பெயரிடாத ஆண், பெண் உறவு
தர்ம சிந்தனை, நல்லெண்ணம் கொண்டு உதவுபவன் ,
செய்யும் உதவிக்கு, எந்த கைம்மாறு எதிர்பாரான்,
வேலைக்காரியின், மகள் படிப்பிற்கு ஏன் உதவவேண்டும்?
கார் டிரைவரின் தாயாரின் மருத்துவத்திற்கு ஏன் உதவவேண்டும் ?
மாதம் ஒரு முறை அநாதை குழந்தைகளுக்கு ஏன் உதவவேண்டும் ?
இவர்கள் எனது பெயரிடப்படாத உறவுகள் என சொல்லவேண்டும்
உறவுகளின் பெயர் இருந்தும், உறவு மறந்துபோகும் !
பெயரே இல்லாத ஆண், பெண் உறவுகள் வந்து போகும் !
பாசமும், பந்தமும், கொண்ட உறவுகள் நிலைக்குமா?
நாம் செய்யும் நல்லவைகள் என்றாவது பிரதிபலிக்குமா!
ஒழுக்கம் மாறாத அன்பும், பழகும் விதமே உறவின் எல்லை !
இதனை அறிந்த மனித இனத்திற்கு என்றும் கவலை இல்லை !
நான் நோய்வாய்பட்டு இருந்தேன் சில நாட்கள் !
என்னை காண வந்ததே அந்த பெயரிடப்படாத உறவுகள் !
ரா. பார்த்தசாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக