பாரதியே நீ மறுபடியும் பிறந்து வா
முறுக்கு மீசை முண்டாசு கவிஞ்சனே
பல மொழிகள் தெரிந்த கவிஞ்சன
\அகிலம் முழுதும் பைந்ந்தமிழ் மொழிந்தவனே
வாழ்வும், வளமும் எய்த்தும்படி செய்தவனே!
உன் மந்திரச் சொல்லால் மயக்கம் தீர்த்து
செந்தமிழ் தேர்பாகாணாய் எங்கள் மொழி காத்து
சமூகம் தன்பால் மாற்றத்தை விதைத்து
மறுமலர்ச்சி பெற நின் பாடலால் ஏற்றமளித்து !
பெண்ணின் சுதந்திரத்தை தட்டி கேட்டவனே
தமிழை தீயாக தரணி முழுதும் எரியவிட்டவனே
பாமரனுக்கும், பாப்பாவிற்கும் பாட்டு எழுதியவனே
நாட்டில் சுதந்திர பாடலால் எழுச்சி செய்தவனே !
உன் கவிதையால் சுதந்திர வேட்கையை தூண்டியவனே
ஆணக்கு நிகர் பெண் என சமத்துவத்தை சொன்னவனே
சுதந்திர பாடலால் மக்களை தட்டி எழுப்பியவனே
பார் போற்றும் பாரதியே ! நீ மறுபடியும் பிறந்து வா.!
ரா.பார்த்தசாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக