வியாழன், 11 டிசம்பர், 2014

தேசிய ஒற்றுமை தினம்




                                                       தேசிய ஒற்றுமை தினம்

ஒன்றுபட்டால்  உண்டு வாழ்வு, இல்லையெனில் அனைவர்க்கும் தாழ்வு ,
அவனியிலே அமைதி மட்டும் நிலவும் தினமாக நாம் ஒன்றுபடுவோமே
நதியால் இணைந்து, வேற்றுமையில் ஒற்றுமை காண நினைப்போமே
சுயநலங்கள், சூழ்ச்சிகள்  மறையும் தினமாக கொண்டாடுவோமே!


மாநிலங்களுக்கு  இடையே  சமாதானம், தானமாய் கிடைக்ககாதோ
பிரிவினை  எனும் முள் சிதைந்து ஒற்றுமை எனும் மலர் மலராதோ
மாநில ஆட்சியும், அதிகாரமும் மக்கள் நலதினமாக  மாறாதோ,
மக்கள் குரலே மகேசன் குரல் என்று ஒலிக்கும் தினமாக மாறாதோ!

ஆட்சியும், அதிகாரமும்,  மக்களின் ஏக்கத்தை தீர்கட்டுமே
மாநிலங்கள் ஒன்றுக்கொன்று நட்பிணை வளர்த்துக் கொள்ளட்டுமே,
ஒற்றுமை மேம்பட தலைவர்கள் என்றும்     பாடு படட்டுமே
இனம், மொழி கடந்து மாநிலங்கள் யாவும் ஒன்றுபடட்டுமே!

தேசிய ஒற்றுமை தினத்தை  மாநிலமெங்கும் கொண்டாடுவோமே,
ஒற்றுமையை வளர்க்க   தேசத் தலைவர்களை  நினைவு கூறுவோமே
இதனை தேசிய ஒருமைபாட்டிற்கு எடுத்துகாட்டாக உரைப்போமே  
விடுதலைக்கு பாடுபட்ட தலைவர்களின் பிறந்தநாளை  கொண்டாடுவோமே !



      ரா. பார்த்தசாரதி














.

புதன், 12 நவம்பர், 2014

குழந்தைகள் தினம்

                                                             குழந்தைகள் தினம் 


குழந்தைகளை  வரமாகவும், குல விளக்காகவும் கொண்டாடும் நம் நாடு 
பெண் சிசுவை இரக்கமின்றி கொல்வதும் நம் நாடு 
பெண் குழந்தைகளை சுமையாக நினைப்பதும் நம் நாடு .
காலபோக்கில் இதனை மாற்றியதும்  நம் நாடு.

ஆயிரம் கோடி சொத்துக்கள் இருந்தும் ஓர் வாரிசு இல்லையெனில் 
அச்சொத்துக்கள் யாரோ அனுபவிப்பர் ,
இதனைக்கண்டு அவர்கள் சுற்றத்தார்களும் பரிதவிப்பர் 
இந்நிலைமை கண்டும் தத்து எடுக்க சிலர் தயங்குவர் !

தத்து எடுப்பதில் என்றும்  தவறில்லை 
நன் முறையில் வளர்த்தால் கேடு இல்லை, 
அனாதை  என்ற  சொல்லை  அகற்றிடுங்கள் , 
அதுவே  உன் வாழ்க்கைக்கும்  வழிகாட்டி என உணருங்கள் 

குழந்தையும் தெய்வமும்  ஒன்று என  கொண்டாடுகிறோம் 
பிரதமர் நேருவின்  பிறந்த நாளாக கொண்டாடுகிறோம் இந்நாட்டினிலே 
குழந்தைகளிடத்தில்   அவர் கொண்ட  அன்பினை  மறக்க முடியுமா  
நம் நாட்டில் உள்ள  எல்லா குழந்தைகளும் அவரை போற்றிடுமே! 

 குழல் இனிது  யாழ் இனிது,  என்ப தம் மக்கள் 
மழலை சொல் கேளாதவர்  என்பது வள்ளுவன் வாக்கு,
குழந்தை செல்வம்  வாழ்கையின் இன்றியமையாத செல்வமே  
குழந்தைகளின் எதிர்காலம் சிறக்க இத்தினத்தில் சபதம் எடுப்போமே  ! 

ரா.பார்த்தசாரதி 

செவ்வாய், 4 நவம்பர், 2014

புரியாத புதிர்



                                                               புரியாத புதிர் 

அன்புள்ள  அம்மா உன் அடிச்சுவட்டை  பின்பற்றுகிறேன் 
அன்று உன் நிலைமை கண்டு பிரம்மிப்பு அடைந்தேன்,
உன்னைப்போல்  உழைக்கின்றேன் இன்று நானே 
அன்று இளமையில் சுயநலமாக எதையும் சிந்தித்தேன் 

இன்று திருமணம் ஆனதால் பிற நலமாக  சிந்திக்கின்றேன் 
என்  குழந்தை,என் கணவன் என்கிற வட்டத்தில்  சுழலுகின்றேன்  
ஏன் இந்த மாற்றம்,  என்  நிலைமை  என்னை மாற்றியதா, 
பெண்  இனத்திற்கு இது இயற்கை என முடிவானதா !

நீயும் என்வயத்தில் என்னை மாதிரி  உணர்ந்திருப்பாய் ,

உன் அன்பும், தியாகமும், எங்களுக்காக அளித்தாய் 
நீ செய்த பாசத்தையும்,  அன்பையும் திருப்பி தரமுடியுமா 
உன்னிடம் கற்றதனால் இன்று என் வாழ்க்கை எளிதாகிறது !

தாயின் பாசமும், அன்பும்,  அவள் மடியிலிருந்து தொடக்கம், 
பெண் தாய்க்கு  தாயாக  இருந்தாலும் மீண்டும் பிறக்கும் ,
பெண் அன்பில் ஒரு தாய், நட்பிற்கு  நேர்மை,  அறிவில் ஒரு மந்திரி,
 பெண்  கண்கண்ட ஆசான், பெண்ணே   வெற்றிக்கு மாலை !

பல உருவினில் இருந்தாலும், இன்றும்  ஒரு புரியாத புதிர் !


ரா.பார்த்தசாரதி 





செவ்வாய், 14 அக்டோபர், 2014

உணவே மருந்து, மருந்தே உணவு


                                              உணவே மருந்து, மருந்தே உணவு

        அரிதரிது  மானிடராய்  பிறத்தல் அரிது,
        நல்ல உணவினை உட்கொள்வதும் அரிது 
        பழமை மறந்து, மேலைநாட்டு புதுமை பழக்கம் 
        நாகரிக முன்னேற்றத்தால்   ஏற்பட்ட மயக்கம்  !

        மேலை நாட்டு துரித உணவு பழக்கம் வளர்ந்ததே 
        நமது  உடல்நலம் கெடுவது இன்று தெரிந்ததே 
        கீரை, களி, கூழ்  இவை எல்லாம் மறந்து போச்சே 
        பிட்சா, பர்கர்  என்பதே   இன்றைய உணவாச்சே!

        உணவை  அளிக்கும் உழவனை என்றும் மறவாதே
        உணவே மருந்தாய், அளவாய் கடைபிடித்தல் நல்லதே 
        உடல் ஏற்றமுற   நாம் கைகொள்வோமே  இயற்கை உணவு
       இதுவே  நமது உடல்  ஏற்றம் பெற  சிறந்த உணவு  !

        அன்று வீட்டு வேலைகள், வயலில் நடவு செய்தும் உழைத்தார்கள் 
        அன்று பசித்து புசித்தார்கள்,  இன்று, பசிக்காக  ஏதோ புசிக்கிறார்கள்
       உடற்பயிற்சிகள்  குறைந்ததால்  உடலில் சதைகள் வளர்ந்ததே,
       இதனை குறைக்க  உடற்பயிற்சிக் கூடங்கள் இன்று அதிகமானதே  !

        இன்று நோய்க்கு  காரணம்  பாதுகாப்பற்ற  உணவு பழக்கமே
       என்றும் இதனை கட்டுபடுத்த முயல்வது  நமது திண்ணமே
        உண்டி சிறுத்தல்  என்றும்  உடலுக்கு  அழகு 
       கலப்புணவு, கீரைகள்,  பழங்கள்  உண்ணப் பழகு !

       மனிதனே, பாரம்பரிய உணவினை மேற்கொள் 
      தினமும் உடற்பயிற்சி  செய்ய கற்றுக்கொள்
      சரிவிகித  உணவினை தினமும் எடுத்துக்கொள் 
     உணவே மருந்து,  மருந்தே உணவு  எனப் புரிந்துகொள் !

      ரா.பார்த்தசாரதி

வந்தாள் மகாலக்ஷ்மியே




                                               வந்தாள் மகாலக்ஷ்மியே

வந்தாள்  மகாலக்ஷ்மியே , என்றும் அவள் ஆட்சியே,
பெண்ணின் பெருமை அறிந்திட வேண்டும் அவனியிலே 
மாதராய் பிறப்பதற்கு  மாதவம் செய்திட வேண்டுமே 
பெண்ணை  குடும்பத்தின் சக்தியாய் கருத வேண்டுமே!

நவராத்திரி விழா நாம் கொண்டாடுவதே பெண்ணிற்கே
பெண்  குழந்தைகளை தெய்வமாய் கருதிடும் நவராத்திரி 
பெண் பிறந்தாலே,  பெருமை  என  மனதில் எண்ணிடுங்கள்
பெண்  குழந்தைகளை பாரபட்சம்மின்றி  வளர்த்திடுங்கள்!

பெண் குழந்தைகளை அன்புடனும்,அரவணைத்தும்  வளர்த்திடுங்கள் 
அவர்களின் உணர்விக்கும், சிந்தனைக்கும் மதிப்பு அளியுங்கள்,
பண்பு, பணிவு, நல்லொழுக்கம்,உழைப்பு, போன்ற நன்னெறிகளை 
மனதினில் வேருன்ற வைத்து, வளர்ப்பதே தாய் தந்தையரின் கடமை!

அடுப்பூதும் பெண்ணிற்கு   படிப்பு எதற்கு என எண்ணாதீர் 
கல்வியே பெண்ணின் முன்னேற்றத்தின் வெற்றிப்பாதை
அகிலத்தில் சமூக  சிந்தனையுடன் இருக்க முயற்சி செய்யுங்கள்
கல்வியே பெண்ணின் வாழ்க்கைக்கு பாதுகாப்பென நினையுங்கள் !

பெண் குழந்தைகள் சிறந்தவர்கள் ஆவது தாய்தந்தையின் வளர்ப்பினிலே 
வாழ்கையில், நன்னெறிகளை மேற்கொள்ள அவர்களுக்கு வழிகாட்டுங்கள் 
பெண்கள் அழகுப் பதுமைகள் அல்ல, அவர்கள் அறிவின்  ஜோதிகள் 
பெண்ணின் பெருமையை வள்ளுவன் வழிகொண்டு நடத்துவோம் !


ரா.பார்த்தசாரதி




சனி, 11 அக்டோபர், 2014

தித்திக்கும் தீபாவளி



                                                         தித்திக்கும் தீபாவளி


மக்களுக்கு  மகிழ்ச்சியும், ஆனந்தமும்  நிறைந்த பண்டிகை,
எல்லோரும்,  ஒன்றுகூடி , மகிழ்ச்சியுடன்  கொண்டாடும் பண்டிகை
வாழ்த்துகளை, நாம் பகிர்ந்துகொள்ளும் தீபாவளி பண்டிகை ,
சந்தோஷமும் , உல்லாசமும் கலந்த தீபாவளி பண்டிகை!

விடியற்காலையில் எழுந்து  எண்ணெய் தேய்த்து குளித்து ,
மகிழ்வுடனே    புத்தாடை  உடுத்தி,   இனிப்பினை பகிர்ந்து,
பெரியவர்களிடம் வாழ்த்தும், நல்லாசியும் பெற்று
ஊர் எங்கும்  ஒன்றாய் கலந்து கொண்டாடும்  தீபாவளி!

நாட்டில் உள்ளவர்கள் பல விதமாய் கொண்டாடும் தீபாவளி 
வடக்கே விளக்கு பூஜை என் கொண்டாடும் தீபாவளி,
இல்லறத்தில் இனிப்பு கொண்டு கொண்டாடும் தீபாவளி,
புன்சிரிப்புடன், மன நிறைவாய்  , வாழ்த்து பெரும் தீபாவளி !

வெடியும், சரமும், மத்தாப்பும் கையில் ஏந்துவோமே 
வெடியின் சப்தமும், சித்திர பூப்போல சிதறும் மத்தாப்பினை காண்போமே,
மாலையில் கம்பி மத்தாப்பையும் நம் கையில் பிடிப்போமே,
சங்கு சக்கரம், புஸ்வாணப்  பூக்களின் சிதறலை கண்டு களிப்போமே !

அசுரன்  நினைவாக  நாம்   தீபாவளி பண்டிகை கொண்டாடுகின்றோம் 
மனித உருவில் உள்ள அசுரர்களை  அழிக்க நாம் திட்டமிடுவோம்,
பார்வையற்றவர்கள் விடுதிக்கும், முதியோர் இல்லத்திற்கும்   செல்வோமே 
அவர்களுடன் இனிப்பினை பகிர்ந்து தித்திக்கும் தீபாவளி கொண்டாடுவோமே!


ரா.பார்த்தசாரதி

சனி, 4 அக்டோபர், 2014

காந்தி கல்லாகி விட்டார்



                                                  காந்தி   கல்லாகி விட்டார்


உண்மை  எங்கே  விலை  போயிற்று எனத்  தேடுவேன் 
நேர்மை எங்கே என்று எல்லோரிடந்திலும் கேட்பேன் 
எளிமை எங்கே என தேடி அலைந்து கொண்டிருப்பேன் 
தூய்மை  எங்கே என மனம் குமுறி துடித்துபோவேன் !

சத்யதிற்கே ஒரு சத்யசோதனையா என எண்ணிடுவேன் 
அகிம்சை  என்ற  வார்த்தை காணாமல் போயிற்றே  என்பேன் 
மனித நேயத்தை இந்ந்நாட்டில் எங்கே என்று கேட்பேன் 
நான் சொன்னதெல்லாம் எங்கே போயிற்று என் நினைப்பேன் !

அன்று வெள்ளையரை வெளியேற அமைதி போரை துவக்கினேன் 
இன்று மக்கள் தண்ணீருக்காக போராட்டத்தை நடத்துகிறார்களே 
எங்கும் ஊழலும், லஞ்சமும் தலை விரித்து ஆடுகிறதே 
நிலைகெட்ட  அரசாங்கத்தை நினைத்தால் தலை சுற்றுகிறதே !

நான் பாடுபட்டதெல்லாம் நாட்டின்விடுதலைக்காகவே 
இன்றைய தலைவர்கள் பாடுபடுவது தன் சொந்தங்களுக்காகவே 
என்னை தந்தையாக  நினைத்த  இந்திய மக்களே 
என் சொற்களை மந்திரமாக நினைப்பது எக்காலத்திலே!

என் மதிப்பு, என் தலை, ரூபாய் நோட்டின் முகப்பிலே ,
என் கொள்கைகள் எல்லாம் வீசபடுகின்றதே தெருவிலே,
ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்றேனே 
இன்று காணமுடியாமல் கடற்கரையில் கல்லாய் நிற்கின்றேனே !


ரா. பார்த்தசாரதி
 

 


திங்கள், 22 செப்டம்பர், 2014

நவராத்திரி



                                                                நவராத்திரி

நங்கையருக்காக   கொண்டாடும்  ஓன்பதுநாள்   ராத்திரி
பெண்களை  மதித்து கொண்டாடும் ராத்திரி,
சிறு பெண்களையும், மற்ற பெண்களையும் போற்றும் ராத்திரி,
பொம்மைகளை வைத்து கொண்டாடும் ராத்திரி !

முதல் நாள் நவராத்திரி பூசை சிறுமியர்களுக்கே உரியதாம்,
சுவாசினி எனும் மூத்த சுமங்கலிக்கும் உரியதாம்
கல்வி, செல்வம், வீரம், இம்மூன்றின் தலைவிகளாம்,
கலைமகள், அலைமகள் ,மலைமகள் எனும் தெய்வங்களாம்!

பெண்ணே  உலகில் சக்தியின்  வடிவமாகும்,
நாட்டையும், வீட்டையும், காக்கும் தெய்வமாகும
சக்திக்கு  இடப்பக்கம் அளித்தவர் அர்த்தனாரிஸ்வரராகும் 
பெண் தெய்வங்களை போற்றி கொண்டாடுவதே  நவராத்திரியாகும் !

நவராத்திரி என்றாலே எல்லா பெண்டிருக்கும் ஒர் சுப ராத்திரி,
அலங்காரங்களும், பாட்டும், கேளிக்கையும் நிறைந்த ராத்திரி,
தொன்றுதொட்டு பெண்களுக்காகவே நடத்தப்படும் விழா
பெண்மைக்கு மதிப்பும், நல்வாழ்வும் அளிக்கட்டுமே இந்நவராத்திரி விழா


ரா.பார்த்தசாரதி


திங்கள், 8 செப்டம்பர், 2014

உலக எழுத்தறிவு தினம்



                                          உலக எழுத்தறிவு தினம்

எண்ணும்  எழுத்தும்  கண்னென தகும் .
எழுத்தறிவித்தவன்  இறைவன்  ஆகும்
கல்வி மூலமே தீர்ப்பது சிறந்த வழியாகும்
கற்றோருக்கு  சென்ற இடமெல்லாம் சிறப்பாகும்!

மனிதனாய்  பிறந்த யாவரும் எழுத்தறிவு பெற்றிட வேண்டும்
நாட்டில்  எழுத்தறிவு பெற அரசாங்கமும் பொறுப்பு ஏற்கவேண்டும்
பட்டி தொட்டிகளிலும், கிராமங்களிலும் கல்வியை மேம்படுத்த வேண்டும்.
இதனை கல்வி மூலமே நிலைபெறச் செய்ய வேண்டும்.!

பின்தங்கிய  இனத்தர்வரும், பாட்டளிகளும்  எழுத்தறிவு பெறவேண்டும்
நாட்டில் உள்ளோர் எழுத்தறிவு பெறுவதை கட்டயமாகக்க வேண்டும்
அதற்கான ஊடகங்களை கிராமங்கள்தோறும் எற்பட்டுத்தவேண்டும்
தாய் மொழியில் பயின்று கையொப்பம்  இட   அறியவேண்டும் !

எழுத்தறிவினை புகட்டி அறியாமை, மூட நம்பிக்கைகளை ஒழிப்போம் !
இரவு நேர பள்ளிகள் மூலம் முதியோர்களுக்கும் எழுத்தறிவிப்போம்
 எழுத்தறிவின்மையை  ஒழிக்க என்றும் நாம் பாடு படுவோம் என
நாட்டில் உள்ளோர் சபதம் எடுப்போம் உலக எழுத்தறிவு தினத்தில் !   


ரா.பார்த்தசாரதி


வெள்ளி, 5 செப்டம்பர், 2014

நாய் வளர்ப்பு தினம்



                                                     நாய் வளர்ப்பு தினம்


    நாய்  எனும் விலங்கு  என்றும்  நன்றியுடையதே
     இன்று வீடுகளில் வளர்க்கப்படும் செல்ல பிராணியாக இருக்கின்றதே 
    நன்றி,    தியாகம்      இவற்றின் எடுத்துக்காட்டு
    வீட்டினை இரவும் பகலும் காக்கும் மெய்காப்பாளன்!

   திட்டும் போதும் நாயே என்று தவறு செய்தவரை திட்டுகிறோம் 
   அவசரத்தில்  வாயே நாயை மூடு என   திட்டுகிறோம் 
   அன்புடன் வளர்க வேண்டிய பிராணியை வசைபடுகிறோம்
   பணத்திற்காக  பிறரை மனசாட்சி இல்லாமல் புகழ்கின்றோம்!

   வீட்டிற்குள்  வளர்க்கப்படும்  ஓர்  நல்ல  விலங்கு 
   அதனை  நல்ல முறையில் வளர்க்கப்     பழகு 
   நீதான் அதன் எஜமான் என்று  தெரிந்து ஓடி வரும் 
   திருடர்களை கண்டால் அவர்களை ஓடி விரட்டிடும் !

   மனிதர்களுக்கும், குழந்தைகளுக்கும் பிடித்த விலங்காகும் 
   அதுவே மரண பயத்தை போக்கும் கால பைரவரின் வாகனமாகும் !


  ரா,பார்த்தசாரதி

  
  
       

வியாழன், 4 செப்டம்பர், 2014

ஆசிரியர் தினம்




                    ஆசிரியர் தினம்


மாதா,பிதா, குரு  தெய்வம் 
மூவரும் கண்கண்ட தெய்வம்,
அன்பிற்கு அன்னை, அறிவுக்கு தந்தை,
கல்விக்கு ஆசான் (குரு) என உலகம் அறிந்ததே !

மனித வாழ்கையில் கல்விக்கே முதன்மை ,
இதனை நமக்களித்த ஆசிரியர்களுக்கே  பெருமை,
மனிதனின் உயர்வுக்கு அவர்கள் அமைத்த ஏணி,

ஏணியாய்  இருந்தவர்களுக்கு  என்றும் ஆசிரியர் எனும் பதவியே  !

ஆசிரியர்  பணி  மகத்தான பணியன்றோ,
அவர்களை நினவு கொள்வது நமது கடமையன்றோ,
ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆசிரியராய் இருந்தவரே,
அவர்தன்  பிறந்த நாளே  ஆசிரியர் தினமாக  அறிமுகமானதே!

அன்று இருந்த ஆசிரியர்கள் பள்ளியில் பாடம் நடத்தினார்,
இன்று  பணத்திற்காக ஆசிரியர்கள் வீட்டில் பாடம் நடத்துகின்றார்,
அன்று கல்வி அறிவுத்திறனுக்காக பாடம் கற்பிக்கப்பட்டது 
இன்று கல்வி என்பதே வியாபாரமாகவே   கருதப்படுகிறது !


அறிவுத்திறன், கல்வித்திறன் இரண்டும் நாட்டிற்கு வளமை, 
அதிலும் தரமான கல்வியை  அளிப்பதே நாட்டின் கடமை,
வாழ்க்கையில், கல்வி  என்பது மனிதனின் இரு கண்கள,
கல்வியை அளிக்கும் ஆசிரியர்களை என்றும் மறவாதிர்கள்  ! 


ரா.பார்த்தசாரதி

புதன், 20 ஆகஸ்ட், 2014


கொசுக்களின் தடுப்பு தினம்



                                
                                     கொசுக்கள் ஒழிப்பு  தினம்

  கொசுக்களே  நோய்களுக்கு   காரணம் 
அவற்றை  அழிப்பதே நமது  வேலை 
 அவற்றால் நமக்கு என்றும்  தொல்லை 
 தொல்லை தரும் கொசுக்களை ஒழிப்போமா !

மலேரியா, சிக்கன்குனியா, டெங்கு காய்ச்சல்கள் 
மனிதனுக்கு  வருவதும்  வித, விதமான கொசுக்களாலே,
இதனை  தடுப்பதும், ஒழிப்பதும் நம் கையிலே,
அதற்காண  வழிகளை மேற்கொள்வோம் விரைவிலே !

தேங்கிய நீரும், மூடபடாத சாக்கடைகளே கொசுக்களின் குடியிருப்பு,
தேவையற்ற பொருள்களும், காகிதம், பிளாஸ்டி பொருளின் குவிப்பு,
இவையே  கொசுக்கள்  உறைவதர்காண  குடியிருப்பு 
இதனை  ஓழிக்க நாடும், தனிமனிதனும் முயற்சி செய்தாக வேண்டும். !

மனிதனே, உன் சுற்று புற இடங்களை  தூய்மை வைத்துக்கொள் ,
கொசுவின் தொல்லையின்றி, நோயின்றி உன்னை பாதுகாத்துக்கொள் 
அதனை தடுக்க, ஒழிக்க நல்ல வழிகளை   பின்பற்ற கற்றுக்கொள்!
நோய்யற்ற  வாழ்வே, குறைவற்ற செல்வம் என அறிந்துகொள் !

ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2014

கீதையின் நாயகனே



                                         கீதையின் நாயகனே



  கண்ணா நீ சிறைச்சாலையில்  பிறந்தாய் 
   தந்தையால்  யமுனையை  கடந்தாய் 
   கோகுலத்தில்    யசோதையிடம் வளர்ந்தாய் 
   பாலகனாய் இருந்து பல லீலைகள்நடத்தினாய் !

  உன்னை நாடி வந்த ஆய்ச்சியர்களை கவர்ந்தாய் 
  உன்னை கொல்ல வந்த அசுரர்களை  கொன்றாய்     
 தீமை செய்த காளிங்கன் மேல் நடனம் புரிந்தாய் 
  வெண்ணை திருடும்  கள்வனாய் திரிந்தாய் !

  இந்திரனின் கர்வத்தை அடக்கி ஆயர் குலத்தினை காத்தாய் !
  அவர்களுக்காக மலையையே குடையாகப்  பிடித்தாய் !
  கிருஷ்ண, பலராமனாக, அக்குரருடன்  சென்று  கம்சனை  வதைத்ததாய் !
  பெற்றவளையும் , வளர்த்தவளையும்  வணங்கி நின்றாய்!

  பண்டவர்களுக்காக  அஸ்தினாபுரத்திற்கு தூதுவனாய் சென்றாய் !
  துரியோதனனுக்கும்  மற்றவர்களுக்கும் அறிவுரை  கூறினாய் !
 போரே முடிவானதும் பாண்டவர் பக்கம் துணை இருந்தாய் !
போரில் கீதை எனும்  வேதத்தை அர்ச்சுனனுக்கு உபதேசித்தாய் !

தர்மத்தினால்  பாண்டவர்களை போரில் வெற்றி பெற செய்தாய் !
அதர்மத்தை அழிக்கவே  அவதாரம் எடுத்தாய் என்பதை நீயே அறிவாய்!
ஆக்கலும், அழித்தலும் உன் அவதாரத்தினால்  நடதிடச் செய்தாய் !
ஜடவரதன் அம்பு பட்டு யாரும் அறியாமல் விண்ணுலகம் சென்றாய்.!

ரா.பார்த்தசாரதி
  

சனி, 16 ஆகஸ்ட், 2014

manithaney sattreyninaithpaar


மனிதனே சற்றே நினைத்துப்பார்



                          மனிதனே சற்றே  நினைத்துப்பார்.

எல்லாவற்றிற்கும்  காரணம் ஆசை என்று அறிந்தே
நம் கைவிட்டு போகும்  நாணயமில்லாத நாணயங்கள் ! 

பேராசையால் கைதவறிய வாய்ப்புக்கள்
நம்மை  பார்த்து தொலைவில் இருந்தபடி நகைக்கின்றது ! 

மனதை கல்லாக்கி கைக்கு எட்டியதை
வாய்க்கு எட்டாததை கண்டு ஏமாந்த போது
வறட்டு கவுரத்திற்காக விலக்கி  வைத்தால்
புரிந்ததும், புரியாததும் சேர்ந்து
தொலைந்துபோன காலகட்டத்தில் !

பெருமைக்காக  நட்புகொண்டு, கைகுலுக்கி ,
அவசியங்களுடன், அத்தியாவசியங்களும்
இழக்கம் பொழுது ,ஏற்பட்ட  இழப்பின் வலிகள் !

மூட நம்பிக்கையுடன்  ஜாதி,மத விழுதுகளை நம்பி,
பகுத்தறிவு வேர்களை புறந்தள்ளியதால்
அவனியில் சிக்கித் தவிக்கும் மனிதம்! 

கிடைத்ததை கொண்டு திருப்தி கொள்ளாமல்
கடந்ததை எண்ணி வருந்துவதால் எக்ககாரணம்மின்றி
கரைந்துபோகும் மனிதம்.!

எண்ணுபவர் - விழிப்பர்
விழிப்பவர் - உழைப்பர்
உழைப்பவர் - உயர்வர்
உயர்வோர்க்கே இவ்வுலகம்!

இவையாவும் உய்வோர்க்கு
புரிதல் எப்போது;
மனிதமும், மனிதநேயமும் உயர்வதெப்போது?


ரா.பார்த்தசாரதி .

Alphapet Advise






                               
   Alphapet Advise:

"A"lways "B"e "C"ool.
"D"on't have "E"go with "F"riends n Family.
"G"iveup "H"urting "I"ndividuals.
"J"ust "K"eep "L"oving "M"ankind.
"N"ever "O"mit "P"rayers.
"Q"uietly "R"emember God.
"S"peak "T"ruth.
"U"se "V"alid "W"ords.
"X"press "Y"our "Z"eal.

வியாழன், 14 ஆகஸ்ட், 2014

புத்தாண்டே வருக





                                    புத்தாண்டே  வருக  2015

கதிரவன் குணதிசையில் பன்முகமாய்  உதித்தான் ,
புலரும் புத்தாண்டை புதிதாய் உருவமெடுதான் 1

பூமியெங்கும்  அமைதியே ஆட்சியாக அமையாத புத்தாண்டே ,
மண்ணில் விழும் மழைத்துளியும், விண்ணில் வீசும் காற்றும் 
யாவருக்கும்  பொதுதானே புத்தாண்டே !

நதியால் இணைந்த  மாநில மக்கள் 
அவலம் அழிந்து போகாதோ  புத்தாண்டே !

எவர் ஆட்சி செய்யவரினும் நல்ல எண்ணத்துடனே 
மக்களுக்கு நல்லதை செய்ய வேண்டும் புத்தாண்டே !

சுயநலங்கள்,  சூழ்ச்சிகள்  சுவடு தெரியாமல் 
அவனியில்  அழிந்து போகாதோ  புத்தாண்டே !

நாட்டுக்கு நாடு, சமாதனம்  மட்டும் ,
தானமாய்   கிடைக்காதோ புத்தாண்டே !

ஆட்சியும்  அதிகாரமும் ஏழையின் 
ஏக்கத்தை  தீர்காதோ  புத்தாண்டே !

பூமியெங்கும் அமைதி மட்டும் 
ஆட்சி   புரியாதோ  புத்தாண்டே

செவ்வாய், 12 ஆகஸ்ட், 2014

பெண்ணின் பெருமை




                                                    பெண்ணின்  பெருமை
  

1.     பெண்         என்றால்   பூமிக்குத்  தாய். !

2.     பெண்         என்றால்  கற்பின்  சின்னம். !

3.     பெண்         என்றால்  வீட்டின்  ஒளிவிளக்கு !   

4.     பெண்         என்றால்  கருணையின்  கடல் !

5.     பெண்         என்றால்   அன்பின்  அடையாளம் !.

6.     பெண்        என்றால்  பாசத்தின் தலைவி  !

7.      பெண்       என்றால்    உயிர்களின் முகவரி !

8.     பெண்        என்றால்   நாணத்தின்  உருவம்   !

9.     பெண்       என்றால்   அணங்கு ( பெண் தெய்வம்)
 
10.     பெண்     என்றால் பஞ்ச பூதங்களின் உறைவிடம் !

11.     பெண்     என்றால்   கற்பின் சிகரம்.

 12,   பெண்ணும்  ஆணும் சேர்ந்தாலே இல்வாழ்கை !

  ரா. பார்த்தசாரதி

வெள்ளி, 8 ஆகஸ்ட், 2014

எதிர்பார்க்கும் நட்பு




                                         எதிர்பார்க்கும் நட்பு 


குறையில்லாத  மனிதன்  இவ்வுலகில்  உண்டா ?
குறையினை சுட்டி காண்பிக்காத மனிதர்கள் உண்டா?
குறையினை களைய நல்வார்த்தைகளை  எடுத்துரைப்பதுண்டா? 
இனிய சொல்கொண்டுதான்  அதனை தீர்ப்பதுண்டா?

உலகமே  என்னை  ஒதுக்கி  வைத்தாலும் 
என்னை  பாதுகாத்து   நிழல் கொடுப்பாயா !
நாளுக்கு நாள்  கணக்கு  பார்க்கும் மனிதர்கள் இடையே 
தன்மையுடன் பழகும் உன் நட்பை எதிர்பார்க்கலாமா !

நான் வெல்லும்போது  வாழ்த்துவதைவிட,
நான் வீழும் போது  என்னை தாங்குவாயா.
எதிர்பார்பினால் ஏமாற்றம் அடைவது தெரிந்திருந்தும் 
எதிர்பார்ப்பு   இல்லாத உன் நட்பை அளிப்பாயா !.

   ரா. பார்த்தசாரதி

வியாழன், 7 ஆகஸ்ட், 2014

சந்தோஷம் என்றும் நம் பக்கம்

          சந்தோஷம் என்றும் நம் பக்கம்



      சந்தோஷம்  என்றும்  நம்  பக்கம்,
.     சந்தோஷம்    என்றாலே மனிதனுக்கு  பாதி  பலம் ,
       அது  இல்லையெனில்  மனிதனுக்கு ஏது  பலம்,
       சந்தோஷம்  நாம்  வாழ்க்கையில் தேடுவது ,
       எப்பவும்  எல்லோர்  நெஞ்சுக்குள் நினைப்பது 
       போதுமென்ற  மனம் இருந்தால் தானே வருவது ! 


  .    சூரியனைக்  கண்டால்  தாமரை
       சந்தோஷத்துடன்  மலர்ந்துதானே பழக்கம்,
       
      கார்முகில்கள்  திரண்டு  வந்து 
       மழை தந்துதான்  பழக்கம்,
                              
      மழையைக்  கண்டால்  மயிலுக்கு 
       மகிழ்ச்சியுடன்  ஆடித்தான்  பழக்கம்,
   .
  .    காட்டில்  உள்ள  குயிலுக்கோ 
       சந்தோஷத்துடன்  கூவிதான்  பழக்கம்.
       
       கிடைத்ததை  மனதிற்கொண்டு  நடப்பவை 
       எல்லாம்  நன்மைக்கே  என  தெளிந்தால் 
       வாழ்வில்  சந்தோஷம்  என்றும் நம் பக்கம்.!
  .

.       ரா. பார்த்தசாரதி 

புதன், 30 ஜூலை, 2014

இருபத்தி நான்கு மணி நேரம்



                                                இருபத்தி நான்கு மணி நேரம்

இருபத்திநான்கு மணி நேரம், ஆஸ்பத்திரி , ஏ டி எம் , மெடிக்கல் ஷாப்,
இவை எல்லாம் அதிசயம் இல்லை. ஆனால் அமெரிக்காவில் பார்க்கின் 
என்பதே ரொம்ப கஷ்டம். ஒரு முறை  பீட்டர் என்கிற   83 வயது முதியவர் தனது காரில் இரண்டு புள்ளி நான்கு நேரம் பார்கின்காக சுற்றி கடைசியில் காரை பார்க் செய்தார். செக்யூரிட்டி;யிடம்  போய் தான் கஷ்டபடத்தை சொன்னார். தப்பாக புரிந்து கொண்டு தலைமை அதிகாரியிடம் சொல்ல, உடனே அவர் CNN TV க்கு போன் அவர்கள் உடனே பீட்டரை பேட்டி .காண வந்தனர். டிவி ரிபோர்ட்டர் எப்படி நீங்க 24 மணி நேரம் பர்க்கிங்க்காக சுற்றினீர்கள் இது பெரிய சாதனை இதை கின்னஸ் ரெகார்டில் போடபோகிறோம் என்றனர் . பீட்டர் க்கு ஒன்றும் புரியவில்லை.  டிவி ரிபோர்ட்டரிடம் சார்  இரண்டு புள்ளி நான்கு மணிநேரம் 
சுற்றி பின் பார்க்கின் செய்தேன் .  தவறுதலாக  இருபத்துநான்கு மணி நேரம் 
புரிந்து கொண்டது என் தவறில்லை. ரிப்போர்ட்டரும், தலைமை அதிகாரியும் 
அசடு வழிந்தார்கள் .

ரா.பார்த்தசாரதி

செவ்வாய், 29 ஜூலை, 2014

இப் படியும் ஏமாற்றுவாளா




                                                 இப் படியும்   ஏமாற்றுவாளா    

     நளினி எப்பொழுதும் எந்த கலர் புடவையில்சென்றாளோ  அதே  கலர்

    புடவையுடன் திரும்புவாள் .எல்லா சேல்ஸ் மேனும் அவள் 

    கையாள் . வரும்போது சலவை புடவையுடன் வருவாள் ..

    புது புடவையை எடுப்பாள் . அலங்கார அறைக்குள் சென்று

    உடுத்திய புடவையை அழகாக மடிப்பாள்  விலை லேபிளை 

    ஒட்டிவிட்டு,  புது புடவையை  உடுத்துவாள்.  அக்கடை

     ஆட்களை வைத்தே  உடுத்தியதை கலைக்கப்பட்ட புடவை
 
   குவியலில்  கலந்திடுவாள்..  காமேராக்களும் பார்த்துக்கொண்டு

  இருந்தன.

 



















வாங்கி கொண்டு சென்றிடுவாள்.  கடையின் காமெராக்களும்
 

திங்கள், 28 ஜூலை, 2014

அந்தரங்கம்



                                                                 அந்தரங்கம்

திருமணம் முடிந்து ஒரு வருடம் நெருங்கிற்று.  சுரேஷுக்கு அவசரம்.  

அன்று இரவு சுமதியிடம் இன்னிக்காவது காட்டுவாயா, இல்லையா? , 

என்னஅவசரம்? பொறு சுரேஷ் .   ஏமாற்றாதே சுமதி என்றான்.  அருகில் 

சென்று  ஓர் முத்தம். இன்னிக்கு இது போதும்.  நாளை காட்றேன். மறுநாள் 

இரவு சுமதி கதவை  மூடினாள்.  மிக நெருக்கமாக அமர்ந்தாள்,  திறந்து 

காட்டினாள் அவர்களின், திருமண புகைப்படங்களை. அன்று அவர்களின் 

திருமணநாள்..


ரா. பார்த்தசாரதி

ஈமெயில் காதல்




                                                          ஈ-​மெயில் காதல்

     சுமதியும், சுரேஷும்  ஒரே தெருவில் வசிப்பவர்கள் இருவரும் . வெவ்வேறு 
    
     கல்லூரி . அவர்களின்  சந்திப்பே பஸ்சில்தான். தினம்   இருவருமே 

    ஈமெயில் மூலமே தொடர்பு கொண்டு, அவர்களுடைய  சந்தேகங்களை

     தீர்த்துக்கொள்வர்.   நாளடைவில் ஈமெயில் நட்பே காதலில் முடிந்தது. 
    .
     சுரேஷ் படிப்பை முடித்து அயல்நாட்டு வங்கியில்  சேர்ந்தான்.
     
      அவன்   சம்மதம் பெற அன்புடன் அனுப்பிய வார்த்தைகள். 
 
   Ennodu-Mattum Anbudan Iniya   Life-ல்
   
    இணைவாயா ! 
-------------------------------------------------------------------------------


   ரா. பார்த்தசாரதி
        


                 
                
            .

சனி, 26 ஜூலை, 2014

பைத்தியத்திற்கு சிபாரிசு


                                            

          
                                                     பைத்தியத்திற்கு சிபாரிசு

          ரவி ரயில் டிக்கெட்டுக்காக  நின்றவன், . பத்து நிமிடம் ஆகியும்
          நகரவில்லை. முதலில் நின்றவன், பைத்தியம்  டிக்கெட் கொடு,
          என்று பல  தடவை கேட்டும் அவர் மறுத்தார்..

          ரவியும், நின்றிருந்தவர்களும்  கிளார்க்கை அறிவில்லாதவன்,
          முட்டாள் என  கூறினார்கள் கிளார்க்  கோபத்துடன்  வெளியே வந்து,
          முதலில் நின்றவனை  பார்த்து  கிண்டியில் நின்றுகொண்டு, 
          கிண்டிக்கு டிக்கெட் கேட்பது  முட்டாள்தனமாக இல்ல  ?
          முட்டாள், நான் அல்ல  நீங்கதான்.என்றதும்,  திட்டியவர்கள்
          வாய்யடைத்து நின்றனர்.
.   


           ரா. பார்த்தசாரதி
             
           

             


திங்கள், 21 ஜூலை, 2014

ஒரு தாயின் தவிப்பு






                                                    ஒரு தாயின் தவிப்பு

நீ அயல்நாடு  சென்றாய் ! கடந்தன இருபது வருடங்கள் !

நான் வளர்த்தேன், வீட்டின் பின்புறம் தென்னை, வாழை !
இன்று அவைகள் உயர்ந்து  வளர்ந்து விட்டது !
இவைகள் என் பசியையும்,  தாகத்தையும்   தணிக்கிறது!

தினமும் இன்டர்நெட் மையத்திற்கு செல்வேன் !
உன்னை ஸ்கைப்பில் காண ! உன் இரு வரி ஈமெயில்தான் பார்க்கமுடிந்தது !
பல நாள் ஈமெயில் தகவல் இல்லாமல் திரும்பியுள்ளேன் !
மனமும், உள்ளமும் சோர்ந்து  தவிக்கின்றேன் !

என்று உன்னை ஸ்கைப்பில்  காண்பேனோ 1
உன் நிலமைகண்டு நான் தவிக்கின்றேன்,
ஏனோ, நீ அடிமைப்பட்டு அங்கே தவிக்கின்றாய் !
நான் பச்சை தென்னை ஓலையில்  படுக்கும் முன்னே,
என் உடம்பை  ஈக்கள் மொய்க்கும்  முன்னே,
உனது  ஈமெயில், ஸ்கைப்பும் எனது உடலைக் காட்டும்மா !
நான் தெரிந்துகொண்டது, பணம் எட்டிப்பார்க்கும்,
பாசம், உறவு  இவைகள்  தொலைவில் நிற்கும் !



ரா.பார்த்தசாரதி

சனி, 19 ஜூலை, 2014

நினைக்கத் தெரியாத மனமே



                                                 நினைக்கத் தெரியாத  மனமே 

ராகவன் மும்பையில் உள்ள பெரிய நிறுவனத்தின் பொது மேலாளர் .
அவருக்கும் அவர் பிள்ளைக்கும், வலது கையில் ஆறு விரல். அது 
அவருக்கு அதிர்ஷ்டமாகவே எல்லாம் நடந்தது.  அவர் பிள்ளை முரளி  இவர்க்கு நேர்மார் ஊதாரி, ஒரே பிள்ளையாக இருந்ததால்,அவன் அம்மா 
நிர்மலா அவனுக்கு செல்லம் கொடுத்து, கணவனுக்கு தெரியாமல் பணம் 
கொடுத்து அவனை கெடுத்தாள்.  ஒரு ராகவன் கோபமாக பேச யாருக்கும்   சொல்லாமல், கொள்ளாமல்  வீட்டை விட்டு வெளியேறி சென்னைக்கு வந்தான் .ஒரு கம்பெனியில் காப்பி, டி  சப்பிளையராக மூன்று வருடங்களாக வேலை செய்து கொண்டு .  மும்பையில் தன்னால் கைவிடப்பட்ட வடநாட்டு பெண்ணிற்கும், தன் மகனிற்கும் மாதம் ஒரு சிறுதொகை அனுப்புவான்.அம்மாவிடம் ரொம்ப பாசம்.  அவளை நினைக்காத நாள் இல்லை.வீட்டிற்கு நாள் கிழமை கூட செல்வதில்லை

வருடா வருடம் ஐய்யப்பன் கோவிலுக்கு மட்டும் போய்வருவான். ஒரு நாள் ராகவன் சென்னையில் உள்ள தன் கம்பெனியில் இன்ஸ்பெக்ஷன் வந்தார்.  கூடவே மேனேஜர். சற்று டீ , காப்பி தாடியுடன் முரளி வருவதை அறிந்து, இந்தாப்பா இங்கே வா சாருக்கு ஒரு காப்பி கொடு என்றார் .  ராகவனுக்கு கொடுக்கும் போது கை நடுங்கி அவர்காலில் கொட்டிவிட்டான் .  உடனே தன் கைகுட்டையால் துடைக்கும் போது ராகவன் ஆறாவது விரலை பார்த்துவிட்டார்.   உடன் இருந்த மேனேஜர் அவனை முட்டாள் முரளி என்று   திட்டி, அன்றைக்கே வேலையை விட்டு. போகச் சொன்னார்.

ராகவன் அவனுக்கு தாடி இருந்ததால் அவனை அடையாளம் தெரியவில்லை. மேனேஜர் அவன் பெயரை வைத்து திட்டியதால்.  
ராகவன் தீர்மானித்தார் தன் மகன் என்று.

ராகவன் அந்த மேனேஜரை  பார்த்து நல்ல டெஷிஷன் எடுத்திங்க.
 பிறகு ராகவன் தனிமையில் கூட்டு கம்பெனிக்கு வெளியே நிற்கச் 
சொன்னார்.  அவனை காரில் ஏற்றிக்கொண்டு வழியில் காரை ஒரு
ஹோட்டலுக்கு போகச் சொன்னார் .ரூமிற்கு சென்றதும் அவனை 
அருகில் அழைத்தார்.  அவன் அவர் காலில்  விழ்ந்து மன்னிப்பு கேட்டான் .
அப்பா உங்களுக்கு காப்பி கொடுக்கும் போதே உங்க விரலை 
பார்த்தேன்.   ராகவனும் , நானும் நீ என் காலை துடைக்கும்போதே 
பார்த்துவிட்டேன்.

அன்று இரவே அவனை மும்பைக்கு அழைத்து சென்றார்.  அப்பா,
அம்மா எப்படி இருக்க என்றான். நீயே வந்து பார் என்றார் மனதில் 
துக்கத்தை வெளிபடுத்தாமல்.  மும்பை சென்றதும் அம்மா என்று 
ஆசையுடன் உள்ளே நுழைந்தவன் அதிர்ச்சி அடைந்தான். அவள் 
படத்திற்கு மாலை போடப்பட்டு இருந்தது.  மிகவும் கண்கலகினான் .
கடைசி காலத்தில் என்னையும், உங்க அம்மாவையும், 
மதுமிதா தான்  கவனித்தாள். நானும் என் மகள் போல 
பார்த்துக்குறேன். அவள்   பையனும் நல்லா  படிக்கின்றான். நம்ம 
வீட்டில்   சின்ன, சின்ன வேலை செய்கின்றான் என்றார். மது, மது 
காப்பி கொண்டுவா என்று குரல் கொடுத்தார்.அவளை பார்த்ததும்
திடுக்கிடான்.  அவன் மனைவியே அங்கிருப்பதை கண்டு. அப்பா 
மன்னித்து விடுங்க. இவள் உங்க மகள் இல்ல, மருமகள் என்றான்.
முரளியும் என் மனம் ஒரு நாள் கூட நினைக்க தெரியாமல் இருந்து 
விட்டதே.  எல்லாம் ஐய்யப்பன் அருள் என்று மனதில் நினைத்து 
கொண்டான்.

 
 

வெள்ளி, 18 ஜூலை, 2014

ஆசையே அலைபோலே

   
                                           



                                            ஆசையே அலைபோலே
                                               

                                              சின்ன, சின்ன  ஆசை 
                                              மனதில் சிலிர்த்தெழும் ஆசை,
                                              ஆசையில் சின்னது பெரியது என்ற அளவில்லை 
                                              ஆசையை அடைவதற்கு அருகதையும்   தேவையில்லை

                                              ஆளுக்கோர்   ஆசை மனதில் வைத்தான் 
                                              அதற்கோர்  எல்லை வைத்தான் 
                                              அளவு மீறும்போது  நீராசையாய் முடித்தான்.
                                              அதற்கோ பேராசை என்ற  பெயரும்  வைத்தான்.
                                       


                                              புத்தனுக்கும்  ஓர்  ஆசை,
                                              ஆசையை  விட வேண்டுமென்ற ஆசை,
                                              கடல் அலைபோல் ஆசை 
                                              நெஞ்சினிலே  ஓர்  ஓசை !

                                               கை  அளவு  இதயம் வைத்தான் 
                                               கடல் அளவு ஆசை வைத்தான் 
                                               மண் மேல்  துரியோதனனுக்கு  ஆசை வைத்தான் 
                                               பெண் மேல் இராவணன்   ஆசை வைத்தான் 

                                               இரு ஆசைகளின் எழுச்சியே இரு புராணமே 
                                               ராமாயணம்,மகாபாரதம் எனும் புராணமே 
                                               முற்றும்  தூறந்த   முனிவர் 
                                               விஷ்வாமித்திரரையும்   விட்டதா ஆசை !

                                               ஆசையே  துன்பத்திற்கு காரணம் 
                                                அனுபவத்திற்கும் ஓர்  ஆதாரம் ,
                                                நல்லது, கெட்டதிற்கு அதுவே காரணம்,  
                                                மனிதன் மனதினிலே ஆசை ஓர் தோரணம் !

                                                    ரா.பார்த்தசாரதி






சனி, 12 ஜூலை, 2014

மாறிய ஜென்மங்கள்



                                                   மாறிய  ஜென்மங்கள்

கமலாவும், சாரதியும் அந்த முதியவர் இல்லத்திற்கு வந்து இரு வருடங்கள்
ஓடிவிட்டது . இருவரும் வேலை யில் இருந்து ஓய்வு பெற்றவர்கள்

சாரதி ஓய்வு பெற்று,  கிராமபுரத்தில் இருந்த ஒரு க்ரௌண்டை விற்று
அந்த பணத்தை வங்கியில் போட்டு அதில் வரும் வட்டியில் அந்த முதியோர்
இல்லத்தில் மாத வாடகை கொடுத்துவிட்டு காலம் தள்ளினர் . சிட்கோ நகரில்
உள்ள சொந்த வீட்டை வாடகைக்கு விட்டு அந்த பணத்தை, இதர செலவிற்கு
வைத்து கொண்டார் .

சாரதிக்கும், கமலாவிற்கும், ஒரு பெண் , ஒரு மகன் .  இருவரும் வெளி
நாட்டில் வேலை.  தூர இருந்தால் கண்ணுக்கு குளிர்ச்சி, பக்கத்தில் இருந்தால்
செடியும் பகை. இதனை யாவரும் அறிந்ததே.  சில் வருடங்களுக்கு முன்
தான் செய்ததை நினைத்து பார்த்தான்.  இரு குழந்தைகளிடத்தில் மாறாத
அன்பும், சனி, ஞாயிறு அவர்களை, பீச், பார்க், பெண்ணை, பாட்டு கிளாஸ் ,
பையனை ஓவிய வகுப்பு, என்றும் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப
படிக்க வைத்து, பெண்ணிற்கு நல்ல இடத்தில திருமணம் நடந்து அவளுக்கு
ஓர்  ஆண் குழந்தை மூன்று வயதில். பேரன் பெயர் கேஷவ். இரண்டு வயதில்
கார்த்திக்கின் பெண் குழந்தை அனுஷா .

என்னடா ? இவ்வளவு தூரம் படிக்கவைத்து பிள்ளைகளிடம்மிருந்து ஒதுங்கி
வாழக்  காரணம்  என்ன?

வருடத்திற்கு ஒரு முறையாவது போய்வந்த கமலாவும், சாரதியும் ,
அவர் மகன் காத்திக், மகள் பிரியா. இருவரும் இரு கண்கள் . அதிலும் கமலா
பாசத்திற்கு அடிமையானவள் .  சாரதி என்றும் தாமரை இலை தண்ணீர்
மாதிரி. மகனுக்கு வரன் பார்க்கும்போது ஏற்பட்ட சண்டை. அவர்களை விலக்கியே வைத்து விட்டது.  தனக்கு நல்ல மருமகள் வரவேண்டும் என்று
எந்த தாயும் விரும்புவாள் .

 பாரத் மேற்றிமொனியில், பதிவு செய்து வரன்களை தானே முடிவு செய்வதாகவும், அப்பா, அம்மா இருவரும்
புகைப்படத்தையும் , ஜாதகத்தையும்  பார்க்க  அனுமதித்தாலும், பதில் அனுப்ப
தானே முடுவு கொண்டான்.ஒரு நாள் அவனுக்கு தெரியாமல் ஒரு வரனுக்கு
புகைப்படமும், ஜாதகமும், அனுப்ப சொல்லி பதில் அனுப்பினான் . இதை கம்ப்பி யுடரில் அறிந்து மிகுந்த கோபத்துடன் தந்தை என்றும் பாராமல் அவமரியாதை செய்தான்.  மன்னிப்பு கேட்டும் உன் அப்பாவை நீ பேசியது தவறு   என்று கூறிய தாயையும் கேட்க கூடாத கேள்விகளை கேட்டான்.
கடைசி வரை அவன் தவறை உணரவில்லை.மன்னிக்கவும் இல்லை.

பிறகு இருவரும், மகள் பிரியா வீட்டில் இரண்டு மாதங்கள் தங்கிவிடு  பின் தாயகம் (இந்தியாவிற்கு) திரும்பினார்கள்.

இதற்க் கிடையில் ப்ரியாவும் மற்றவர்களும், அறிவுரை கூற நிதானமாக
சிந்தித்து தன் தவறை உணர்ந்தான் . அவன் நிச்சியதார்த்தம் அமெரிக்காவிலே
அப்பா அம்மா வருகை இல்லாமல் நடந்து, திருமணம் மட்டும் சென்னையில்
நடக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அவன் கைபிடித்த சுமதி மிக அழகாக இருந்தால்,  பண்பாடு, கலாச்சாரம் அறிந்து அமெரிக்க வரும்படி அழைத்தாள் .
திருமணத்திற்கு முன் நடந்தவை ஒன்றும் அவளுக்குத் தெரியாது.

இரண்டு வருடங்கள் சென்றன. சுமதி கருவுற்றாள்.  வளைகாப்பு, சீமந்தம்
எதற்குமே, தன் மாமியார், மாமனார், கூப்பிடும் வராததை கண்டு அதிர்ச்சி
அடைந்தாள்.  தன்  அப்பா, அம்மா, உத்தியோகத்திற்கு செல்வதால், ஏதோ
ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் தான் தன்னுடன் இருக்கமுடியும். தன்
நாத்தனருக்கும் இதே நிலைமைதான்.  குழந்தையை சீசேரியன் செய்து
எடுத்தார்கள். உதவிக்கு அம்மா, அக்கா, நாத்தனார் ஒரு மாதத்திற்கு அருகில்
இருந்து உதவினர். ப்ரியாவை ஏர்போர்டில் காரில் கொண்டு விடும்போது
எனக்கு அம்மா, அப்பா பிரசவத்தின் போது  ஆறு மாதம் கூட இருந்தா.
உனக்கு என்றால் ஓடி வந்து செய்வா. எனக்கு செய்ய மாட்டா. நான் பணம்
அனுப்புவதற்குதன் பிள்ளை.     அப்படி எல்லாம் பேசாதே.  நீ அனுப்பிய பணத்தை  உன் மகன் மேல் டெப்பாசிட் செய்ய சொல்லி என்னிடமே
அனுப்பிடா. நான்தான் ஒரு மாதம் விட்டு ஒரு முறை அவர்கள் பேங்க்குக்கு
பணம் அனுப்புகின்றேன் .உன் குழந்தயை கிரீச் அனுப்பி கஷ்டபடுகிறாய் !
அதிலும் உன்னை மாதிரியே உன் மகள் அழகாக இருக்கிறாள்.

 அப்பா இப்போது ஒரு சீனியர் சிடிசன் ஆஷ்ரமத்தில் வேலை செய்துகொண்டே, அங்கேயே தங்க ஏற்பாடு செய்து இருக்கிறார்கள். அம்மாவும் பக்கத்தில் உள்ள குழந்தை காப்பகத்தில் வேலை செய்கிறாள்.
நீ செய்த தப்பை என்றைகாவது  உணர்ந்தாயா !  இல்லை உனக்கு மன்னிக்கும்
குணம்தான் இருக்கா. இதையெல்லாம் பின்னால் அமர்ந்த சுமதி கேட்டு கொண்டு இருந்தாள்.

நம்ம அப்பா, அம்மா மாதிரி யாருக்கும் கிடைக்காது ! அப்பா நமக்கு ஸ்கூல்
போகும் டிரெஸ்ஸை அயன் பண்ணி, வண்டி வரவில்லை என்றால் நம்மை
கொண்டுவிட்டு, என் படிப்பிற்காக தன் தம்பிகளிடம் பணம் கேட்டு, பாட்டு கிளாஸ், உன்னை கிரிக்கெட் , டிராயிங் கிளாஸ் கொண்டுவிட்டு அழைத்து வந்து பின் பள்ளிகூடத்தில் விண்ணப்பதிற்காக விடியற்காலையில் நின்று
இவ்வளுவும் பண்ணின அப்பாவை உன்னால் எப்படி ஏத்துக்க முடியவில்லை.
அவருக்கு உரிய மரியாதையை நீ கொடுக்கவில்லை. அதனால்தான் இருவருமே உனக்கு செய்வதற்கு தயங்குகிறார்கள். நீ இங்கு  வருவதற்கு
காரணமே அ ப்பத்தான். பாங்கில் கடன்வாங்கி உன்னை முதலில் இங்கு
அனுப்பி படிக்கவச்சி இன்று நீ சம்பாதித்து கடனை நீயே அடைத்தாலும் ,
பிள்ளையார் சுழி போட்டது அப்பாதானே !  இன்னிக்கி நாம் நன்னா இருக்கோம் என்றால் அதற்கு அப்பா அம்மா தான் காரணம். The integrity of man is to be measured by the conduct and character and not by their profession. இந்த வார்த்தயை அப்பா அடிக்கடிசொல்வா.


சுமதி, ப்ரியா அக்கா நான் அடுத்த மாதம் என் அத்தை மகன் கல்யாணத்திற்கு
இன்வைட்  பண்ணிருக்கா இவரையும் அழைச்சுண்டு போகபோறேன் . திருமணம், எந்த தேதி ,எந்த இடம்? அத்தைமகன் பெயர், வேலை போன்றவற்றை விவரித்தாள்.  என் கல்யாணத்திற்கு வரமுடியாதவங்க என்னை கூப்பிட்டால் போய்விட்டு வருவேன் என்றாள்.

மறுநாள் பிரியா சுமதிக்கு போன் பண்ணி தான் பத்திரமாக வந்து சேர்ந்ததை
சொன்னாள் .  சுமதி உன் அத்தை பெயர் கொண்ட திருமண பத்திரிகை எங்களுக்கும் வந்திருக்கு.  என் கணவனின் மாமா பெண்தான் நல்லதா போச்சு.
நானும் இவரும் உடனே சென்னை வருவதற்கு ஏற்பாடு செய்து, உங்களுக்கும் டிக்கெட் புக் செய்யவா? இதை கார்த்திகை கேட்டு எனக்கு சொல்லு ஓ கே பை .
செல்லை மூடிவிட்டாள்.   ப்ரியாவிற்கு அம்மா அப்பாவை பார்க்க ஆசைபட்டாள் . தன் மூன்று வயது கேஷவை காண்பிக்க ஆசை பட்டாள்.
அவள் அம்மா ஒரு வயது வரைக்கும் அவனை வளர்த்தாள்.

இருபது நாட்கள் கடந்தன. சென்னைக்கு பேக்கிங் செய்ய சுமதிக்கு கார்த்திக்கும்  உதவி செய்தான்.  தன்னுடையதையும் எடுத்து வைத்தான்.
இருவரும், ஏர்போர்டில் சந்தித்து கொண்டார்கள். பிரியா எனக்கு எப்படியாவது
இவருடைய அப்பா அம்மாவை அழைதுவரவெண்டும். என்ன செய்யலாம்.
நேற்று இரவே அவரிடம் கேட்டேன் . அது முடியாத காரியம் . நான் வரமாட்டன்.

விமானத்தில், ப்ரியாவும், சுமதியும் பக்கத்து , பக்கத்து சீட் . ஏனென்றால் ,
குழந்தை இருப்பதால். மறுநாள் விமானம் சென்னையை காலை அஞ்சு மணிக்கு  அடைந்தது. எப்படியும் மூன்று நாள் ஜெட்லாக், நான்கு நாள்
ரெஸ்ட் , மூன்று நா ட்களுக்கு,நண்பர்கள் , உறவினர்கள் விருந்து, ஆக
பத்து நாட்கள் முடிந்துவிடும்.  கடைசி நாள் அப்பா, அம்மாவை பார்பதற்கு
சுமதியும், பிரியாவும் காலையில் கால் டாக்ஸி பிடித்து அஷ்ராமத்தை
அடைந்தார்கள் .சாரதிக்கு ஒரு பக்கம் கோபம், மறுபக்கம் எரிச்சல்.
செகிரிடிக்கு போன் செய்து, அவர்களை,பார்க்க விருப்பும் இல்லை என்று
சொல்லி அனுப்பிவிடு என்றார்.  உடனே கமலாவை பார்த்து, உனக்கு வேண்டுமானால் பிள்ளை, பேரன் பார்க்க வேண்டும் என்றால் நீ பொய்
பார்த்து வா.  என்னை கூப்பிடாதே. கமலாவும், அரை மனதுடன் கேட்டை
நெருங்கினாள்.  அம்மா என்று ப்ரியாவும் சுமதியும் ஓடிவந்தார்கள்.
அப்பா எங்கே? என்றால் பிரியா?. அவர் இங்கு வர மறுத்துவிட்டார் .
அப்பாவை பார்க்காமல் நானும் சுமதியும் இங்கிருந்து நகர மாட்டோம் !
செக்கியூரிடியும்  மூன்று தடவை சாரதி போன் செய்து, சார் உங்க மகளும்
மருமகளும் போக மாட்டேன் என்று   பிடிவாதம் பிடிகிறாங்க தயவு
செய்து வந்து எட்டி பார்த்துவிட்டு போங்க சார்.  தலை எழுத்தே என்று கேட்டிற்கு வந்தார்.  வரமுடியாது என சொல்ல வாய் எடுத்தார். உடனே
பேரன் கேஷவ், தாதா, தாதா என்று ஓடி வந்ததும், பின்னாடியே பேத்தி
ஓடி வந்து காலை கட்டிக்கொண்டு, இரண்டும் தூக்கு,தூக்கு என்று கையை
உயர்த்தியது.  கமலாவும் பேதியை எடுத்து கொஞ்சினால்.  இருவருமே
குழந்தயை கொஞ்சிவதிலே இருந்தார்களே தவிர, பெண்ணையும், மருமகளையும் கவனிக்கவே இல்லை. திடிர் என்று அவர் மாப்பிளை
அப்பா நானும் உங்க மகனும் இரண்டு மணி நேரம் ஹால் வெயிட் பண்றோம்
எங்களை நீங்க இருவருமே கண்டுகொள்ளவே இல்லை. மருமகளும், அவர் ப்ரியாவிடம் பார்த்தியா என் பொன்னும் உன் பையனும், எப்படி ஓட்டுகிறார்கள் ,இதுதான் சுமதி, ப்ளட் இஸ் திக்கர் தான் வாட்டர்.
கார்த்திக்  அப்பா உன்னை மன்னிக்க எனக்கு அருகதை இல்லை. என்னை நீங்க தான் மன்னிக்கணும். எப்போ இருண்டு பெரும் யு.எஸ் வருவிங்க . நான் டிக்கெட் வாங்கட்டுமா . சுமதியும் அம்மா உங்க பேதிக்காவது எங்ககூட
வந்து இருங்கள்.   எல்லாம் அவரை கேளு.  சாரதி   தூரத்து பச்சை, கண்ணனுக்கு குளிர்ச்சி,.எங்களுக்கு  இங்கேயே வசதியாய் இருக்கிறது.. நாங்க இங்கேயே இருந்துவிடுகிறோம். பிரியா அழுது விட்டாள்.  தம்பி பண்ணின தப்பிற்கு என்ன தண்டிகின்றாய். அம்மா நீ இல்லாமல் நகரமாட்டாள்
தப்பிற்கு என்ன தண்டிகின்றாய். அம்மா நீ இல்லாமல் நகரமாட்டாள்! கமலாவின் மீது பார்வையை செலுத்தினார் .  அவள் முகம் பேரன், பேத்தியின்
பக்கமே இருந்தது.  நான் வரவில்லை.  அம்மா வந்தா அழைச்சிண்டு  போ.
கமலாவிற்கு போகலாமா என்று கேட்க, நாம் வேண்டுமென்றால்பேரன். பேத்திகளை விமான நிலையம் வரை வழி அனுப்ப செல்வோமே.விடுதியில்
பெர்மிஷன் வாங்கி விட்டு அவர்கள் காரிலேயே கிளம்பினார்கள். வழி நெடுக
பேரன், பேதி பற்றிதான் பேச்சு. இவ்வளவு ஆசை வச்சிண்டு வர மறுக்க
காரணம் என்ன என்று தெரிந்தும் கேட்டாள். பட்டமரம் ஒட்டுவதில்லை, சுட்ட
மண் ஒட்டுவதில்லை. இது தெரியாதமா ! அந்த அளவிற்கு கார்த்திக் அவர்கள்
மனதை புண்படுத்தி  இருக்கிறான்.பிரியாவும், சுமதியும்,குழந்தைகளுக்கு பால்
வாங்க சென்றார்கள், இவர்களிடம் பேரனையும், பேதியையும் விட்டு,விட்டு .
இருவரும் குழந்தைகளின் மழலை பேச்சில் மயங்கினார்கள். பேத்தியின் சிரிப்பும், பேரனின் ஆங்கிலத்தில்  தன்னையே மறந்தார்கள். ஆயிரம் துக்கங்கள் குழந்தை பேச்சில் அமிழும் என்பது உண்மை. பால் வாங்கிய பின்
பிரியவும், சுமதியும் குழந்தயை இவர்களிடமிருந்து பிடுங்கும் போது, தாதா,
கம்பா பாட்டி என்று பேரன் அலறலும், பேத்தியின் அழுகையும், அவர்களை
அழுத்தியது. வைத்தகண் வாங்காமல் பார்த்துகொண்டு இருந்தார்கள்.
மாப்பிளையும், மகனும், இம்மிக்கிரேஷன் முடித்து விடை பெற வந்தார்கள்.
கார்த்திக் அப்பா நான் வரடும்மா, வரடும்மா என்றான். டேய் , கார்த்திக் எனக்கும் உங்க அம்மாவிற்கும் விசாவும், டிக்கெட்டும் ஏற்பாடு செய் என்றார்.
கார்த்திக் ஓடி வந்து அப்பா அம்மாவையும் கட்டிக்கொண்டு அழுதான்.
நீங்க இல்லாம எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா?  ரொம்ப தேங்க்ஸ் அப்பா.

வாழ்க்கையின் உண்மையான  சந்தோஷம், தாய்,தந்தையிடம் பார்த்த  பாசமா,
மகனிடமும், மகளிடமும், உணர்ந்த அன்பா ,  அண்ணன், தம்பி,தங்கைகள்  
இடையே உள்ள பந்த பாசமா,  இது எந்த ரகம் என்று புரிந்துகொள்ள முடியாமல் நம்மை மகிழ்ச்சிக் கடலில் மூழ்கடிக்கும் நம் பேரன்,பேத்திகளின்
கள்ளமற்ற சிரிப்பா  

நம் பேரன், பேத்திகளின், கள்ளமற்ற சிரிப்பா !  இவர்களின் நினைவு
கொண்டு மற்றவர்கள் செய்யும் தவறினை மன்னித்து   ஏற்றுக்கொள்ளும்
மனித நேயமா, எல்லோரையும் அரவனைத்துதான் செல்லவேண்டுமா?
நீங்களே பதில் கூறுங்கள் .

ரா.பார்த்தசாரதி



   








           

வெள்ளி, 11 ஜூலை, 2014

Human Life



                                         Human Life

          Happiness and Sorrow  as waves on the Sea

          We all Sailing on  the  above,

           It is Stumbling as Yacht on the Sea,

           Good and Bad never we forsee

          Times and Tide never wait and See,

           Ups and down in our Life of Sea,

           In the World of Unstability, we expect Stability,

           We sail on the boat of faith, with Reliability.


          Raa.Parthasarathy

          

CHERRY BLOSSOM

                     

                                      CHERRY BLOSSOM

            The Spring open its gate of Castle !

            Flowers blossomed with different colors of dazzle !

            Wears on his smiling face and a dream of spring,

            All nature's gife but the mankind makes the rift !

            Men may come and men may go,

            But the Cherry Blossoms comes on forever !


           The Cherry blossom display for our wish !

            It cherish in main and our thoughts are flourish

           Men may come and men may go,

           But the Cherry Blossoms comes on forever !

 

           From the Air and Peak, if we look down the pathway,

            It seems to be like a planted nosegay

            Men may come and men may go,

            But the Cherry Blossoms comes on forever !

          

            Raa.Parthasarathy

     

                                          The spring open its gate of Castle !

                                                              

 

                  




                                                  
            


திங்கள், 7 ஜூலை, 2014

சந்தேகம்

                              


                                         சந்தேகம்


காலை ஆறு மணி .  டேப் ரெகார்டில்  சுப்ரபாதம்  ஒலித்துக் கொண்டிருந்தது .
விஜயா  சுட சுட காப்பியை கொண்டுவந்து நீட்டினாள்.  டீப்பா மேலே வச்சிடு போ என்றான் சிவா.

சிவா எப்பொழுதும் காலையில் . எழுந்த உடனே  அன்றைய வேலைகளை
டைரியில் மார்க் பண்ணி ஒரு முறை பார்த்துகொள்வான்.  ஆபீசில் அவனை
ஆல்ரௌண்டெர்  என்று பெயர்.  பொது சேவையுளும் அவனுக்கு ஈடுபாடு
உண்டு.    சாலைகளில் மர நடு விழா. குழந்தைகளுக்கு போலியோ சொட்டு
மருந்து,  ப்ளட்  ஏற்பாடு ஓபன் ஹார்ட் சர்ஜெரிக்காக  மற்றும் பல.   வீட்டை விட  அவன் வெளியில் சுற்றுவதே அதிகம்.

விஜயாவிற்கு அவனிடம் பிடித்தது அவனது பொறுமை. எந்த
வீஷ்ஷையத்திலும், நியாயத்தை எடுத்து சொல்பவன். அப்படி பட்ட
சிலவற்றை ஏன் மறைக்கின்றான்.  ஒரு பெண் , ஒரு மகன் என்ற நிறைவான
குடும்பம். சனி, ஞாயிறில் வெளியே தன்னையும், குழந்தைகளையும், கூட்டி
செல்வது  வழக்கம். அவனுக்கு நாற்பது வயதானாலும், நரைக்காத தலைமயிர் முப்பதாகவே மதிப்பிட தோன்றும். அந்த அளவிற்கு உணவு கட்டுப்பாடு யோகா செய்தும்  உடம்பை  கட்டுடன் வைத்திருந்தான்.  எந்த பெண்ணும்
அவன் பேச்சிற்கு வயப்படும். சில சமயம் பொறமை படுவார்கள் . இதை
விஜயா காதுபட சொன்னவர்களும் உண்டு.

விஜயாதான் அவன் துணிகளையும், குழந்தைகள் டிரெஸ்ஸையும்    வாஷின் மெஷினில், போட்டு துவைப்பாள். போடும் முன் பேண்ட் பாக்கெட்டில், எதாவது இருகிறதா என்று செக் பண்ணிவிட்டுதான்  போடுவாள்.

அன்று ஞாயிறு கிழமை.  எல்லோர்க்கும் ஓர் சோம்பேறித்தனம் வரும்.
அவன் நன்றாக தூங்கி கொண்டிருந்தான். அவன் செல்லில் இருந்து ஒரு வாய்ஸ் மெயில்.  பல தடவை சிவாவே செல்லை எடுக்கச் சொல்வான். 
ஏதாவது  அவசர காலாக இருந்தால்தான்.  அதை மனதில் வைத்துக் கொண்டு எடுத்தாள்.   நீங்க இல்லை என்றால் நான் இல்லை.  நான்தான் உஷா. நீங்க என்னை கண்டிப்பாக மீட் பண்ணனும் .இன்று இவ்வினிங்க் நான்கு மணிக்கு.
என்று வாய்ஸ் மெயிலில் ரெகார்ட் ஆகி இருந்தது.

சிவா எழுந்தவுடன்  நிதானமாக, தன் செல்லில் உள்ள ரிசிவிங் நெம்பர்களை
செக் பண்ணும் போது , உஷா அனுப்பிய வாய்ஸ் மெய்ளை பார்த்ததும்
விஜயாவிடம் , எனக்கு இரண்டு, மூன்று ப்ரோக்ராம் இருக்கு. எப்படியும்
இவ்வெனிங்க்  வந்து உங்களை அழைத்து செல்கிறேன் என்று அவள் பதிலுக்கு கூட காத்திராமல் கிளம்பினான். 

இவ்வினிங்  லேட்டா வந்தான்.  ஆறு மணிக்கு வந்தவன் எல்லோரையும்
அவசர படுத்தி வூட்லண்ட் ஹோட்டலில் குழந்தைகளுக்கு வேண்டியதை
வாங்கி கொடுத்தான்.  விஜயா வேண்டா வெறுப்பாக அவனிடம் நடந்து
கொண்டாள் .    சிவாவிற்கு ஒன்றும் புரியவில்லை. அன்று இரவு அவளை
செல்லமாக கட்டியணைக்க முற்பட்டான் . என்றும் விலக்காதவள், சீ
கையை கொண்டு வராதிங்க . நீங்களும் சராசரி ஆம்பளை  என்பதை நிருபிக்
கிறங்க . சிவாவும் இன்று அம்மாவிற்கு மூடு சரியில்லை என நினைத்து
தூங்கலானான் . அவனுக்குத் தெரியாது அவள் உஷாவை நினைத்து பழி
வாங்குகிறாள் என்று.

மறுநாள், விஜயா , அவன் துணிகளை  வாஷின் மெஷினில்,போடும்போது
அவன் பேண்டில் ஒரு வண்டி டோக்கன், கூடவே ஒரு பேப்பர் இருந்தது.
அவன் ஆபீஸ்க்கு போன பின் பிரித்து படித்து பார்த்தாள். அதில், ஜீவன்
ப்ளட் பேன்க் - அதில் உஷா  - அப்போலோ ஹாஸ் பிட்டல் இருதய
மாற்று  அறுவை சிக்கிச்சை - ப்ளட் அரெஞ்சமென்ட் அண்ட்   பை  சிவா.
என்று எழுதிருந்தது .  

 அன்று மாலை வந்ததும் என்னங்க உங்களுக்கு பிடித்த பூரி மசாலா செய்து
வச்சி இருக்கேன் .  குழந்தைகள் சாப்பிடாச்சு.  நீங்க வாங்க என்று பக்கத்தில்
இருந்து கனிவுடன் அவனை பார்த்துகொண்டே பரிமாறினாள். விஜயா நான்
சொல்ல மறந்தேன் நான். நேற்று  உஷா என்ற முப்பது வயது பெண்ணிற்கு
நான் ஓபன் ஹார்ட் சர்ஜெரிக்காக பிளட் ஏற்பாடு செய்தேன் அந்த பெண்
நேற்று டிஸ்சார்ஜ் ஆனாள்.  அவளுக்கும் நம்ப மாதிரி இரண்டு குழந்தைகலள்.
பணக்கார வீட்டு பெண் .  என்னை பாராட்டி அவள் தந்தைக்கும் , கணவருக்கும்
அறிமுகம் செய்தாள்.  அவள் கணவன் உடனே   எனக்கு பத்தாயிரம் ரூபாய்
கொடுத்தார்.  அதை அவரிடம் கொடுத்துவிட்டு சார் இதை நான் ஒரு சேவையாக செய்கின்றேன்.  இது எல்லாம் வேண்டாம் சொல்லி கொடுத்து
விட்டேன் .  இதோபார் விஜயா நாம் செய்ற நல்லது எல்லாம் நம் பிள்ளைகளுக்கு நன்மை கொடுக்கும் என்றான்.   சிவாவின் நியாயம்,  அவள் மனதில் அவன் உயர்ந்தான், அவள் பெருமை அடைந்தாள் .  அன்று இரவு சிவா நேற்றுதான்  முரண்டு பண்ணின, இன்னிகாவது, என்று கெஞ்சும்
 பார்வையை புரிந்துகொண்டு அதற்குள்  உங்க இஷ்டம் என்றாள் .  சிவாவும்  ஆனந்தமாக அவளை கட்டியணத்தான்.  
------------------------------------------------------------------------------------------------------
 

ரா. பார்த்தசாரதி

சனி, 28 ஜூன், 2014

தந்தையர் தின விழா

                                                       

                                                             தந்தையர்  தின விழா

                            எந்தையும்,  தாயும் மகிழ்ந்து குலாவிய  நாடு ,
                            அன்னையும், பிதாவும் முன்னெறி தெய்வம் என்ற நாடு ,
                            தாயை  விட  சிறந்த  கோவில்  இல்லை,
                            தந்தை  சொல்மிக்க  மந்திரம்  இல்லை !

                            தாயிடம்  அன்பும்,  தந்தையிடம்  அறிவும்,
                            அவர்களால்  கல்விமானாய் உலகில் திகழவும்,
                            பணம் ஒன்றினால்  பாகுபடுத்த  தெரிந்தவனாய்,
                            ஏன்  பாசத்தை மட்டும் காட்ட   தயங்குகின்றாய் !

                            அன்று அவர்கள்  கொடுத்த   முகவரிதான்,
                            இன்று  உன்னை  அடையாளம் காட்டுகின்றதே,
                            பழையதை  மறந்து, புதியதில் என்றும் திளைக்காதே,
                            வந்த வழினையும், பாதையினையும் என்றும் மறக்காதே!

                            தந்தையே  உன்  பிறப்பிற்கு   காரணம் ,
                            தந்தையே  உன்  அறிவிற்க்கு  ஆதாரம்,
                            பணம்  என்றும்   எட்டிப்  பார்க்கும்,
                            பாசம்  என்றும்  பக்கத்தில் நிற்கும் !

                            வாழ்கை முழதும்  குடும்பத்தின்  தூணாய் , 
                            உன் ஆண்மைக்கும், அறிவுக்கும் தூண்டுகோலாய்,
                            உலாவி   வரும்  தந்தையே   இடிதாங்கி,
                            ஏன் எனில்  நல்லது  கெட்டதெல்லாம் அவர்மேலே!

                            தந்தைக்கும், தாய்க்கும்  ஊன்று கோலாய்  இருந்திடு ,
                            அவர்களே  கண்கண்ட  தெய்வமென  நினைத்திடு,
                            தரணியில்  என்றும்    சிறந்து  விளங்கிடு,
                            எல்லோர்க்கும்   நல்லவனாய்  என்றும் திகழ்ந்திடு !  

                           ரா.பார்த்தசாரதி