அன்புள்ள கணவா !
அன்புள்ள கணவா! ,உன் நெஞ்சில் நான் நிறைந்திருந்தாலும்
என் பெண்ணுள்ளம் எதிரொலியாய் இருந்தாலும்
நான் என்றும், நீ என்றும் இருவராக இருந்தாலும் ,
நான் வேறு, நீ வேறு யார் சொன்னாலும்
உந்தன் மனதினிலே நான் என்றும் இருந்தாலும் ,
சுகமும், துன்பமும், சரிபாதியாய் இருந்தாலும் ,
பூவாகி, காயாகி , கனியாய் இருந்தாலும் ,
நீயாகி, நானாகி, நாமாய் இருந்தாலும்,
சுகம், சுகம் அது துன்பமான இன்பமாய் இருந்தாலும்,
மனம், பேதை மனம், மாறாத சொந்தம் இருந்தாலும்,
இனமாகிய, பெண், உனக்கே உரிமையாய் இருந்தாலும்,
அது பூப்போல மென்மையாய் பூத்திருந்தாலும் ,
உந்தன் நிழலாக நான் மாறும் நாள் வந்தாலும்,
தேன் உண்ணும் வண்டாய் நீ இருந்தாலும்,
தெம்மாங்கு பாட நீ நினைத்திருந்தாலும்,
தொலைவில் இருந்தும், என் நெஞ்சத்தில் மறைந்திருந்தாலும்,
கல்யாணம் முடிந்து , காதல் மறைந்தாலும்,
பழமையான காதல் நினைவுகள் மறக்காமல் இருந்தாலும்,
நமது வாழ்கை எனும் ஓடம் ஓடிக்கொண்டிருந்தாலும்
பொங்கும் நமது உள்ளமே, வாழ்வின் புது வெள்ளமே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக