ஆசையே அலைபோலே
சின்ன, சின்ன ஆசை
ஆசையில் சின்னது பெரியது என்ற அளவில்லை
ஆசையை அடைவதற்கு அருகதையும் தேவையில்லை
ஆளுக்கோர் ஆசை மனதில் வைத்தான்
அதற்கோர் எல்லை வைத்தான்
அளவு மீறும்போது நீராசையாய் முடித்தான்.
அதற்கோ பேராசை என்ற பெயரும் வைத்தான்.
கை அளவு இதயம் வைத்தான்
மண் மேல் துரியோதனனுக்கு ஆசை வைத்தான்
பெண் மேல் இராவணன் ஆசை வைத்தான்
இரு ஆசைகளின் எழுச்சியே இரு புராணமே
ராமாயணம்,மகாபாரதம் எனும் புராணமே
முற்றும் தூறந்த முனிவர்
விஷ்வாமித்திரரையும் விட்டதா ஆசை !
ஆசையே துன்பத்திற்கு காரணம்
அனுபவத்திற்கும் ஓர் ஆதாரம் ,
நல்லது, கெட்டதிற்கு அதுவே காரணம்,
மனிதன் மனதினிலே ஆசை ஓர் தோரணம் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக