செவ்வாய், 17 ஜூன், 2014

ராஜகோபாலன்

                                                           
                 திரு. ராஜகோபாலன் - அவர்களின் எழுபதாம் ஆண்டு விழா
                                      (பீமரத சாந்தி திருமண வாழ்த்து  மடல் )

 இறைவன் ராஜகோபாலன் வீற்றிருப்பதோ  மன்னார்குடியில்  
திரு. ராஜகோபாலன்  அவர்களுக்கு பீமரத சாந்தி நடந்ததோ பூனேயில்

அகவை அறுபதும், எழுபதும்  என்றும்  பெருமை  உடையதன்றோ !
இவ்விழாவை நடத்தும் மகனும்,மகளும் பாராட்டுக் குரிவர்களன்றோ !

அவனியில் ஆயிரம் பௌர்ணமி  கண்ட  இல்லறதம்பதிகளே,
திருவாசகம்  பாடி  என்றும் வாழ்த்துவோமே !

திருமணமே  இல்வாழ்க்கையின்  தொடக்கமாகும் 
இதற்குள்ளே  எல்லாமே   அடக்கமாகும் !

கணவன்  என்றாலே  (கண்+ அவன் ), கண்ணைப் போன்றவனாகும்,
அவர் வழியே  உலகை  காண்பவள்  மனைவியாகும் !

ஆயிரம் கைகள் மறைத்தாலும், ஆதவனை மறைக்கமுடியுமா ?
ஆயிரம் உறவுகள், இருந்தாலும் மனைவி, கணவனை மறக்கமுடியுமா?

கண்ணின் அருகே இமைஇருந்தும், கண்கள் இமையை பார்ப்பதில்லை 
 மனைவி கண்ணின் இமையென இருந்து, கணவனைப்  பிரிவதில்லை !

காலங்களும், கோலங்களும், என்றும்  மாறும் !
கணவன்,மனைவி உறவே என்றும் நிலைத்துவாழும் !

உலகில்  பிரிக்கமுடியாதது  பந்தமும், பாசமும்,
உலகில்  ஒதுக்கமுடியாதது   நட்பும்,  உறவும் !

அன்பும், அறனும் உடைத்தாயின் , இல்வாழ்க்கை 
பண்பும்   பயனும்  அது.              ( வள்ளுவன் வாக்கு)

ஸஹஸ்ர சந்த்ர தர்சனம் கண்டு, பீமரத சாந்தி செய்துகொண்ட
ப்ரம்ஹ ஞான லக்ஷ்யவாதிகளுக்கு,  கமலா, பார்த்தசாரதி தம்பதிகளின்
 அனந்த கோடி  நமஸ்காரங்கள் .
   
21-08-2014  ஆங்கில பிறந்தநாள் வாழ்த்தாகவும் ,   பீமரத சாந்தி திருமண 
வாழ்த்தாகவும்  எடுத்துக்கொள்ளவும் .

ரா. பார்த்தசாரதி

     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக