அனன்யா மஞ்சள் நீராட்டு விழா
நட்டு வாய்த்த ரோஜா
மொட்டு விட்டு சிரிக்குதம்மா
மஞ்சள் நீரில் குளித்துவிட்டு ஒரு
தங்கச்சிலை நனையுதம்மா !
பட்டுச்சேலை கட்டி ஒரு
பட்டாம்பூச்சி பறக்குதம்மா !
வானத்து நிலவு இன்று
வையகம் வந்தது போலே
குயிலின் குரலாய் உன் குரல்
என்றும் ஒலிக்குதம்மா 1
பாவையருள் ஒரு பூவையாக
பூமியில் பிறப்பெடுத்தாய்
. சிரித்தாள் முத்து உதிரும்
எங்கள் செல்வா மகளே !
பொன்னாலே நிறமெடுத்தாய்
பூவாலே முகம் வடித்தாய்
தந்தையின் சாயல் உள்ள
அதிஷ்டம் மிக்க புதல்வியே
நீ, பல்லாயிரம் ஆண்டுகள்
பதினாறும் பெற்று பெரு வாழ
எங்கள் அன்பு ஆசீர்வாதங்கள் !
ரா.பார்த்தசாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக