செவ்வாய், 14 அக்டோபர், 2014

வந்தாள் மகாலக்ஷ்மியே




                                               வந்தாள் மகாலக்ஷ்மியே

வந்தாள்  மகாலக்ஷ்மியே , என்றும் அவள் ஆட்சியே,
பெண்ணின் பெருமை அறிந்திட வேண்டும் அவனியிலே 
மாதராய் பிறப்பதற்கு  மாதவம் செய்திட வேண்டுமே 
பெண்ணை  குடும்பத்தின் சக்தியாய் கருத வேண்டுமே!

நவராத்திரி விழா நாம் கொண்டாடுவதே பெண்ணிற்கே
பெண்  குழந்தைகளை தெய்வமாய் கருதிடும் நவராத்திரி 
பெண் பிறந்தாலே,  பெருமை  என  மனதில் எண்ணிடுங்கள்
பெண்  குழந்தைகளை பாரபட்சம்மின்றி  வளர்த்திடுங்கள்!

பெண் குழந்தைகளை அன்புடனும்,அரவணைத்தும்  வளர்த்திடுங்கள் 
அவர்களின் உணர்விக்கும், சிந்தனைக்கும் மதிப்பு அளியுங்கள்,
பண்பு, பணிவு, நல்லொழுக்கம்,உழைப்பு, போன்ற நன்னெறிகளை 
மனதினில் வேருன்ற வைத்து, வளர்ப்பதே தாய் தந்தையரின் கடமை!

அடுப்பூதும் பெண்ணிற்கு   படிப்பு எதற்கு என எண்ணாதீர் 
கல்வியே பெண்ணின் முன்னேற்றத்தின் வெற்றிப்பாதை
அகிலத்தில் சமூக  சிந்தனையுடன் இருக்க முயற்சி செய்யுங்கள்
கல்வியே பெண்ணின் வாழ்க்கைக்கு பாதுகாப்பென நினையுங்கள் !

பெண் குழந்தைகள் சிறந்தவர்கள் ஆவது தாய்தந்தையின் வளர்ப்பினிலே 
வாழ்கையில், நன்னெறிகளை மேற்கொள்ள அவர்களுக்கு வழிகாட்டுங்கள் 
பெண்கள் அழகுப் பதுமைகள் அல்ல, அவர்கள் அறிவின்  ஜோதிகள் 
பெண்ணின் பெருமையை வள்ளுவன் வழிகொண்டு நடத்துவோம் !


ரா.பார்த்தசாரதி




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக