள்ளேன் !
மனமும், உள்ளமும் சோர்ந்து  தவிக்கின்றேன் !

என்று உன்னை ஸ்கைப்பில்  காண்பேனோ 1
உன் நிலமைகண்டு நான் தவிக்கின்றேன்,
ஏனோ, நீ அடிமைப்பட்டு அங்கே தவிக்கின்றாய் !
நான் பச்சை தென்னை ஓலையில்  படுக்கும் முன்னே,
என் உடம்பை  ஈக்கள் மொய்க்கும்  முன்னே,
உனது  ஈமெயில், ஸ்கைப்பும் எனது உடலைக் காட்டும்மா !
நான் தெரிந்துகொண்டது, பணம் எட்டிப்பார்க்கும்,
பாசம், உறவு  இவைகள்  தொலைவில் நிற்கும் !

ரா.பார்த்தசாரதி



இவள் சுமங்கலிதான்

                                                        இவள் சுமங்கலிதான்

கணவன் இறந்துவிட்டான்
இவள் சுமங்கலி தான்


பொட்டும் இல்லை பூவும் இல்லை
இவள் சுமங்கலி தான்

உடுத்தும் உடை வெண்மை
இவள் சுமங்கலி தான்


கழுத்தில் தாலியும் இல்லை
காலில் மெட்டியும் இல்லை
இவள் சுமங்கலி தான்


சமுதாயம் இவளை விதவை என்றாலும
இவள் சுமங்கலி தான்

ஏனென்றால் இவள் பெயர் சுமங்கலி

கடவுள் இவளை சுமங்கலி என்று
நினைத்துவிட்டான் அதனால்தான்
எல்லோரும் அழைக்கும் வண்ணம்
இவள் பெயரை சுமங்கலி என மாற்றிவிட்டான்

இவள் என்றும் இவள் சுமங்கலி தான்!!!.....
இவள் சுமங்கலி தான்!!....


ரா.பார்த்தசாரதி

வியாழன், 12 செப்டம்பர், 2013

தேவதாஸ்

                                                                தேவதாஸ்

செய்யும் தொழிலே  தெய்வம் எனக்  கருதிடுவார் !
தன்னலமின்றி  பிறர்க்கென என்றும் உழைத்துடுவார் !

லகுவாக  என்றும்  எந்திரங்களை  இயக்கிடுவார் !
லாரன்ஸ்  என்ற பெயரையும்  வைத்திடுவார் 1

கடன் என்றாலே காத தூரம்  நின்றிடுவார் !
கடன்  இல்லாமலே  நிர்வாகம் செய்துடுவார் !

தேவனுக்கு  தாசன்  என நினைத்திடுவார் !
தேவதாஸ் எனும்  பெயரைப் பெற்றிடுவார் !

நவமணியின்  ஒளி  என்றும்  காண்போர்க்கு சிறப்பாகும் !
தவமணியின் தவப்புதல்வனின் செய்தொழில் போற்றப்படுவதாகும் !

புதுமையை  எண்ணி  புன்னகைப்  பூத்திடுவார்!
இருப்பதைக்  கொண்டே  வளம்பெற நினைத்திடுவார் !

நல்லதையும், நியாத்தையும் என்றும் உரைத்திடுவார் !
வேற்றுமையில்  ஒற்றுமையுடன் சிட்கோவில் வாழ்ந்திடுவார்.! 


ரா.பார்த்தசாரதி
 

புதன், 4 செப்டம்பர், 2013

vijay thirumana vazhthu madal

                                       



                                     விஜெய் திருமண வாழ்த்து மடல்          

   இடம்: அண்ணாநகர்                                                            தேதி:02 -12-2019

1. இன்று அண்ணாநகர் விஜயஸ்ரீமஹாலில்  ஓர் கல்யாண மேடை 
   இன்னாருக்கு  இன்னார், என்று  எழுதிவைத்த  மேடை,

2.இருவீட்டாரும்  இணைந்தே  நடத்திடும்  விழா ,
    உற்றாரும், உறவினர்களும், வாழ்த்திடும்  விழா !

3. புனேயில் பணிபுரிந்து கொண்டு  வாழ்க்கைத் துணை நாடும் விஜய்                                                                                                                     எனும்             ஆடவனே
    என்றும் நீயும் ரேஷ்மியும்   வாழ்ந்திடுவாய்  சிறப்புடனே!

4. திருமணம் என்பது  இருமனம்   அல்ல !
     அதுவே இருமனம் கொண்ட ஒரு மனம்.!

5.  திருமணம்  என்றாலே உற்றார் உறவினர்  வாழ்த்துக்களே 
     அகிலத்தில் சிறந்தது தாய் தந்தையர்  வாழ்துக்களே   !

6. மலர்போன்ற மலர்கின்ற மனம் வேண்டும் நற்பெண்ணே,
    மண்வாசனை மாறாத குணம் வேண்டும் மணப்பெண்ணே!

7.பிறந்த வீட்டின்  குலம் காக்க வேண்டும் ,
    புகுந்த வீட்டின்  நலம் காக்க  வேண்டும் !

8. மகள் இல்லாத வீட்டில், மருமகளே  என்றும்  மகளாவாள்,
    மணமகன்,  புகழிற்கும்,குலத்திற்கும் அவளே துணையாவாள்!

9. கணவன் என்றாலே,  கண்ணைப் போன்றவனாகும்,
    அவன் வழியே  உலகை காண்பவள்  மனைவியாகும் !
 
10. காலங்கள், கோலங்கள்  என்றும்  மாறும்,
     கணவன், மனைவி  உறவே  என்றும்  நிலைத்து  வாழும் !

11. ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை,
      ஆயிரம்  உறவுகள் இருந்தாலும், மனைவி, கணவனை மறப்பதில்லை!

13.  இருவீட்டாரும்  ஒன்றுகூடி மகிழ்ந்து விருந்துண்டோம், 
       மணமக்களை வாழ்வில் வளம்பெற மனமாற  வாழ்த்தினோம் !

14. அன்பும், அறனும்  உடைத்தாயின், இல்வாழ்க்கை  
      பண்பும், பயனும்  அது.

     ரா.பார்த்தசாரதி .


       

மஹா சம்ரோக்ஷனம் - களியப்பேட்டை

களியப்பேட்டையில் இன்று, செண்பகவல்லி சமேத கார்வனதுள்ளன்

                                                                                                          மஹா  சம்ரோக்ஷனம்,
சம்ரோக்ஷனம்  செய்வதே தாயாரும், பெருமாளும் சக்தியும், மேன்மையும்
                                                                                                             அடையும்  தருணம் !

களியப்பேட்டையிலும், காஞ்சியிலும், காட்சிதரும் திருகார்வானனே,
வேண்டியதை, வேண்டியர்வர்களுக்கு  அளித்திடும்  இறைவனே !

தெய்வங்கள்  பலவாயினும், பலவுருவமானாலும் குணங்கள் ஒன்றே,
களியப்பேட்டையிலும், திருவெள்ளறையில் காட்சிதரும் செண்பக தாயாரும்
                                                                                                                                  ஒன்றே !

கார்வானத்தினாய், முகில்வண்ணனாய், விளங்கும் வேணுகோபலனே ,
இனிய  கானம்  வேய்ந்குழலில்  இசைத்திடும்   வேணுகோபலனே !

ருக்மணி, சத்யபாமா  சமேத   வேணுகோபாலன் சந்நிதி ,
இது  பக்தர்களுக்கு  தந்திடுமே  மனநிம்மதி !

மனிதனை  புனிதம்  ஆக்குவது  தெய்வதரிசனம் ,
மனதில்  சலனம்  போக்குவது   தெய்வதரிசனம் !

வேற்றுமையில்  என்றும்  நாம் ஒற்றுமை  காண்போம்,
வேற்றுமையில்லா  இறைவனை  என்றும் நாம் துதிப்போம்!

ரா. பார்த்தசாரதி