உணவே மருந்து, மருந்தே உணவு
அரிதரிது மானிடராய் பிறத்தல் அரிது,
நல்ல உணவினை உட்கொள்வதும் அரிது
பழமை மறந்து, மேலைநாட்டு புதுமை பழக்கம்
நாகரிக முன்னேற்றத்தால் ஏற்பட்ட மயக்கம் !
மேலை நாட்டு துரித உணவு பழக்கம் வளர்ந்ததே
நமது உடல்நலம் கெடுவது இன்று தெரிந்ததே
கீரை, களி, கூழ் இவை எல்லாம் மறந்து போச்சே
பிட்சா, பர்கர் என்பதே இன்றைய உணவாச்சே!
உணவை அளிக்கும் உழவனை என்றும் மறவாதே
உணவே மருந்தாய், அளவாய் கடைபிடித்தல் நல்லதே
உடல் ஏற்றமுற நாம் கைகொள்வோமே இயற்கை உணவு
இதுவே நமது உடல் ஏற்றம் பெற சிறந்த உணவு !
அன்று வீட்டு வேலைகள், வயலில் நடவு செய்தும் உழைத்தார்கள்
அன்று பசித்து புசித்தார்கள், இன்று, பசிக்காக ஏதோ புசிக்கிறார்கள்
உடற்பயிற்சிகள் குறைந்ததால் உடலில் சதைகள் வளர்ந்ததே,
இதனை குறைக்க உடற்பயிற்சிக் கூடங்கள் இன்று அதிகமானதே !
இன்று நோய்க்கு காரணம் பாதுகாப்பற்ற உணவு பழக்கமே
என்றும் இதனை கட்டுபடுத்த முயல்வது நமது திண்ணமே
உண்டி சிறுத்தல் என்றும் உடலுக்கு அழகு
கலப்புணவு, கீரைகள், பழங்கள் உண்ணப் பழகு !
மனிதனே, பாரம்பரிய உணவினை மேற்கொள்
தினமும் உடற்பயிற்சி செய்ய கற்றுக்கொள்
சரிவிகித உணவினை தினமும் எடுத்துக்கொள்
உணவே மருந்து, மருந்தே உணவு எனப் புரிந்துகொள் !
ரா.பார்த்தசாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக