எல். முரளிதரன்மணிவிழா / சஷ்டி அப்தபூர்த்தி வாழ்த்து மடல்
சாஸ்திரி ஹால் சமுக கூடத்தில் இன்று ஓர் கல்யாணமேடை ,
முரளிதரன், பிருந்தா முரளிதரன், தம்பதிகளின் மணிவிழா மேடை!
கல்யாணம் என்றாலே வைபோகமே,
வாரணமாயிரம் பாடி வாழ்த்துவோமே !
ஆயிரம் நிலவு (பௌர்ணமி) கண்ட இல்லற தம்பதிகளே,
என்றும் வாழ்வாங்கு வாழ்வீ ர்கள் வையத்திலே !
அகவை அறுபது என்றும், அருமையும் பெருமையும் உடையதன்றோ,
தலைமையேற்று நடத்தும் மகளும்,மகனும் பெருமைக்குரியவர்கள் அன்றோ! ,
கணவன் என்றாலே (கண் + அவன் ) என்பதாகும்.,
அவன் வழியே உலகை காண்பவள் மனைவியாகும் !
ஆயிரம் கைகள் நீட்டி மறைத்தாலும், ஆதவன் மறைவதில்லை,
ஆயிரம் உறவுகள் இருந்தாலும் மனைவி, கணவனை மறப்பதில்லை !
திருமதி ஓர் வெகுமதி என்று கூறுவது பழக்கம்
திருமதியின் பெயரே பிருந்தா என்று அழைப்பது பழக்கம்!
கல்யாணம் என்றாலே உற்றார் , உறவினர்ககளின் , ஆசிர்வாதமே,
அகிலத்தில் சிறந்தது , தாய், தந்தையின் ஆசிர்வாதமே !
ஆறு எழுத்தில் ( முரளிதரன் ) என்றும் நான்கு அடங்கும் ,
பிருந்தா எனும் பெயர் விளங்கும்.
காலமும் , காட்சிகளும் என்றும் மாறும்,.
உறவே என்றும் நிலைத்து வாழும்.!
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்கை
பண்பும் பயனும் அது. என்பது வள்ளுவன் வாக்கு
ரா. பார்த்தசாரதி , கமலா பார்த்தசாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக