திங்கள், 9 ஜூன், 2014






                             
அளவுக்கு மிஞ்சினால்...
- வசந்தா சுந்தரராஜன்|மார்ச் 2007||(3 Comments)
Share: 
Click Here Enlargeஉணவு அளவோடு உண்டால் ஆரோக்கியம்
அளவு மீறினால் அஜீரணம்
அளவுக்கு அதிகமானால் விஷம்தான்!

உடை அளவாய் உடுத்தினால் அழகு
அளவு குறைந்தால் அசிங்கம்
அரைகுறையானால் ஆபாசம்!

காற்று அளவாய் வீசினால் தென்றல்
அளவு அதிகமானால் புயல்
அளவை மீறினால் சூறாவளி!

கடல் அலைகள் அளவாய் இருந்தால் மியாமி
அதிகரித்தால் பெளர்ணமி
அளவைமீறி ஆர்ப்பரித்தால் சுனாமி!

நெருப்பு அளவாய் எரிந்தால் தீப ஒளி
அதிகம் எரிந்தால் தீப்பந்தம்
அளவை மீறினால் காட்டுத் தீ!

தானம் கொடுக்க மறுத்தால் கருமி
அதிகம் கொடுப்பவன் தருமி
பிறர் சொத்தைத் தன் பேரில் எடுத்தால் பினாமி!

எதையும் சுருக்கமாய்ச் சொன்னால் ஜோர்
சிரிப்பாகச் சொன்னால் ஒன்ஸ் மோர்
அடிக்கடி சொன்னால் போர்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக