சனி, 16 ஆகஸ்ட், 2014

மனிதனே சற்றே நினைத்துப்பார்



                          மனிதனே சற்றே  நினைத்துப்பார்.

எல்லாவற்றிற்கும்  காரணம் ஆசை என்று அறிந்தே
நம் கைவிட்டு போகும்  நாணயமில்லாத நாணயங்கள் ! 

பேராசையால் கைதவறிய வாய்ப்புக்கள்
நம்மை  பார்த்து தொலைவில் இருந்தபடி நகைக்கின்றது ! 

மனதை கல்லாக்கி கைக்கு எட்டியதை
வாய்க்கு எட்டாததை கண்டு ஏமாந்த போது
வறட்டு கவுரத்திற்காக விலக்கி  வைத்தால்
புரிந்ததும், புரியாததும் சேர்ந்து
தொலைந்துபோன காலகட்டத்தில் !

பெருமைக்காக  நட்புகொண்டு, கைகுலுக்கி ,
அவசியங்களுடன், அத்தியாவசியங்களும்
இழக்கம் பொழுது ,ஏற்பட்ட  இழப்பின் வலிகள் !

மூட நம்பிக்கையுடன்  ஜாதி,மத விழுதுகளை நம்பி,
பகுத்தறிவு வேர்களை புறந்தள்ளியதால்
அவனியில் சிக்கித் தவிக்கும் மனிதம்! 

கிடைத்ததை கொண்டு திருப்தி கொள்ளாமல்
கடந்ததை எண்ணி வருந்துவதால் எக்ககாரணம்மின்றி
கரைந்துபோகும் மனிதம்.!

எண்ணுபவர் - விழிப்பர்
விழிப்பவர் - உழைப்பர்
உழைப்பவர் - உயர்வர்
உயர்வோர்க்கே இவ்வுலகம்!

இவையாவும் உய்வோர்க்கு
புரிதல் எப்போது;
மனிதமும், மனிதநேயமும் உயர்வதெப்போது?


ரா.பார்த்தசாரதி .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக