வியாழன், 11 நவம்பர், 2021

Bharathiye marupadium piranthu vaa.

 

  
                              பாரதியே மறுபடியும் பிறந்து  வா  

                  முறுக்கு மீசை  முண்டாசு  கவிஞ்சனே !
                  உன் பிறந்த நாளையும் போற்றி வணங்குவோம்  
               ` முழுதும்  பைந்தமிழ்  பொழிந்தவனே 
                வாழ்வும், வளமும் எய்த்தும் படி தட்ட  எழுப்பியவனே!   

                 உன்மந்திரச்  சொல்லால்   மயக்கம் தீர்த்து 
                 செந்தமிழ்  தேர்பாகனாய்  எங்கள் மொழி காத்து 
                 சமூகம் தன்னில்  மாற்றத்தை  விதைத்து    
                 மறுமலர்ச்சி  தந்து நின் பாடலால் ஏற்றமளித்து 

      ஒற்றுமை மேலோங்கி காண்பதே தமிழ் சமுதாயமாம்
      ஒருங்கிணைத்து நன்னெறிப்படுத்திய   தலைவனாம் 
    பொருந்து  தலைமை இல்லாமல் சிறுமையுற்று  சீர்கேடானதே 
    புன்மையகற்றி. பொலிவுசேர்த்திடும்  கவியே விரைந்தெழுக !   

    சங்கத்தமழனின் ஏற்றம் பெற பொற்காலமமானதே 
    பொங்கு   சினத்துடன்,  புததிபுகட்டிய கவிஞ்சனே வருக 
   தனிமனிதனுக்கு  உணவில்லையேல ஜகத்தை அழித்திடுவோம் 
   தன்மானம்  கெட்டவர்களுக்கு சட்டையடிக்கொடுத்திடுவோம்!  

   அயலார்  நம்மைகண்டு  ஏளனப் போக்கினை மாற்றிடுவோம்
    தன்மானத்துடனும்,   அடிமை நினைப்பை  அகற்றிடுவோம்    
    அரிமா நிகர்த்த ஆற்றலும்  துடிப்பும் கொண்ட கவிஞ்சனே!
   வெற்றிப்பாதைக்கு பேரிகை கொட்டடா என சொன்னவனே!

    பார் போற்றும்  தமிழ்   கவிஞ்சன்  இளமை கொண்ட பாரதியே 
    கவிதைகளால்  மக்களைக் கட்டிப்போட்ட  கவிஞ்சனே 
    தட்டி   எழுப்பும்  பாடல்களை செந்தமிழில்  வழங்கியவனே !
    பாரதியே மறுபடியும் பிறந்து வா,பார்  போற்றும் கவிஞ்சனே !

   
 
             
            
                                       

                            

    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக