தேர்தலுக்க போகமுன் இந்தனை படிக்கவும்
1 தேர்தல் :
வருகிறது தேர்தல் ! தேர்தல் !
தயாராகுங்கள் ! மேட்ரோசோன் மக்களே !
ஊறுகாய் போட்ட உறுதிமொழிகள்
மாறுதல் பெற்று வரப்போகிறது
காணக்கிடைக்காத வேட்பாளர்கள்
கரை வேட்டியுடன் காட்சி தரப் போகிறார்கள் !!
2 வாக்குச்சீட்டு :
\வாழ்வு வழங்கும் வலிமையுள்ள வாக்குச்சீட்டினையே
பிட்ச்சையிட்டு பிச்சைக்காரனாகி விடுகிறோம்
குழந்தைகளின் கையில் கத்தி
பைத்தியக்காரன் கையில் துப்பாக்கி
குடிகாரன் கையில் குழந்தை
இந்தியன் கையில் ஒட்டு !
3 வாக்காளர்கள்
அட்சயப் பாத்திரத்தையே
பிட்சையிடும் பாரி வள்ளல்கள் !
4. தேர்தல் நாள் :
ஆடுகளுக்கு வெட்டரிவால் எடுக்கும் விழா
இந்த ஆடுகளுக்கு ஏக சந்தோசம்
உரிமை வந்து விட்டதாம்
தங்கள் கசாப்புக்கடைகளை
தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ள
5. தேர்தலில் நிற்பவர் :
அன்று குனிந்து வோட்டு வாங்கியவர்கள்
இன்று நிமிர்ந்து பார்க்கவேண்டிய நிலையில் !
இப்பொழுது புரிகிறதா ! வாக்கு என்பது
இன்றைய ஜனநாயகச் சட்டத்தின் !
அடிமை சாசனம் ! தற்கொலை சின்னம் !
ஜனநாயகத்தின் கூசக்கூறல்
பொய்களுக்கு வாக்குறுதிகள் என்று
புதிய பெயர் சூட்டப்படும்
மறந்துபோன திட்டங்கள்
அவசரமாய் ஞாபகம் வரும்
சின்ன மீனை போட்டு பெரிய மீனா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக