கீதையின் நாயகனே
கண்ணா நீ சிறைச்சாலையில் பிறந்தாய்
தந்தையால் யமுனையை கடந்தாய்
கோகுலத்தில் யசோதையிடம் வளர்ந்தாய்
பாலகனாய் இருந்து பல லீலைகள்நடத்தினாய் !
உன்னை நாடி வந்த ஆய்ச்சியர்களை கவர்ந்தாய்
உன்னை கொல்ல வந்த அசுரர்களை கொன்றாய்
தீமை செய்த காளிங்கன் மேல் நடனம் புரிந்தாய்
வெண்ணை திருடும் கள்வனாய் திரிந்தாய் !
இந்திரனின் கர்வத்தை அடக்கி ஆயர் குலத்தினை காத்தாய் !
அவர்களுக்காக மலையையே குடையாகப் பிடித்தாய் !
கிருஷ்ண, பலராமனாக, அக்குரருடன் சென்று கம்சனை வதைத்ததாய் !
பெற்றவளையும் , வளர்த்தவளையும் வணங்கி நின்றாய்!
பண்டவர்களுக்காக அஸ்தினாபுரத்திற்கு தூதுவனாய் சென்றாய் !
துரியோதனனுக்கும் மற்றவர்களுக்கும் அறிவுரை கூறினாய் !
போரே முடிவானதும் பாண்டவர் பக்கம் துணை இருந்தாய் !
போரில் கீதை எனும் வேதத்தை அர்ச்சுனனுக்கு உபதேசித்தாய் !
தர்மத்தினால் பாண்டவர்களை போரில் வெற்றி பெற செய்தாய் !
அதர்மத்தை அழிக்கவே அவதாரம் எடுத்தாய் என்பதை நீயே அறிவாய்!
ஆக்கலும், அழித்தலும் உன் அவதாரத்தினால் நடதிடச் செய்தாய் !
ஜடவரதன் அம்பு பட்டு யாரும் அறியாமல் விண்ணுலகம் சென்றாய்.!
ரா.பார்த்தசாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக