புதன், 18 ஜூன், 2014

என் பார்வையில் கண்ணதாசன்

                    என்  பார்வையில்  கண்ணதாசன்
 
கவியரசு  கண்ணதாசன், 1974ஆம்  ஆண்டு , பச்சையப்பன் கல்லூரிக்கு தமிழ் 
பேரவைக்கு தலைமை தாங்க வந்தார்.  வந்தவர், சற்று நேரம் கழித்து வந்தமையால், எனக்கென்று  ஓர்  தனிமதம், அதுவே தாமதம்.என்று கூறி கவிதை பாங்குடன் கூறி, கைதட்டல் பெற்றதை  நினைத்துப்பார்த்தேன்.

அன்று, கண்ணதாசன்,  நா.பார்த்தசாரதி ( தீபம் இதழ் ) மற்றும் புரட்சி எழுத்தாளர்  ஜெயகாந்தன் மூவரும் ஒரே மேடையில் பேசினார்கள்.
எண்ணிப் பாருங்கள் எப்படியிருக்கும் என்று !  அரங்கமே களை கட்டியது.
இடை, இடையே, பரிசு அளிப்பு விழவும் நடந்தது.  தேனிர் இடைவேளை வந்தது.  இருபத்தொரு வயதுடைய ஒரு கல்லூரி மாணவன் அவரிடம் தேனீர் கொடுத்துவிட்டு ,  ஐயா, கவியரசு அவர்களே, நான் பொது அறிவிற்கான பரிசினைதான்   தாங்களிடம் பெற்றேன், கவிதைக்கு அல்ல என்றேன். உடனே கவியரசு , மாணவனே, பொது அறிவும், சமுதாய நோக்கும், கற்பனை திறனும்
இருந்தால்தான் என்னை போன்றவர்கள் கவிதை எழுத முடியும்.! 

ஐயா,  ஒரு சந்தேகம் ! தாங்கள்  அத்திக்காய் , ஆலங்காய்  வெண்ணிலவே என்ற பாடலில் ( பலே  பாண்டியா திரைபடத்தில் ) பல  காய்களை கொண்டு காய்ப்பது  ஏன் ? காதலின், காதலி இடையே காய் வருவதன் காரணம் என்ன?
அதற்கு புன்சிரிப்புடன்,  காதலன்  வெண்ணிலவை பார்த்து என்னை   வேண்டுமானாலும்  காய் , என் காதலையும், காதலியையும்  காயாதே என 
சுருங்கச் சொல்லி தெளிவித்தார்.  என்னே  அவரது கவி நயம்.

அன்று அவர் திறன் கண்டு, மெய்மறந்து நின்று, பரிசு பெற்ற அக்கல்லூரி 
மாணவனுக்கு  அன்று வயது இருபத்தொன்று.  ஆம், அன்று பரிசுபெற்ற 

மாணவன்தான்  இன்று  அகவை அருபத்தொன்று அடைந்த   ரா.பார்த்தசாரதி, வல்லமையின் வாசகன் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக