தித்திக்கும் தீபாவளி
காத்திருந்து வந்த விழா
காரிருள் போக்கும் விழா
புத்தாடை பளபளக்க
புது வெடிகள் படபடக்க
தீயவைகளை ஓட்டி
தித்திப்பை தேடி
நன்மனத்துடன் பாராட்டி
உள்ளங்கள் கூடி
உவகையில் ஆடி
சொந்தங்கள் நாடி
நண்பர்கள் தேடி
திசையெங்கும் திருநாளாம்
தீப ஒளித்திருநாளாம்
ஊரெங்கும் மகிழ்ந்து
உல்லாசம் கலந்து
மனமெங்கும் மகிழட்டும்
மத்தாப்பாய் சிரிக்கட்டும்
ரா.பார்த்தசாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக