விவேக் கவிதை எழுதினால்
எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும் ஏனோ !
கண்ணும்,கண்ணும் பேசி ஒன்றாய் கூடும் விநோதம்தானோ !
என் இதயத்தில் என்றும் இதய ராணியாய் இருப்பதும் ஏனோ !
எண்ணாத எண்ணங்கள் எண்ணுவதும் ஏனோ !
மெல்ல தொலைபேசியில் அன்பாய் அழைத்ததும் ஏனோ!
மெல்போர்னில் நீ அருகில் இருந்ததை மறந்திருப்பேனோ !
இரு உள்ளங்கள் ஒன்றோடு ஒன்றாய் தேடுவதும் ஏனோ 1
நீ அருகில் இருந்தால் குளிர்வதேனோ ? விலகினால் சுடவதேனோ !
உன் பார்வை ஒன்றே போதுமே !
பல்லாயிரம் கதைகள் கூறுமே !
என் கவிதை உன்னை மாற்றிடுமே !
என் உள்ளம் உன்னை என்றும் நேசித்துடுமே !!
செல்லும்முன் பல பரிசுகள் கேட்டதுமே,
என்னுள் ( என் உள்ளத்தில் ) இருக்கும் உன்னை தவிர,
இந்த விவேக் குமாருக்கு கொடுக்க தெரியலையே,
இது காதலா ! கவிதையா ! என்று நீ யோசிக்காமல் இல்லையே !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக