செவ்வாய், 24 ஜூன், 2014

பார் மகளே பார்





  

                                             
                                                பார் மகளே பார்.

பெண்ணின் வாழ்வே நாற்றங்கால்  நாற்று போலே
வேறு இடத்தில்  நடவு  செய்வது போலே
பிறந்த இடத்தை விட்டு புகுந்த வீட்டில் வாழ்வது போலே ,
தானே ஒளி தந்து  ஒளிரும்   மெழுகுவர்த்திப் போலே ,

வேராக மறைந்து, தான் தனித்துவம் பெற்றதாலே
வேறாகிப் போகும் காலம், மாறியதாலே
மழலையைக் காப்பகங்களில் குழந்தைகளை விட்டுவிடுவதாலே, 
மழலைப் பேச்சை ரசிக்காதவர், எத்தனை பேர் இக்காலத்திலே !


 இருவர், பொருளீட்டச் செல்லும் காலமாய் இருப்பதாலே
சிறுவர், பூட்டிய வீட்டை நாடும் காலமாய்  இருப்பதாலே
தாய்ப் பாசத்தை எதிர்நோக்கியே ஏங்கியிருப்பதாலே
சேய்கள் பெருகினால், நலமாகுமோ இத்தரணியிலே !


பிறந்த முதல், உன் திருமணம் வரை கூட நின்றவர்களை மறந்து,
என் வீடு, என் குழந்தை , என் கணவன் என்ற நினைப்பா
பிறரை நினைக்க செய்யாத மனதின் இயல்பா 
ஏனோ  சில சமயம் பேசிடும் தொலைபேசியின் தொடர்பா 

உடன் பிறந்தவர்களையும், வாழ்க்கைக்குஆணிவேறெனஇருந்தவர்களை 
உனக்கு  நினைவு வந்தால்தான் தொடர்பு கொள்கிறாய்
ஏனோ எந்திரமான  வாழ்கையில் சிக்கித் தவிக்கின்றாய் 
நிம்மதியும், இன்பமான வாழ்க்கையை    இழக்கின்றாய்

ஏனோ அயல் நாட்டு மோகம், தாய் நாட்டை மறுக்கும் வேகம்,
பணத்திற்காக, பந்த பாசங்களை   துறக்கும் சோகம்,
உன் குடும்ப வளர்சிக்காக  நடத்தும்  யாகம் ,
என்று  முடியுமோ  இந்த அயல்நாட்டு மோகம் !

பெண் ஆனவள்  தாய், மனைவி, பாட்டி  என பல பதவியின் உருவிலே, 
தாய் நாட்டுப்பற்றும்,  தாய்,தந்தையரின் பாச  நினைவிலே 
என்றாவது  தாய் நாடு திரும்புவாய்  என்ற விருப்பத்தினாலே 
உன்னை எதிர்நோக்கும் உற்றார், உறவினர்களின்எதிர்பார்ப்பிலே 

பார்  புகழும்  பெருமை பெற்று, தாய் நாட்டின் வளம் காக்க
வந்து அடைவாய் தாய் நாட்டின் வளமை பெற  உழைக்க
சுற்றமும்  நட்பும் உன்னை எதிர்பார்க்க   சற்றே
நீ பிறந்த தாய்நாட்டின் நிலைமையை பார்  மகளே, பார். 


ரா.பார்த்தசாரதி


                     
                               

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக