வெள்ளி, 31 டிசம்பர், 2021



                              புத்தாண்டே  வருக  2022

கதிரவன் குணதிசையில் பன்முகமாய்  உதித்தான் ,
புலரும் புத்தாண்டை புதிதாய் உருவமெடுதான் 1


பூமியெங்கும்  அமைதியே ஆட்சியாக அமையாத புத்தாண்டே ,
மண்ணில் விழும் மழைத்துளியும், விண்ணில் வீசும் காற்றும் 
யாவருக்கும்  பொதுதானே புத்தாண்டே !

நதியால் இணைந்த  மாநில மக்கள் 
அவலம் அழிந்து போகாதோ  புத்தாண்டே !

எவர் ஆட்சி செய்யவரினும் நல்ல எண்ணத்துடனே 
மக்களுக்கு நல்லதை செய்ய வேண்டும் புத்தாண்டே !


தீவிரவாதமும், லஞ்சமும், கருப்பு பணமும் ஒழியாதோ 
மக்கள் மனதில் நிம்மதி ஏற்படாதோ !

மக்களை அச்சுறுத்தும் நோய்கள் முடிவுக்கு வராதா 
அதனை தடுத்து நிறுத்த ஆவண செய்யாதா !

சுயநலங்கள்,  சூழ்ச்சிகள்  சுவடு தெரியாமல்
அவனியில்  அழிந்து போகாதோ  புத்தாண்டே !


நாட்டுக்கு நாடு, சமாதனம்  மட்டும் ,
தானமாய்   கிடைக்காதோ புத்தாண்டே !


ஆட்சியும்  அதிகாரமும் ஏழையின்
ஏக்கத்தை  தீர்காதோ  புத்தாண்டே !


சுயநலமற்ற ஆட்சியாளர்களும்,அரசியல்வாதிகளும் தோன்றமாட்டார்களா !
நாட்டிற்கு நன்மை ஏற்படுத்தமாட்டார்களா!

பூமியெங்கும் அமைதி மட்டும் 

ஆட்சி   புரியாதோ  புத்தாண்டே 

சனி, 18 டிசம்பர், 2021

ananya manjal neerattu vizha

 


                                                  அனன்யா மஞ்சள் நீராட்டு விழா 

                                                  நட்டு வாய்த்த  ரோஜா 
                                                  மொட்டு விட்டு சிரிக்குதம்மா 

                                                 மஞ்சள் நீரில் குளித்துவிட்டு ஒரு 
                                                தங்கச்சிலை   நனையுதம்மா !

                                                பட்டுச்சேலை   கட்டி  ஒரு 
                                               பட்டாம்பூச்சி  பறக்குதம்மா !

                                             வானத்து  நிலவு  இன்று 
                                             வையகம்  வந்தது போலே 

                                             குயிலின் குரலாய் உன் குரல் 
                                             என்றும் ஒலிக்குதம்மா 1

                                            பாவையருள்  ஒரு பூவையாக 
                                            பூமியில் பிறப்பெடுத்தாய் 

                                         . சிரித்தாள் முத்து உதிரும் 
                                          எங்கள் செல்வா மகளே ! 

                                        பொன்னாலே  நிறமெடுத்தாய் 
                                       பூவாலே  முகம் வடித்தாய் 

                                       தந்தையின்  சாயல் உள்ள 
                                      அதிஷ்டம் மிக்க  புதல்வியே 

                                       நீ, பல்லாயிரம் ஆண்டுகள் 
                                      பதினாறும் பெற்று பெரு வாழ 
                                       எங்கள் அன்பு ஆசீர்வாதங்கள் !

                                       ரா.பார்த்தசாரதி 


                                           

                                               
                                             
                                             
                                         
                      



 



      


  யேசுநாதர்  ஒரு தேவமைந்தன்


உங்கள் பாவங்களை எல்லாம்
நானே சுமக்கிறேன் என்றான்
மனிதகுலத்தின் மாபெரும்
பெருந்தகையாளன் தேவமைந்தன்
முள்ளில் ஓர் கிரிடம்
முதுகிலோர் சிலுவை அறைந்து
உண்மையை மெளனிக்க வைக்க
உன்மத்தர் செய்த சித்திரவதைகள்
றியாமல் செய்கின்றார் மூடர்
ஆண்டவரே அவரை மன்னித்து விடும்
அன்பின் புதல்வன் அன்போடு வேண்டினான்
அண்டசராசரத்தின் ஆண்டவனிடத்தே
தம்மைத் தாமே அறிந்திட வேண்டித்
தன்னைத் தானே மெழுகாய் உருக்கிய
தனியொரு தேவ மைந்தன்
தவப்புதல்வனாய் மண்ணில் உதித்திட்டான்
நல்லதோ மக்களாய் நாளும் வாழ்ந்து
நன்மைபல புரிந்திட்டே வையகத்தில்
வேதநாயகன் இயேசு உரைத்திட்ட
அருள்மொழிகளை உள்ளத்தே நிறுத்திட்டு
நத்தார் புனிததினமதில் அனைவரும்
நலமாய் வாழ்ந்திட அன்பு வாழ்த்துக்கள்
அனைத்து அன்பு உள்ளங்களுக்கும்
புனித நத்தார் வாழ்த்துக்கள் ஆயிரம்!

ரா.பார்த்தசாரதி

புதன், 15 டிசம்பர், 2021

 


                                                                   என் தங்கை ஜெயஸ்ரீ 

                                   மலர்களைப்போல்  தங்கை சிரிப்புடன் ஊஞ்சலாடுகிறாள் 
                                   இரு அன்னான் இடையே அமர்ந்து பெருமை கொள்கிறாள் 
                                   கலைந்திடும்\ கனவுகள் அவள் காண்பாள் 
                                   கற்பனைத்  தேரில்  அவள் மிதந்திடுவாள் 

                                   அன்பு மகன் ஜெயந்திற்கு திருமணம் நிச்சியம் செய்தாள் 
                                   குடும்ப  விளக்காய் காயத்ரி  வந்தாள் !
                                  மகனும், மருமகளும், மணிவிழாவை  இன்று இனிதே 
                                  தலைமை   ஏற்று  நடத்தினரே !
                                  உற்றாரும், உறவினரும் நன்மனத்துடன் வாழ்த்தினரே !     

                                ரா.பார்த்தசாரதி 

செவ்வாய், 14 டிசம்பர், 2021

 


                                   ஷஷ்டிப்பதாபூர்த்தி  வாழ்த்து மடல் 

     வண்டலூர்: சென்னை                                                             தேதி : 15 டிசம்பர் 2021

அகவை  அறுபதும், எழுபது மற்றும் எண்பதும்   சிறப்புடையதன்றோ 
தவப்புதல்வன் ஜெயந்த்தும்  மருமகன்  காயத்ரியும்  தலைமையேற்று 
நடத்துவதும் பெருமைக் குறியதன்றோ!


கல்யாணம் என்றாலே வைபோகமே,
வாரணமாயிரம்  பாடி வாழ்த்துவோமே 

தென்னக  ரயில்வேயில்  சிறப்புற பணிபுரிந்து  ஓய்வு பெற்றாய்
மகனுக்கும்  திருமண நிச்சியம் செய்துவிட்டாய் 

கண்ணின் அருகே இமை இருந்தும், கண்கள் இமையைப் பார்ப்பதில்லை 
கண்களை இமைகள் காப்பதுபோல், மனைவி, கணவனை விட்டு பிரிவதில்லை 

கணவன் என்றாலே  (கண் + அவன் ) என்பதாகும்.,
அவன் வழியே உலகை காண்பவள் மனைவியாகும் !

காலமும், கோலமும்   என்றும் உலகில்  மாறும்,.
கணவன்  மனைவி உறவே என்றும் நிலைத்து வாழும்.!

ஆயிரம் கைகள் நீட்டி மறைத்தாலும், ஆதவன் மறைவதில்லை,
ஆயிரம் உறவுகள் இருந்தாலும் மனைவி, கணவனை மறப்பதில்லை !

திருமதி ஒரு வெகுமதி என்று அழைப்பது வழக்கம் !
திருமதியின் பெயரோ ஜெயஸ்ரீ   என்று அழைப்பது பழக்கம்! !

கல்யாணம் என்றாலே உற்றார்,உறவினர்ககளின் ஆசிர்வாதமே,
அகிலத்தில் சிறந்தது , தாய், தந்தையின்  ஆசிர்வாதமே !

ஆறில்  என்றும் மூன்று  என்றும்  அடங்கும் 
ஜெயஸ்ரீ  என்ற பெயரும் விளங்கும்,

உற்றார், உறவினர்களும், பேரன்,பேத்திகளும் ஆசி பெறட்டும் 
வயதில் மூத்தவர்கள் தங்கள் ஆசியை நல்மனதுடன அளிக்கட்டும்! 

உற்றாரும், உறவினர்களும், ஒன்றுகூடி விருந்துண்போம் 
அவர்கள் வாழ்க்கை வளம் பெற  வாழ்த்துவோம் 

அன்பும்  அறனும் உடைத்தாயின் இல்வாழ்கை 
பண்பும் பயனும் அது.   என்பது  வள்ளுவன் வாக்கு 

Sattray Ninaithupaarungal




     சற்றே  நினைத்துப்பாருங்கள்  !
  1.               ஞானத்தை  வளர்த்துகொள்ளுங்கள் 
           அது    சக்தியின்       பிறப்பிடமாகும் !
  1.                கடவுளின்  அருளை  வேண்டுங்கள்
         அது பக்தியின்  இருப்பிடமாகும்  !
  1.                 தியானம்  செய்ய  விரும்புங்கள்
         அது  மனஅமைதியின்  உறைவிடமாகும் !
  1.                யோகாசனங்களை செய்ய  பழகுங்கள் 
       அது    உணர்சிகளை நிலைநிறுத்தும்  இடமாகும் ! 
  1.              நினைவாற்றலை வளர்த்துக்  கொள்ளுங்கள் 
      அது அறிவு எனும் ஊற்று தோன்றும்  இடமாகும்  !
  1.          உடற்பயிற்சியும்,  நடை பயிற்ச்சியும்   தினமும் கடைபிடியுங்கள்
  அது இளமையென்னும் ரகசியத்தை  ரசிக்கும் இடமாகும்  !
  1.              பிறர்க்கு நல்லதை  செய்ய  நினையுங்கள் 
      அது  உன்  புகழினை  பரப்பும்  இடமாகும்  !
  1.            நாணயமாக இருக்க  முயற்சி  செய்யுங்கள் ,
          அது  உன் நேர்மைக்கு இடமாகும்  !
  1.             வாழ்வில்  சேமிப்பை  கற்றுக்கொள்ளுங்கள் 
அது  எதிர்காலத்தில் நம்மை தாங்கும் தூணாகும்   !
  1.              சிரித்து      வாழ      கற்றுக்கொள்ளுங்கள் 
      அது  நோயினை நீக்கும்  மருந்தாகும்  !
                                      ஆம்,
வாய்விட்டு சிரித்தால்  நோய்விட்டு போகும் !
சிரிக்க தெரிந்தவனே, சிந்திக்க தெரிந்தவனாவான்  !!
                                       
                                                               ரா. பார்த்தசாரதி 

சனி, 11 டிசம்பர், 2021

therthal in India

                                      தேர்தலுக்க  போகமுன்  இந்தனை படிக்கவும் 
                 
               1          தேர்தல் :    
                        
                        வருகிறது  தேர்தல் !  தேர்தல் !
                         தயாராகுங்கள் ! மேட்ரோசோன் மக்களே ! 

                      ஊறுகாய் போட்ட  உறுதிமொழிகள் 
                     மாறுதல் பெற்று  வரப்போகிறது 
                     காணக்கிடைக்காத  வேட்பாளர்கள் 
                    கரை வேட்டியுடன் காட்சி தரப் போகிறார்கள் !!

           2        வாக்குச்சீட்டு :
                    \வாழ்வு  வழங்கும்  வலிமையுள்ள  வாக்குச்சீட்டினையே  
                   பிட்ச்சையிட்டு  பிச்சைக்காரனாகி விடுகிறோம் 

                                        குழந்தைகளின்  கையில் கத்தி  
                                       பைத்தியக்காரன் கையில் துப்பாக்கி 
                                      குடிகாரன்   கையில்  குழந்தை 
                                      இந்தியன் கையில் ஒட்டு !

 3      வாக்காளர்கள்        
           அட்சயப் பாத்திரத்தையே     
           பிட்சையிடும்  பாரி வள்ளல்கள் !

4.      தேர்தல் நாள் :

     ஆடுகளுக்கு வெட்டரிவால்  எடுக்கும் விழா 
    இந்த  ஆடுகளுக்கு  ஏக சந்தோசம் 
    உரிமை வந்து விட்டதாம் 
   தங்கள் கசாப்புக்கடைகளை 
  தாங்களே   தேர்ந்தெடுத்துக் கொள்ள 

5.  தேர்தலில் நிற்பவர் :

அன்று குனிந்து  வோட்டு  வாங்கியவர்கள் 
இன்று நிமிர்ந்து  பார்க்கவேண்டிய  நிலையில் ! 
இப்பொழுது   புரிகிறதா ! வாக்கு  என்பது 
இன்றைய  ஜனநாயகச்   சட்டத்தின் !
அடிமை சாசனம் !   தற்கொலை சின்னம் !   

ஜனநாயகத்தின்  கூசக்கூறல் 

பொய்களுக்கு   வாக்குறுதிகள் என்று 
புதிய பெயர்  சூட்டப்படும் 

மறந்துபோன  திட்டங்கள் 
அவசரமாய் ஞாபகம்  வரும் 

சின்ன மீனை போட்டு பெரிய மீனா 
      


                 

 

புதன், 8 டிசம்பர், 2021


                    அம்ருதா 50 வது பிறந்த நாள் வாழ்த்து மடல்

                    உமேஷின்  மனைவியாம்,  
                    பாசமும், நேசமும் கொண்டவளாம்               
                    திருமதி அம்ருதாவிற்கு இன்று ஐம்பதாவது 
                   பிறந்த  தினம் 

                   அம்ருதா  என்றாலே  அமிரதமா 
                    பாற்கடலில் கடைந்துதெடுத்த  அமிர்தமா 
                    அமிர்தவர்ஷினிலியும், கார்திகைலியும் கன மழை உண்டு 
                    அம்ருதா உமேஷுக்கு தவ புதல்வன் ஹரி எனும் மகன் உண்டு 
                     கணவன் என்றாலே  கண்+ அவன்  என்பதாகும் 
                     அவன் வழியே  உலகை காண்பவள் மனைவியாகும் !

                     அம்ருதாவிற்கு எங்கள் வாழ்த்தும் ஆசியும் 

                     கமலா / பார்த்தசாரதி 
                     
                   
                    
 

செவ்வாய், 7 டிசம்பர், 2021

amirtha pirantha naal madal

 


                                                       பிறந்தநாள் வாழ்த்து மடல் 
                                
                                            நீண்ட நாள்    நீடு   வாழ  வேண்டும் \      , 
                                           அன்பு வேண்டும்,  அறிவு  வேண்டும் 
                                           பண்பு வேண்டும், பரிவு வேண்டும்           
                                          பொறுமையும்,  நிதானத்தையும் 
                                           என்றும் கைக்கொள்ள  வேண்டும் 
                                           நன்மை செய்து  புண்ணியத்தை 
                                           என்றும்   சேர்க்கவேண்டும
                                          உறவையும், நட்பையும் பேணவேண்டும் 
                                          பாசமும், நேசத்தையும் வளர்த்திட வேண்டும் 
                                          பெரியோர் ஆசியும்,  அன்பையும் 
                                          என்றும்  பெறவேண்டும் 
                                          பல்லாண்டு வாழ்க  என 
                                          ஆசிர்வாதத்தை  அளிப்போம் 
                                          அமிர்தாவிற்கு எங்கள் 50th பிறந்த நாள் 
                                          வாழ்த்துக்கள்   ! ! ! ! 

                                          கமலா / பார்த்தசாரதி 
                                         

                                              
                                            
                                                                                      

bharathiye nee marupadium piranthu vaa

 


                             பாரதியே  நீ  மறுபடியும் பிறந்து வா 

                         முறுக்கு மீசை  முண்டாசு  கவிஞ்சனே
                         பல   மொழிகள்  தெரிந்த  கவிஞ்சன
                        \அகிலம் முழுதும் பைந்ந்தமிழ் மொழிந்தவனே 
                         வாழ்வும், வளமும்  எய்த்தும்படி  செய்தவனே!

                          உன் மந்திரச் சொல்லால் மயக்கம் தீர்த்து 
                         செந்தமிழ் தேர்பாகாணாய் எங்கள் மொழி காத்து 
                          சமூகம் தன்பால்  மாற்றத்தை விதைத்து 
                          மறுமலர்ச்சி பெற  நின் பாடலால் ஏற்றமளித்து ! 

                          பெண்ணின் சுதந்திரத்தை தட்டி  கேட்டவனே 
                          தமிழை  தீயாக தரணி முழுதும்  எரியவிட்டவனே 
                          பாமரனுக்கும், பாப்பாவிற்கும் பாட்டு எழுதியவனே 
                          நாட்டில் சுதந்திர பாடலால் எழுச்சி  செய்தவனே !

                          உன் கவிதையால்  சுதந்திர வேட்கையை தூண்டியவனே 
                          ஆணக்கு நிகர்  பெண் என சமத்துவத்தை சொன்னவனே 
                          சுதந்திர பாடலால்  மக்களை தட்டி  எழுப்பியவனே 
                          பார் போற்றும் பாரதியே ! நீ மறுபடியும்  பிறந்து வா.!

                           ரா.பார்த்தசாரதி 

                                                   

திங்கள், 6 டிசம்பர், 2021

Amrutha kavithai 50th birthday

 


 

                                              உமேஷின்  அன்பு  மனைவியாம் 
                                            பாசமும், நேசமும் கொண்டவளாம்  
                                             அமிர்தாவிற்கு  அகவை ஐம்பது  
                                              நிறைவடைந்து  இன்று பிறந்த நாள் 

                                            அமிர்தா  என்றால் அமிர்தம்  கிடைக்குமா 
                                            அட்மிர்தவர்ஷினி  என்றால் மழை வருமா 
                                             கார்த்திகையில்  கண மழை  உண்டு 
                                           அமிர்தாவிற்கு   ஹரி  என்ற மகனும் உண்டு 
                                            கணவன் என்றாலே  கண் - அவன் என்பதாகும் 
                                           அவன் வழியே  உலகை காண்பவள் மனைவியாகும் !

                                          அமிர்தவிற்கு எங்கள் மனமார்ந்த  ஆசிகள் !

                                            கமலா  / பார்த்தசாரதி 


ஞாயிறு, 5 டிசம்பர், 2021

Bharathi pattri kavithaikal

 




                                                  Bharathi pattri kavithaikal

தன் கோபத்தை
வார்த்தைகளில் புகுத்தி
எட்டுத்திக்கும்
எரிய விட்டான் பாரதி

அன்று முதல்
இன்று வரை
தீயாக மாறி அவன்
வார்த்தைகள் எல்லாம்
இரத்தம் கொதிக்கிறது

பெண்ணின் சுகந்திரத்தை
தட்டி கேட்டவனும் அவனே
தமிழை தீயாக தரணி எங்கும்
எரிய விட்டவனும் அவனே

பாரதி பாரதி பாரதி
என எங்கும் ஒளிக்கும்
அவன் வார்த்தைகளில்
இருக்கும் அர்த்தம்
இன்னும் இன்னும் வாழ வைக்கும்
வாழ்த்த வைக்கும்

ஞாயிறு, 14 நவம்பர், 2021

Kulandaikal dinam

      


                                                               குழந்தைகள்   தினம் 

                                  செடியில்  மலரும்  பூவும்  அழகு ழந்தைகள் 
                                  குழந்தைகளின்  மழலை   மிக அழகு
                                 குழந்தையும்,  தெய்வமும் குணதால் ஒன்று,
                                  குற்றங்களை   மறந்துவிடும் மனத்தால் ஒன்று !

                                 புன்சிரிப்பால்  நம்மை  மகிழ்விப்பதும்  ஒன்று
                                 குழந்தைகளிடத்தில்  நேரு மிக்க அன்பு கொண்டவரே
                                  தன பிறந்த தினத்தை  குழந்தைகள் தினமாக அறிவித்தார் 
                                  எல்லோரும் நேரு மாமா  என்றே  அழைத்தனரே !

                                ரா.பார்த்தசாரதி 
                                      
                                         

வியாழன், 11 நவம்பர், 2021

Bharathiye marupadium piranthu vaa.

 

  
                              பாரதியே மறுபடியும் பிறந்து  வா  

                  முறுக்கு மீசை  முண்டாசு  கவிஞ்சனே !
                  உன் பிறந்த நாளையும் போற்றி வணங்குவோம்  
               ` முழுதும்  பைந்தமிழ்  பொழிந்தவனே 
                வாழ்வும், வளமும் எய்த்தும் படி தட்ட  எழுப்பியவனே!   

                 உன்மந்திரச்  சொல்லால்   மயக்கம் தீர்த்து 
                 செந்தமிழ்  தேர்பாகனாய்  எங்கள் மொழி காத்து 
                 சமூகம் தன்னில்  மாற்றத்தை  விதைத்து    
                 மறுமலர்ச்சி  தந்து நின் பாடலால் ஏற்றமளித்து 

      ஒற்றுமை மேலோங்கி காண்பதே தமிழ் சமுதாயமாம்
      ஒருங்கிணைத்து நன்னெறிப்படுத்திய   தலைவனாம் 
    பொருந்து  தலைமை இல்லாமல் சிறுமையுற்று  சீர்கேடானதே 
    புன்மையகற்றி. பொலிவுசேர்த்திடும்  கவியே விரைந்தெழுக !   

    சங்கத்தமழனின் ஏற்றம் பெற பொற்காலமமானதே 
    பொங்கு   சினத்துடன்,  புததிபுகட்டிய கவிஞ்சனே வருக 
   தனிமனிதனுக்கு  உணவில்லையேல ஜகத்தை அழித்திடுவோம் 
   தன்மானம்  கெட்டவர்களுக்கு சட்டையடிக்கொடுத்திடுவோம்!  

   அயலார்  நம்மைகண்டு  ஏளனப் போக்கினை மாற்றிடுவோம்
    தன்மானத்துடனும்,   அடிமை நினைப்பை  அகற்றிடுவோம்    
    அரிமா நிகர்த்த ஆற்றலும்  துடிப்பும் கொண்ட கவிஞ்சனே!
   வெற்றிப்பாதைக்கு பேரிகை கொட்டடா என சொன்னவனே!

    பார் போற்றும்  தமிழ்   கவிஞ்சன்  இளமை கொண்ட பாரதியே 
    கவிதைகளால்  மக்களைக் கட்டிப்போட்ட  கவிஞ்சனே 
    தட்டி   எழுப்பும்  பாடல்களை செந்தமிழில்  வழங்கியவனே !
    பாரதியே மறுபடியும் பிறந்து வா,பார்  போற்றும் கவிஞ்சனே !

   
 
             
            
                                       

                            

    

வியாழன், 4 நவம்பர், 2021

 


                                            தித்திக்கும்  தீபாவளி 

                                          காத்திருந்து  வந்த விழா     
                                          காரிருள்  போக்கும் விழா 
                                         புத்தாடை   பளபளக்க 
                                          புது  வெடிகள் படபடக்க 

                                         தீயவைகளை   ஓட்டி 
                                         தித்திப்பை   தேடி 
                                         நல்லவர்கள்  கூடி 

புதன், 3 நவம்பர், 2021

 தித்திக்கும் தீபாவளி



மக்களுக்கு  மகிழ்ச்சியும், ஆனந்தமும்  நிறைந்த பண்டிகை,
எல்லோரும்,  ஒன்றுகூடி , மகிழ்ச்சியுடன்  கொண்டாடும் பண்டிகை
வாழ்த்துகளை, நாம் பகிர்ந்துகொள்ளும் தீபாவளி பண்டிகை ,
சந்தோஷமும் , உல்லாசமும் கலந்த தீபாவளி பண்டிகை!

விடியற்காலையில் எழுந்து  எண்ணெய் தேய்த்து குளித்து ,
மகிழ்வுடனே    புத்தாடை  உடுத்தி,   இனிப்பினை பகிர்ந்து,
பெரியவர்களிடம் வாழ்த்தும், நல்லாசியும் பெற்று
ஊர் எங்கும்  ஒன்றாய் கலந்து கொண்டாடும்  தீபாவளி!

நாட்டில் உள்ளவர்கள் பல விதமாய் கொண்டாடும் தீபாவளி 
வடக்கே விளக்கு பூஜை என் கொண்டாடும் தீபாவளி,
இல்லறத்தில் இனிப்பு கொண்டு கொண்டாடும் தீபாவளி,
புன்சிரிப்புடன், மன நிறைவாய்  , வாழ்த்து பெரும் தீபாவளி !

வெடியும், சரமும், மத்தாப்பும் கையில் ஏந்துவோமே 
Let's see the sound of the explosion and the chandelier scattering like a picture flower,
In the evening we will hold the wire
candle in  our hand and enjoy the scattering of conical wheel and puswanap flowers !

We are celebrating Diwali festival in honor of the monster 
in human form, we will plan to destroy the demons,
blind to accommodation, Retirement House and celvome 
they share sweets with Diwali kontatuvome sweetheart!


Ra.Parthasarathy

 


   

                                                       




ஞாயிறு, 17 அக்டோபர், 2021

Nikitaa ayushhomam

 


                                                      

                       நீக்கிட்டாவிற்கு   ஆயூஷ்ஹோமம் 

                மங்கையராய்  பிறப்பதற்கு மாதவம் செய்திடவேண்டும் 
                பெண்ணை  லக்ஷ்மிகடாக்ஷமாய் நினைத்திட வேண்டும் 
                குழந்தைகளின் உள்ளம் ,பளிங்கு போன்ற தூய  உள்ளம் 
                பாசமெனும் பூட்டைஅன்பபெனும் சாவியே திறக்கும் !

                 உடல் எனும் கூட்டிற்குள் இதயம் ஓர்  உயிரூ ,,
                 தொப்புள்கொடி உறவுக்குள் பாசம் ஓர் கயிறு 
                 குழந்தையின் முகத்திலும் , புன்சிரிப்பிலும் 
                  நம் கோடி  கஷ்டங்கள்   மறைந்தே  போகும் !          

                 ஒரு வயதில் காதுகுத்தி  ஆயுஷ் ஹோமம் நடைபெறுகின்றதே 
                 பாசத்திற்கும், நேசத்திற்கும்   என்றும் இடைவெளி இல்லை 
                 குழந்தையை  கட்டி  அணைப்பதில்தான் இன்பத்தின் எல்லை 
                 இதில் ஆண் என்ன,  பெண் என்ன, எல்லாம்  ஓரினம்தான் !
              
                 மந்திரங்கள் உபதேசித்து ஆயுஷ் ஹோமம் நடைபெறுமே 
                 பட்டாடை உடுத்தி  காது குத்தி , ஆயுஷ் ஹோமம் நடைபெறுமே 
                 நீக்கிட்டா  கடவுள் அருளால்  நீண்ட ஆயுள் பெற வாழ்த்துவோமே 
               
                நீகீட்ட  வந்து  அன்பு முத்தம் தா ( அப்பா,
        அம்மா,  தாதாக்கள்,பாட்டிகள்  
        மற்றும் மாமாவிற்கு .                           
        ரா.பார்த்தசாரதி (பெரிய தாத்தா )
                
                


சனி, 9 அக்டோபர், 2021






                                      நவராத்திரி  ஓர்  சுபராத்திரி 

                       நவ  நாயககிகளுக்கு   ஓர்  ராத்திரி 
                       நவ  சக்திகளை கொண்டாடும்  ராத்திரி 
                       பெண்களை  சக்தியாய்  போற்றும் ராத்திரி 
                      பொம்மைகளை வைத்து போற்றும்  நவராத்திரி  

                       மூப் ப்பெரும்தேவியர்கள்  பங்களிக்கும் ராத்திரி 
                       வல்லமை  தந்திடும்   மலைமகளை போற்றுவோம் 
                       நற்பொருள் தந்திடும் அலைமகளை  போற்றுவோம் 
                       கல்வி தந்திடும்  கலை மகளை  போற்றுவோம்!
                        
                       சர்வம்   சக்தி  மயம் எனப் போற்றும்  ராத்திரி
                       ஆண்களுக்கு   என்றும் ஓர்  சிவராத்திரி 
                       பெண்களுக்கு என்று கொண்டாடும் நவராத்திரி 
                       விஜயதசமியில் எண்ணங்கள் நிறைவேறும் ராத்திரி !

                       ரா.பார்த்தசாரதி